|
வாக்குறுதி
பொருள், ரகசியம், வாரிசுரிமை போன்ற விஷயங்களில் வைக்கப்பட்ட நம்பிக்கைக்கு
மோசடி செய்து விடுகிறார்கள். இது போன்ற குணமுடையவர்கள் நயவஞ்சகர்களாவர்.
அவர்கள் தொழுதாலும், நோன்பிருந்தாலும், தங்களை முஸ்லிம்களாக எண்ணிக்
கொண்டாலும் சரியே.
என்னையே
நோக்கி நிற்போரின் வழி மூடச்சடங்குகள்
தவறானவை, குர்ஆன் ஹதீஸுக்கு முரணானவை என்று சுட்டிக்காட்டினாலும் தலைமுறை தலைமுறையாக நாங்கள் செய்து
வருவதை நீங்கள் மூடச் சடங்குகள் என்று சொல்வதா? என்று கேட்பதிலிருந்தே அவர்களுக்கு அந்தச் சடங்குகள்
பற்றிய ஞானம் இல்லை. என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றனர்.
ராசி
பலன் பார்ப்பது, தாயத்து கட்டுவது
நாளிதழ், வார இதழ், மாத இதழ்களில் வெளியிடப்படும் நட்சத்திர ராசி பலன்களை நம்புவது ஷிர்க்காகும்.
அதை படிப்பதும் பெரும் குற்றமாகும். காரணம், அது ஷிர்க்கிற்கு வழிவகுத்து விடும்.
இறைத்தூதர்கள்
பொய்யர்களா?
கடவுளின் பெயரால் மதப்புரோகிதரர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதற்காக உண்மையான இறைவனை
மறுக்கத்துணிந்த இந்த பகுத்தறிவாளர்கள் அரசியல் பெயரால் இன்றைய அரசியல்வாதிகள் அதைவிடக் கடுமையாக
மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களே அந்த அரசியலையும் மறுக்கத் துணியாதது ஏனோ?
சூனியமும்
ஜோசியமும்
பொய்யர்களும் ஜோசியர்களும் அறிவீனர்களை ஏமாற்றி பணம் பறிக்க பல வழிகளில் முயல்கிறார்கள்.
அவர்களின் வார்த்தைகள் ஒரு முறை உண்மையானால் 99 முறை பொய்யாகி விடும் என்பதை விளங்கிக்
கொள்வதில்லை.
எல்லோரும்
கொண்டாடுவோம்! பெருநாட்களின் தாத்பரியம் என்ன? பெருநாட்களை
எப்படி கொண்டாட வேண்டும்? போன்ற பல கேள்விகளுக்கு விடை தெரியாத காரணத்தினால் சில
சகோதர சகோதரிகள் துரதிஸ்டவசமாக இஸ்லாத்திற்கு புறம்பாக உள்ள கலாச்சாரங்களை பின்பற்றும்
நிலை ஏற்படுகிறது.
ஏன்
இந்த இழிநிலை இவ்வுலகில் நீங்கள் கோடிக்கணக்கில் இருக்கிறீர்கள். இவ்வளவு மக்கள் தொகைகொண்ட நீங்கள் போக்கற்றவர்களாகவும்
மதிப்பற்றவர்களாகவும் இருக்க மாட்டீர்கள்; இறைவனைத் தவிர வேறு யாருக்கும் குனியாத உங்கள் தலை வெறும்
மனிதர்களுக்கு முன்னால் குனியாது; எவரும் சூரையாடத் துணியாத உங்கள் கண்ணியம் இன்று மண்ணோடு
மண்ணாகியிருக்காது.
பரிட்சை
வாழ்க்கை இறைவனின் கடுமையான எச்சரிக்கைக்குப்
பின்னும் பொருட் செல்வத்திலும் மக்கட் செல்வத்திலும் வரம்பு மீறி பேராசை கொண்டிருப்பவர்கள் அவை
காரணமாக தொழுகைகளை மற்றும் அமல்களை வீணாக்கிக் கொண்டிருப்பவர்கள் ஜகாத் கொடுக்காமல் சேமித்து
வைப்பவர்கள் நிச்சயமாகத் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படவேண்டும்.
