சமூகம்

இன்று மக்களின் சகல விதமான சீர்கேடுகளுக்கும் மார்க்கப்பணியை இந்தப் புரோகிதரர்கள் வருமானத்திற்குரிய வழியாக ஆக்கிக்கொண்டதே. எப்பொழுது ஒருவன் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்கிறானோ அவன் ஒரு போதும் நேர்வழியை – குர்ஆனிலும், ஹதீஸிலும் உள்ளதை உள்ளபடி சொல்லவே முடியாது. கோணல் வழிகளை மட்டுமே நேர்வழியாகப் போதிக்கவே முடியும். மண்ணறையை சந்திக்கும்வரை மனிதனுக்கிருக்கும் பொருளாசை, அந்தப் பொருளை அடைவதற்காக எல்லா பாதகங்களையும் செய்ய வைத்து விடுகிறது. பொருளாசையின் விபரீதங்கள்: பொருளாசை காரணமாக வியாபாரிகள் கலப்படங்கள் செய்கிறார்கள். டாக்டர்களை எடுத்துக்கொள்ளுங்கள் பொருளாசையால் […]

{ 0 comments }

இன்றைய இந்திய முஸ்லிம்களுக்கு மிக அவசியத் தேவை ஒற்றுமையாகும். அந்த ஒற்றுமைக்கு பங்கமாக இருப்பது முஸ்லிம்களின் தியாக உணர்வற்ற நிலையாகும். முஸ்லிம்களின் அரசியல் தலைவர்கள் தங்களின் அற்ப உலக சுகம் நாடி, பதவிகளுக்கும் பட்டங்களுக்கும் அடிமைபட்டு, தங்களுக்கு வழங்கப்படும் பெட்டிகளைக் குறியாகக்கொண்டு ஈமானை இழந்து விலை போகின்றனர். முஸ்லிம்களை சொர்க்கத்திற்கு வழி நடத்திச் செல்ல வேண்டிய மவ்லவிகளோ, மறுமையையும், அல்லாஹ்வையும், மறந்து மார்க்கத்தையே தங்களின் பிழைப்புக்குரிய வழியாக ஆக்கிக் கொண்டனர். அதனால் தங்களின் வயிற்றை நிறைக்க மார்க்கத்தை […]

{ 5 comments }

 சமூகத்தில் படர்ந்த அனாச்சார லீலைகள் பல. அவற்றுள் மிகக் கொடியது பாவகரமானது இஸ்லாத்தின் மூலக் கொள்கை ஏகத்துவத்தையே முறியடிக்கும் தன்மை கொண்டது  சமாதி வணக்கம். இந்த நிலை ஓரளவு மாறுதல் அடைந்துவிட்டால் பிற சில்லரை அனாச்சார அனுஸ்டானங்களெல்லாம் நாளடைவில் தாமாகவே விடுதலை பெற்றுவிடும் அதற்கு போறாட்டங்களும் கிளர்ச்சிகளும் தேவை இராது. சில்லரை அனாச்சாரங்கள் என்பது, சொறுகப்பட்டிருக்கும் மின்சார பல்புகள் போன்றவை. அவைகளை உடைத்து விடுவதால் பயனில்லை. வேறு பல்புகள் மாட்டிவிடப்படலாம். எரிவதற்கு இயங்க வைக்கும் இயந்திரம் வேறிடத்தில் இருக்கிறது. […]

{ 1 comment }

இறைவன் எந்த நோக்கத்திற்காக மனிதனைப் படைத்திருக்கிறானோ அந்த நோக்கம் நிறைவேற மனிதன் மனிதனாக வாழவேண்டும். அப்போதுதான் மனிதன் இவ்வுலகிலும் மறு உலகிலும் வெற்றிப் பாதையை அடையமுடியும். ஆயினும் மனிதன் அந்த வெற்றிப் பாதையில் நடைபோட ஷைத்தான் தடையாக இருக்கிறான். அவனது சபதம் எப்படியும் மனித வர்க்கத்தை எரியும் கொடும் நரகில் கொண்டு தள்ளுவதே. எந்த மனிதனின் காரணமாக தனக்கு நரக தண்டனை கிடைத்ததோ அந்த மனிதனையும் நரகத்தில் கொண்டு சேர்த்துவிட வேண்டும் என்று அல்லும் பகலும் அயராது […]

{ 0 comments }

இன்று மனித குலம் அழிவின் விளிம்பில் நிற்கிறது. மனித குலத்தைச் சீரழிவில் சிக்க வைக்கும் அனைத்துச் சீர்கேடுகளும் இன்று மனிதர்களிடம் நீக்கமறக் காணப்படுகின்றன. நான்கு கால் மிருகங்களிடம் காணப்படாத ஒழுக்கக் கேடுகள் இன்று இந்த இரண்டு கால் மிருகங்களிடம் காணப்படுகின்றன. மிருகங்களில் எந்த மிருக இனமாவது ஓரினப் புணர்ச்சியில் ஈடுபடுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அல்லது நீங்கள் கேள்விப்பட்டாவது இருக்கிறீர்களா? இருக்கவே முடியாது. ஐயறிவு மிருகங்களை விட இழி நிலை! ஐயறிவுள்ள மிருக இனங்களே செய்யத் துணியாத ஒரு […]

