இஸ்லாம்

 இஸ்லாம் – ஒரு நாடு கடந்து வந்த நதி: நதி ஒரு நாட்டிற்குள்ளேயே வளைய வருவதைவிட நாடு கடந்து, செல்லுகிற இடத்திற்கெல்லாம் செழிப்பைத் தருவதுதான் சிறப்பு.இஸ்லாம் அந்த நாளில் அரபு மக்களுக்கு மத்தியில் இறக்கப்பட்டதாக இருந்தாலும், இந்த நாளிலும் உலகம் எங்கிலும் உள்ள மக்களை நல்வழிப் படுத்துவதற்கான சத்திய ஆவேசம் அதில் தகித்துக் கொண்டிருக்கிறது. இஸ்லாமியச் செய்தி குறிப்பிட்ட வகுப்பாருக்கு உரியதில்லை. இஸ்லாமியச் செய்தி உலகம் முழுவதற்கும் உரியது. காரணம் இறைவன் ‘ஆதமின் மக்களே!’ என்று அழைத்து அந்தச் […]

{ 0 comments }

“இலவசம்” இன்று அங்கிங்கெனாதபடி பொது மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பெற்று விட்டது. உலகளாவிய நிலையில் மக்களாட்சியில் மக்களை வசியப்படுத்தி வசப்படுத்த “இலவசம்” மிகப் பெரும் உபகரணமாக உள்ளது. எந்த அரசியல் கட்சி அதிக இலவசங்களை வாரி வழங்குகிறதோ அதற்கு தங்களின் பொன்னான வாக்குகளை அளிக்க மக்களும் தயாராகி விடுகின்றனர். பாவம்! இப்பாமர மக்கள் அறியாதது:- இலவச ஆசை காட்டி ஆட்சிக்கு வரும் எவரும் அவர்களது சொந்த சொத்து சுகங்களிலிருந்து இலவசம் தருவதில்லை. இந்தியாவை சுமார் 800 […]

{ 0 comments }

 1. (நபியே!) நீர் கூறுவீராக! அல்லாஹ் – அவன் ஒருவனே! அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.; அவன் (எவரையும்) பெறவுமில்லை: (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும் அவனுக்கு நிகராக எவரும்; (எதுவும்) இல்லை.  அல்குர்ஆன் ;112 இஃஹ்லாஸ்-ஏகத்துவம்:1-4). 2. நீங்கள் யாவரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்” நீங்கள் (அதிலிருந்து) பிரிந்து விடவேண்டாம். அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த அருட்கொடை (நிஃமத்)களை எண்ணிப் பாருங்கள். (ஆலஇம்ரான்: 3:103) 3. இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பரிபூரணமாக்கி விட்டேன். […]

{ 0 comments }

அடிப்படை விளக்கம் அல்லாஹ்வை ஈமான் கொள்ள வேண்டும் என்பதின் விளக்கம் என்னவென்றால் அல்லாஹ் தன்னைக் குறித்து அல்குர்ஆனில் கூறியிருக்கும் தன்மைகள் (ஸிஃபத்துகள்) செயல்கள் அனைத்தும் உண்மையே என நம்புவதாகும். அந்தத் தன்மைகளையும் செயல்களையும் கொண்டுதான் அல்லஹ்வை நம்பிக்கை கொள்ள வேண்டும். அத்துடன் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப்பற்றி கூறியுள்ள தன்மைகளையும், செயல்களையும் நம்பிக்கை கொள்ள வேண்டும். அல்குர்ஆனிலும் ஆதாரமிக்க நபிமொழிகளிலும்   கூறப்பட்டுள்ளதில் நமது அறிவைக் கொண்டு கருத்து, பொருள் மாற்றத்தையோ செய்யக்கூடாது. அவனுடைய தன்மைகளுக்கும் செயல்களுக்கும் […]

{ 1 comment }

அல்லாஹ்வின் மார்க்கத்தில் உறுதியாக இருப்பது நேர்மையுடனும் உறுதியுடனும் நேரான வழியில் நடக்க விரும்பும் ஒவ்வொரு முஸ்லிமின் நோக்கமாகும். அல்லாஹ் கூறுகிறான்: எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி பின்னர் அதில் உறுதியாக நிலைத்து நிற்கின்றார்களோ திண்ணமாக அவர்கள் மீது வானவர்கள் இறங்குகின்றார்கள். மேலும் அவர்களிடம் கூறுகின்றார்கள்: அஞ்சாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருக்கும் சுவனத்தின் நற்செய்தியினால் மகிழ்ச்சியடையுங்கள்! இந்த உலகவாழ்விலும் மறுமையிலும் நாங்கள் உங்களுக்கு உற்ற துணையாய் இருப்போம். மேலும் (சுவனத்தில்) உங்கள் மன ம் விரும்பியதெல்லாம் […]

