உடல் நலம்

 உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர் பையில், சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கல் உருவாவது சகஜம். இந்தியாவில் 80 லட்சம் மக்கள் வரை, இந்த உபாதையால் பாதிக்கப்படுகின்றனர். ‘கிட்னி ஸ்டோன்’ என்பதால், அது சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று கருதக் கூடாது. சிறுநீரை வெளியேற்றக் கொண்டு செல்லும் பாதையில் ஏற்படலாம். சிறுநீரைத் தேக்கி வைக்கும் பையில் ஏற்படலாம். சிறுநீரை வெளியேற்றும் இறுதி உறுப்பில் ஏற்படலாம். மிகச்சிறிய கல்லாகவும் தோன்றலாம்; ஒரு எலுமிச்சை அளவுக்கும் ஏற்படலாம். […]

{ 5 comments }

நாம் உள்வாங்கும் மூச்சுக்காற்று, அருந்தும் தண்ணீர், உண்ணும் உணவு, தோலில் ஏற்படும் வெடிப்பு இப்படி அனைத்தின் வழியாகவும் நோயை விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், நுண் கிருமிகள் போன்றவை நமது உடலுக்குள் எப்போதும் நுழையத் தயாராகவே உள்ளன. ஆனால் இவை அனைத்தையும் நம் உடலுக்குள் நுழைய முடியாமல் தடுக்கும் அற்புத சக்தி ஒன்று நம் உடலுக்கு உள்ளது. அதனையே நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்கிறோம். எதிர்ப்பு சக்தி வகைகள்:நமது உடலில், இயற்கையான எதிர்ப்பு சக்தி (Innate Immunity), […]

{ 4 comments }

நம் உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.      வெள்ளைப் பூண்டு: பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து […]

{ 12 comments }

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த அவசர உலகில் Fast Foods எனப்படும் அவசர உணவுகளின் தேவைகள் அதிகரித்து விட்டன. அதற்கேற்றாற் போல் வீதிக்கு வீதி, முக்குக்குமுக்கு அவசர உணவு விடுதிகள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. பாரம்பரியமான உணவுகளை ஆற அமர ரசித்து ருசித்துச் சாப்பிடும் காலம் மெல்ல மெல்ல மலையேறி வருகிறது. இன்று அவசர உணவுகளை அள்ளி விழுங்கிவிட்டு ஓடும் அவல நிலையே எங்கும் நிலவுகிறது. குறிப்பாக குழந்தைகளை இந்த வகை உணவுகள் அதிகம் கவர்கின்றன. விளைவு – […]

{ 3 comments }

  கரிசலாங்கண்ணி   கரிசலாங்கண்ணி முக்கியமாக மருந்துக்குத்தான் அதிகப் பயன்படுத்தப்படுகிறது. கீரையாகவும் அதைப் பயன்படுத்தலாம். கரிப்பான், கரிசாலை, பொற்றிழைக்கரிப்பான் என்னும் வேறு பல பெயர்களும் இதற்கு உண்டு. கரிசல் என்றால் தங்கம் என்று ஒரு பொருள் உண்டு. இது உடலைத் தங்கம் போல ஆக்கும் என்னும் கருத்தில் இந்தக் கீரைக்கு கரிசலாங்கண்ணி என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. நெல் வயல்களிலும், வாய்க்கால் வரப்புகளிலும், ஏரிக்கரைகளிலும், ஈரப்பிடியுள்ள வேறு இடங்களிலும் கரிசலாங்கண்ணிக் கீரை வளர்ந்து கிடப்பதைக் காணலாம். […]

{ Comments on this entry are closed }

  புளியாரைக் கீரை அரைக்கீரை வகையைச் சேர்ந்த புளிப்புச் சுவையை உடைய இந்தக் கீரையில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. நன்கு பசியைத் தூண்டி, உடல் எடையை அதிகரிக்கும். உடலில் புது ரத்தம் ஊற வைக்கும். நாள்பட்ட நோய்களுக்கு நல்ல மருந்து இது. தலைவலி, தலைச்சுற்றல், காய்ச்சல், வாந்தி, மயக்கம், வாத நோய் ஆகியவற்றைக் குணப்படுத்தும். இந்தக் கீரையைத் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டால் அதிசயமான பலன்களைப் பெறலாம். குளிர்ச்சியான உடல் தன்மை கொண்டவர்கள் […]

{ Comments on this entry are closed }

  கொடிப் பசலைக் கீரை   கொடி வகையைச் சேர்ந்த இக்கீரை கொம்புகள், வேலிகளைச் சுற்றிப் படரும். இக்கீரை இனிப்புச் சுவை கொண்டது. தேகச் சூட்டைத் தணித்து உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். இக்கீரையை நன்றாக நசுக்கி, தலையில் வைத்துக் கட்டினால் உடலில் ஏற்படும் மிதமிஞ்சிய உஷ்ணத்தைப் போக்கும். இதன் இலைகளை நெருப்பிலிட்டு வதக்கி, வீக்கங்கள், கட்டிகள் ஆகியவற்றின் மீது வைத்து கட்டினால் விரைவில் குணம் கிட்டும். உடல் வறட்சியைப் போக்கும். நீர் தாகத்தைத் தணிக்கும். மலத்தை […]

{ 0 comments }

முள்ளங்கிக் கீரை முள்ளங்கி மண்ணுக்கு அடியில் தோன்றும் கிழங்கு ஆகும். அதன் மேல்பாகத்தில் வளரும் கீரையே முள்ளங்கிக் கீரை என்று அழைக்கப்படுகிறது. இக்கீரைக்கு மருத்துவக் குணங்கள் உண்டு என்றாலும் அடிக்கடி சேர்த்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் இக்கீரை வயிற்றில் புழுக்களை உண்டாக்கும். பித்தத்தையும் அதிகரிக்கும். வாய்வுத் தொல்லையை உண்டாக்கும். இருப்பினும் வெள்ளையால் வரும் நீர் அடைப்பிற்கு முள்ளங்கியைப் போலவே இக்கீரையும் பயன்படுகிறது. இக்கீரையின் தளிர்களைப் பறித்து, சோற்று உப்புடன் சேர்த்து தினமும் காலையும் மாலையும் உண்டு வந்தால் […]

{ Comments on this entry are closed }

பல ரக கேன்சர்கள் சத்தமே இல்லாமல் தாக்குவதுதான்..! அதனால் உடலில் ஏதாவது சின்ன மாறுதல் இருந்தால்கூட உடனே டாக்டரிடம் காட்டவேண்டும். என்கிறார் ப்ளட் கேன்சரைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் ராமனாதன். ஒரு விஷயம் தெரியுமா? மார்பகக் கேன்சர் ஒரு மார்பகத்திலிருந்து மற்றொரு மார்பகத்திற்கு பரவக்கூடிய வாய்ப்புகள் அதிகம். ஆகவே எவ்வளவு சீக்கிரம் கண்டறிய வாய்ப்புள்ளதோ, அந்தளவுக்கு குணமாகும் வாய்ப்பும் அதிகம். என்கிறார் டாக்டர். யாருக்கெல்லாம் மார்பக புற்றுநோய் அதிகம் தாக்க சந்தர்ப்பங்கள் இருக்கிறது? பெரும்பாலும், குழந்தையில்லாதவர்கள் […]

{ Comments on this entry are closed }