{ 0 comments }

இன்று முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் அதாவது தர்கா, தரீக்கா, மத்ஹபு இவற்றை சரிகண்டு மார்க்கத்திற்கு உட்பட்டதாக ஏற்று நடப்பவர்கள். அவர்கள் அல்குர்ஆன் அல்அஃராஃப் 7:55 இறைக் கட்டளைக்கு நேர்முரணாக தொழுகைகளுக்குப் பின்னரும், மற்றும் தங்களின் கூட்டு செயல்பாடுகளிலும், சப்தமிட்டு (துஆ) பிரார்த்தனையாக இருந்தாலும், கூட்டு(துஆ) பிரார்த்தனையாக இருந்தாலும் அவற்றை முடிக்கும் போது நபி(ஸல்) அவர்களின் பொருட்டால், ஷுஹதாக்களின் பொருட்டால், அவலியாக்களின் பொருட்டால் எங்களின் இந்த துஆவை ஏற்று அருள்புரிவாயாக யா அல்லாஹ் என்று தங்களின் பிரார்த்தனைகளை முடிக்கிறார்கள். அவர்களில், […]

{ 0 comments }

மக்களுக்குச் சேவை செய்வதாக, தொண்டு செய்வதாக நம்பிக் கொண்டு ஆளுக்கொரு இயக்கப் பெயரை வைத்துக் கொள்கிறார்கள். சிலர் அதை அரசில் பதிவு செய்து கொள்கிறார்கள். சிலர் பதிவு செய்யாமலும் செயல்படுகிறார்கள்.   உண்மையில் மக்களுக்கு ஏதாவதொரு உலகியல் பலனளிக்கும் செயல்களைச் செய்யவும் செய்கிறார்கள். அதனால் உலகில் பேர் புகழ் கிடைக்கவும் செய்யலாம். ஆனால் இதுவும் ஒரு மாயைதான் என்பதை அறியாமல் ஏமாறுகிறார்கள். ஷைத்தானின் மாய வலையில் வசமாகச் சிக்கிய அச்சகோதரர்கள் அவர்களின் கற்பனையில் உதிக்கும் ஓர் இயக்கப் […]

{ 6 comments }

அவன் சரியில்லை; இவன் சரியில்லை; இவுங்க சரியில்லை; அவர் சரியில்லை; என்று ஏராளமான தள்ளுபடிகளைச் செய்து நட்பு வட்டத்தையும் உறவு வட்டத்தையும் சுருக்கிக் கொண்டு, தங்கள் உலகத்தை மிகச் சிறியதாக ஆக்கிக் கொள்கிறவர்களைப் பார்க்கிறோம். இவர்களை நினைத்தால் எனக்குச் சிரிப்பாகவே வரும். குறைகள் இல்லாதவர் யார்? சகிக்க முடியாத குறைகள் உள்ளவரா? எல்லையோடு நட்பு வைத்துக் கொள்ளுங்கள். தாங்க முடியாத குறைகளா? விலகி நில்லுங்கள்; மாறாக, வெறுத்து ஒதுக்கி வெட்டிக் கொள்ளாதீர்கள். கடையில் தள்ளுபடி விலையில் ஒரு […]

{ 7 comments }

இஸ்லாம் முஸ்லிம்களை மட்டுமின்றி மற்ற மனிதர்களையும் ஒன்றினைக்கும் வாழ்க்கை நெறி! இறுதி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வாக்காலும், வாழ்வாலும் நடைமுறைச் சாத்தியமாக்கிக் காட்டிச் சென்றுள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்! இந்த செயற்கரிய சாதனை கடந்த 1000 ஆயிடம் வருடங்களாக மறக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் உலக முஸ்லிம்கள் பிரிவிலும் பிளவிலும் சிக்கித்தவிக்கிறார்கள்.     முஸ்லிம் நாடுகளிலுள்ள முஸ்லிம்கள் ஒன்றிணையும் சாத்தியக்கூறுகள் மிகுந்திருந்தும் அங்கும் அவர்கள் பிரிந்தே கிடக்கிறார்கள். மார்க்க ரீதியில் மத்ஹபுகள், தரீக்காக்கள் என்றும், இயக்கங்கள், அமைப்புகள் என்றும் அகில உலக அளவில் […]

{ 3 comments }

ஒன்றுபட்ட சமுதாயமாக வாழ்ந்து உலக மக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டிய முஸ்லிம்கள் மத்ஹபின் பெயராலும், தரீக்காக்களின் பெயராலும், அரசியல் கட்சிகளின் பெயராலும் பல பிரிவினர்களாகப் பிரிந்து சிதறிக் கிடப்பதை பார்க்கிறோம். தனித்தனிப் பெயரில் இவ்வாறு பல பிரிவுகளாகச் செயல்படுவதை அல்லாஹ் அனுமதித்துள்ளானா? அல்லது பிரிவுகளை தடை செய்துள்ளானா என்பதை குர்ஆனின் வாயிலாக அறிந்து அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு ஏற்ப நமது வாழ்வை அமைத்துக் கொண்டால் மட்டுமே இந்த உலகிலும், மறு உலகிலும் நாம் வெற்றியடைய முடியும். குர்ஆனின் தீர்ப்பு: […]

{ 5 comments }