உங்களுக்கொரு
கடிதம் ஒரு மனிதன் மருத்துவரிடம்
சென்று மருந்தொன்றை குறித்துக்கொண்டு அதனை அவன் துணியில் மடித்துக் கழுத்தில் மாட்டிக் கொள்கிறான்.
அல்லது அதனைக் கரைத்துக் குடிக்கிறான் என்றால் அவனைப்பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்? அவனுடைய
செயலைப்பார்த்து சிரிக்க மாட்டீர்களா?
அல்லாஹ்
உனக்காக! வெளிப்பகட்டுக்காகவும், புகழாசைகளுக்காகவும் செயல்படும்
உணர்வுகள் குறித்து நாம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். அவை பெரும் நாசத்தை விளைவிக்கக்கூடாது.
இல்லையெனில் நம் உழைப்பு, முயற்சி அனைத்தும் வீணாகிவிடும்.
பிறர்
நலம் பேணுதல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவர் தனக்கு விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்பாதவரை ஈமான் கொண்டவராக
மாட்டார்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
'தவ்ஹீத்'
பெயரால் இஸ்லாம் தவ்ஹீதிற்குத்
தரும் விரிந்த பொருளும், விளக்கமும் உயர்ந்த வாழ்க்கை இலட்சியமும் இன்று தவ்ஹீத்வாதிகளால் குறுகிய வரையறைக்குள் தள்ளப்பட்டு விட்டது.
மறைவான
வணக்கம் இன்றும் கூட பெரும்பாலான மதங்களில் ஏதேனும் ஒரு வடிவத்தில்
நோன்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் மக்கள் தம் சார்பில் பலவற்றை இணைத்து
அதன் வடிவத்தை கெடுத்திருந்தாலும் சரி!
நன்மையின்
பெயரால்("பராஅத்"இரவு)முன்னோர்கள்களில் சிலர்
இதனை உருவாக்கினர் என்பதைத் தவிர குர்ஆனிலோ ஸஹீஹான ஹதீஸ்களிலோ இவற்றுக்கு ஆதாரமுண்டா என்று
மார்க்கம் கற்றவர்கள்கூட ஆராயவில்லை. அதற்காக முயற்சிகளை மேற்கொள்வதுமில்லை. படித்தவர்களின்
நிலைமையே இதுவானால் படிக்காதவர்கள் எப்படி உண்மையை உணரமுடியும்?
"பராஅத்"
இரவு சம்பந்தப்பட்ட ஹதீஸ்கள் எக்காரணங்களால் பலவீனப்படுகின்றன?
மன்னிக்க
கற்றுக்கொள்வோம் மனிதன் நண்பர்கள், மனைவி, உடன் பிறந்தவர்கள் என அனைவாிடமும் சில எதிர்பார்புகளை
வைத்திருக்கிறான். அந்த எதிர்பார்ப்புகள் பொய் ஆகும் போது கோபப்படுகிறான்.
அதன் விழைவுகளால் சில வார்த்தைகளை கொட்டி விடுகிறான் இதனால் சிறு பிளவு
அதன் பிறகு அதுவே பொிய விாிசலாக போய் உறவே முறிந்து விடும் சூழ்நிலை
ஏற்படுகிறது.
துவாவுடைய
ஒழுக்கங்கள் அல்லா‹ நம்மிலிருந்து மிகச் சமீபமாக இருக்கிறான். அவனுடைய அறிவு, எல்லாவற்றையும்
ஒன்றுவிடாமல் அவன் சூழ்ந்து அறிதல், அவனுடைய பாதுகாப்பு ஆகியவற்றால் அவன் நம்மோடு இருக்கிறான் என்ற
எண்ணம் மேலோங்கி இருக்கவேண்டும்.
