அல்குர்ஆன்

إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا. பூமி பெரும் அதிர்ச்சியாக – அதிர்ச்சி அடையும் போது وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது- وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا ”அதற்கு என்ன நேர்ந்தது?” என்று மனிதன் கேட்கும் போது- يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும். بِأَنَّ رَبَّكَ أَوْحَى لَهَا (அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வ†ீ மூலம் அறிவித்ததனால். يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا […]

{ 0 comments }

  உண்மையுடனேயே இதை அருளினோம். உண்மையுடனேயே இது இறங்கியது. உம்மை நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பியுள்ளோம்.  (அல்குர்ஆன் 17:105 ) அல்லாஹ் குர்ஆனை உண்மையைக் கொண்டே இறக்கினோம் அதுவும் உண்மையைக் கொண்டு இறங்கியது என்று கூறுகிறான். அல்லாஹ்வின் போதனைகளை நிலைநாட்டப்பட பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உபதேசிப்பது முக்கியமானது.  அல்லாஹ்வின் கட்டளைகளை உபதேசிப்பவர் முதலில் அதனை ஏற்று செயல்படுத்துபவராக இருப்பது அவசியம். ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் […]

{ 1 comment }

நம்பிக்கையாளர்களே! நீங்கள் (தயங்கிக் கொண்டிருக்க வேண்டாம்) இஸ்லாமில் முற்றிலும் நுழைந்து விடுங்கள். (இதனைத் தடை செய்யும்) ஷைத்தானின் அடிச்சுவடு களைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான். (2:208) இவ்வாறு (அவர்களைப் பயமுறுத்திச்) செய்தது ஒரு ஷைத்தான்தான். ஆவன் தன் நண்பர்களைப் பற்றி (அவர்களுக்குப்) பயமுறுத்தினான். ஆகவே, நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அவர்களுக்குப் பயப்பட வேண்டாம்ளூ எனக்கே பயப்படுங்கள். (3:175) அல்லாஹ்வையன்றி அவர்கள் (தெய்வங் களாக) அழைப்பவைகள் பெண் (பெயருடை யவை)களேயன்றி வேறில்லை. துஷ்ட […]

{ 2 comments }

உங்கள் வீடுகளில் ஓதப்படும் அல்லாஹ்வுடைய வசனங்களையும் (குர்ஆன்) ஞானங்களையும் (ஹிக்ம்) நினைவில் வையுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவுடையோனும் (யாவையும்) நன்கறிந்தோனுமாக இருக்கின்றான். அல்குர்ஆன் 33:34 மேற்கண்ட இறை வசனத்தில் ‘கிதாப்’ என்ற குர்ஆனைக் குறிக்க இறைவன் கூறிய சொல்லோடு இணைத்து ‘ஹிக்ம்’ என்ற சொல் ஸுன்னாவையே குறிக்கும் என்று எல்லா அறிஞர்களின் முடிவாகும். அல்லாஹ்வின் வழிகாட்டுதல் பொதிந்துள்ள குர்ஆனை அல்லாஹ் ஒரே நேரத்தில் அருளவில்லை. அதை ஓதிக் காண்பித்து அதன் வசனங்களை மக்களுக்கு விளக்கிக் காட்ட ஒரு […]

{ 1 comment }

திருகுர்ஆன் பல காரணங்களால் அது ஒரு அற்புதம் என்று பலரால் போற்றப்படுகின்றது -முரண்பாடில்லாத ஒரே வேதம் திருகுர்ஆன்தான் என்று சிலர் போற்றுகின்றார்கள். இது ஒரு பதிற், ஒரு கசர், நுஃக்தா கூட மாற்றப்படாத அற்புத வேதம் இது ஒன்றே என்று சிலர் பாராட்டுகின்றார்கள். குர்ஆனின் ஓசை நயமே ஒரு அற்புதம் என்கின்றனர் சிலர். குர்ஆன் அருளப்பட்ட அரபிமொழி இன்றும் அதே பாணியில் பேசப்படுகின்றது. ஆனால் அதே வேளையில் பல வேத மொழிகள் இன்று உலகில் அடிச்சுவடு இல்லாமல் […]