{ 4 comments }

இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் பேரால் இந்த உம்மத்துக்கு அறிமுகப்படுத்தியது இரண்டு ஈத்கள் (பெருநாட்கள்) மட்டுமே; ஒன்று ஈகைத் திருநாள், மற்றொன்று தியாகத் திருநாள், இரண்டு பெருநாட்களும் மாபெரும் இலட்சிய அடிப்படையில் அமைந்துள்ளன. அல்லாஹ்வின் அடியார்கள்; அடியான் எஜமானனின் கட்டளைகளுக்குப் பூரணமாக கட்டுப்பட வேண்டும். அப்து(அடியான்) விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சரியே என்று அடிமைத் தன்மையை முழுமையாகப் பிரதிபலிக்கும் பொன்னாளாகத் தியாகத் திருநாள் அமைந்துள்ளது. அல்லாஹ் தன்னுடைய கலீல் – நேசர் என்று சிறப்பித்துச் சொல்லி இருக்கும். […]

{ 2 comments }

நபி அவர்களும் நபித்தோழர்களும் அல்லாஹ்வின் பரிசுத்த வேதமான அல்குர்ஆனுக்கு அளவிட முடியாத மதிப்பும் மரியாதையும் கொடுத்ததின் காரணத்தினால் தான் அதை அவர்கள் தங்கள் நெஞ்சங்களில் மனனம் செய்து பாதுகாத்தது மட்டுமின்றி மரம், மட்டைகள், தோல், கற்கள் முதலியவற்றில் எழுதிப் பாதுகாத்து வந்தனர். நபி அவர்கள் இவ்வுலகைப் பிரியும்போது குர்ஆன் அதனுடைய அமைப்பிலேயே பாதுகாக்கப்பட்டிருந்தது. ஒரே முஸ்ஹப் (நூல்) வடிவில் கொண்டு வருவது மட்டுமே எஞ்சியிருந்தது. ஆனால் நபிவழி அப்படியல்ல. அது நபி அவர்கள் காலத்திலே குர்ஆன் பாதுகாக்கப்பட்டது […]

{ 0 comments }

நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணி ஒருபுறம் வெற்றி, மறுபுறம் கொடுமைகள் என்ற இரண்டிற்கும் இடையில் உள்ள பாதையை பிளந்து சென்று கொண்டிருந்தது. நம்பிக்கை நட்சத்திரங்கள் வெகு தூரத்தில் மின்னத் துவங்கின. அப்போதுதான் நபி (ஸல்) அவர்களின் வானுலகப் பயணம் நடைபெற்றது. இதையே இஸ்லாமிய வரலாற்றில் ”மிஃராஜ்” என அறியப்படுகிறது. மிஃராஜின் நிகழ்ச்சி எப்போது நடந்தது என்பதில் பல கருத்துகள் உள்ளன. 1) நபித்துவம் கிடைத்த ஆண்டு நடைபெற்றது. (இதை இமாம் தப்ரி ஆமோதிக்கிறார்கள்) 2) நபித்துவத்தின் […]

{ 1 comment }

நபி அவர்கள் உலகில் வாழ்ந்த காலத்தில் அவர்களைப் பின்பற்றுவது எவ்வாறு நபித்தோழர்கள் மீது கடமையாக இருந்ததோ, அவ்வாறே அவர்களின் மரனத்திற்குப் பின்னரும் அவர்களைப் பின்பற்றுவது நபித்தோழகள் மீதும், மற்ற ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும் என்பதை பல இறை வசனங்கள் வலியுறுத்துகின்றன. நபி அவர்களின் தூது அவர்களின் மரணத்தோடு முடிந்து விட்டதல்ல. காரணம், அவர்கள் இறைத்தூதர்களில் இறுதியாக வந்தவர்கள். அவர்களுக்குப்பின் நபி கிடையாது. எனவே அவர்களுடைய வழிமுறை இறுதி நாள் வரை பின்பற்ற வேண்டிய ஒன்றாகும். நபி […]

{ 0 comments }

நபித்தோழர்கள் நபி அவர்களை எந்த அளவிற்குப் பின்பற்றினார்கள் என்றால், நபி அவர்கள் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அவர்களும் அப்படியே செய்வார்கள். பல சந்தர்ப்பங்களில் இதை ஏன் எதற்காக செய்கிறார்கள் என்ற கேள்வியை அவர்கள் எழுப்புவதே இல்லை. நபி அவர்கள் ஒரு தங்க மோதிரம் அணிந்திருந்தார்கள். இதைக்கண்ட நபித்தோழர்களில் சிலரும் தங்க மோதிரத்தை அணியலானார்கள். பின்னர் ஒருநாள் நபி அவர்கள் தாம் அணிந்திருந்த மோதிரத்தை கழட்டி எறிந்துவிட்டு, இனிமேல் “இதை நான் ஒருபோதும் அணிவதில்லை” என்று சொன்னார்கள். […]

{ 0 comments }