{ 5 comments }

முஸ்லிம்களில் பெரும்பான்மையினோர் தங்கள் மார்க்கத்தை குர்ஆனைக் கொண்டும், சுன்னாவைக் கொண்டும் உரசி பார்க்காமல் முன்னோர்கள் கூறுவது சரியாகத்தான் இருக்கும் என்று கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுகிறார்கள் அதற்கு ஆதாரமாக சில குர்ஆன் வசனங்களை முன்வைத்து ஆலிம்கள் எனப்படுவோரும் தங்கள் தவறான கொள்கைக்கு சில இறை வசனங்களை எப்படியெல்லாம் திரித்து கூறுகின்றனர் என்பதை பார்ப்போம். அல்குர்ஆன் 31:15 (என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَى இறைவசனத்தின் ஓரு பகுதியை ஓதிக்காட்டி َّ […]

{ 0 comments }

பரிந்துரை அல்லாஹ்வுக்கே சொந்தம் :     1. அவர்கள் அல்லாஹ் அல்லாதவர்களை(த் தங்களுக்குப்) பரிந்து பேசுபவர்களாக எடுத்துக் கொண்டார்களா?     (நபியே!) நீர் கூறுவீராக! அவர்கள் எந்த சக்தியையும், அறிவையும் பெறாமல் இருந்தாலுமா? பரிந்துரை எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்; வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உரியது; பின்னர் அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்.   (39:43,44)     2. அன்றியும். அல்லாஹ்வையன்றி அவர்கள் எவர்களை அழைக்கிறார்களோ அவர்கள் (அவனிடம் அவர்களுக்குப்) பரிந்து பேச அதிகாரமுள்ளவர்கள் அல்லர்.  (43:86)     3. […]

{ 0 comments }

(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவை யுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்கு கடுமையான வேதனை உண்டு. (அல்குர்ஆன் 3:105)      (ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்; அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாரயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும் அவ்வேதம் கொடுக்கப்பெற்றவர்கள், […]

{ 2 comments }

 காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து. சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்த மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).(103:1-3) திருமறையில் உள்ள சூராக்களில் சிறியவைகளில் ஒன்று மேலே தரப்பட்டுள்ளது. இமாம் ஷாபி(ரஹ்) அவர்கள் ‘இந்த சூராவைத் தவிர வேறு ஒரு ஆதாரமும் அல்லாஹ்வினால் அவனது படைப்பினங்களுக்கு இறக்கப்பட வில்லையாயினும் இதுவே போதுமானதாக இருக்கும்’ என்று சொல்லும் […]

{ 1 comment }

முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் இன்று அல்குர்ஆன் தங்களுடைய வேத நூல் எனவே அது தங்களுக்குறியதே என்று சொந்தம் கொண்டாடுகின்றனர். அதனால் அதனை முஸ்லிம் அல்லாதவர்கள் கேட்டால் அதனை அவர்களுக்கு கொடுக்க மறுத்து விடுகின்றனர். அவர்கள் அசுத்தமானவர்கள்; எனவே அவர்கள் அதைத் தொடக்கூடாது என்று சட்டம் வகுத்துள்ளனர். எனவே முஸ்லிம் அல்லாதவர்கள் குர்ஆனைப் படித்து விளங்கி அதிலுள்ள உயர்ந்தகருத்துகளை அறியும் வாய்ப்பு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். முஸ்லிம்கள் குர்ஆனை தங்களுடைய  நூல் என்று சொந்தம் பாராட்டுவதால் அவர்களும் அதை நம்பி தங்களுக்கும்  குர்ஆனுக்கும் எவ்வித சம்பந்தமில்லை என்று ஒதுங்கிக் […]

{ 1 comment }