நாவைப்
பேணுவோம் நாம் விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் பேசுவதனால் நமக்கு நாமே
எவ்வளவு தீங்கிழைக்கிறோம் என்று சிந்தித்து பார்க்க கடமைபட்டிருக்கிறோம் தவறுகளின் பிறப்பிடமே
இந்த நாக்குதான். எனவே நாம் உறுப்புகளில் மிகவும் அஞ்ச வேண்டிய உறுப்பு நாக்குதான்
முஸ்லிம்
பெண்மணி தங்களது அலங்காரத்தை வெளிக் காட்டாது மறைத்துக் கொள்ளவும்.
தங்கள் முந்தானைகளால் மார்பையும் மறைத்துக் கொள்ளவும்... என்ற பொருள் கொண்ட திருக்குர்ஆன் வசனம்
அருளப்பட்டபோது தங்களது போர்வைகளைக் கிழித்து மறைத்துக் கொண்டனர்.''
ஆயிரம்
முறை அழைத்தால்.... ஆயிரம் தடவை கூப்பிட்டதும் கூப்பிட்டக் குரலுக்கு
பதிலளித்து அப்துல் காதீர் ஜீலானி (ரஹ்) அவர்கள் வருகிறார்களா?
உணரப்படாத தீமை! பொய் பொய் மனித இனத்தால் மிக மிகச் சாதாரணமாக
செய்யப்படும் தீமை.பொய் சொல்வது வாழ்க்கையில் இன்றியமையாதது என்ற அளவிற்கு பொய் மனித
குலத்தால் கடைபிடிக்கப்படுகின்றது.
பாவங்களை
மன்னிப்பவன் நமது கடந்த கால
தவறுகளோ மிக அதிகம். அதனை இப்பொழுது நினைத்தாலும் நம் மனம் இன்றும் கூசுகிறது.
தன்னந்தனியே
தனித்து நிற்கும் நாள்...!
ஒவ்வோர் ஆத்மாவும், தான் செய்த நன்மைகளும்; இன்னும், தான் செய்த தீமைகளும் அந்த(த் தீர்ப்பு)
நாளில் தன்முன்கொண்டு வரப்பட்டதும், அது தான் செய்த தீமைக்கும் தனக்கும் இடையே வெகு தூரம் இருக்க வேண்டுமே
என்று விரும்பும்
"பித்அத்"
அனைத்தும் வழி கேடுகள்தான்."எவர்
எம்மால் ஏவப்படாத அமல்களைச் செய்கின்றாரோ, அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப் பட்டவையாகும். அவை
நூறு ஷரத்துகளாயினும் சரியே" என்று நபி
صلى الله
عليه وسلم அவர்கள் கூறினார்கள். (புகாரி,
முஸ்லிம்)
"வஹ்ஹாபி"
புனிதமான அல்லாஹ்வின் பெயரைக்காட்டி
அப்பவி முஸ்லிம்களை ஏமாற்றக்கூடிய கூட்டம் எப்படிப்பட்ட கூட்டமாக இருக்கும் என்பதை சாதாரண அறிவு
படைத்தவனும் அறிந்துகொள்ள முடியும். பாமர முஸ்லிம்களை ஏமாற்றுவதற்காக பயமுறுத்தி பயன்
அடைவதற்காக வேண்டி இவர்களால் "வஹ்ஹாபி" என்ற பூச்சாண்டி காட்டப்படுகிறது.
மரணத்திற்குப்பின்
அல்லாஹ், உயிர்களை
அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை
விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்
ஸலவாத் நபி(ஸல்)அவர்கள் இந்த
சமுதாயத்திற்காக பாடுபட்டதற்காகவும் அவர்களிம் மூலம் அல்லாஹ் நேர்வழி காட்டினான் என்பதற்காகவும் நாம் அவர்களை
நன்றியோடு நினைத்து அவர்களுக்காக துவாச்செய்கிறோம். இனி சலவாத் சொல்வதால் ஏற்படும் பயன்களையும் அதன்
சிறப்பையும் காண்போம்.
எது
மெய்ஞானம் திருகுர்ஆன் இந்த உலகிற்கு
அருளப்படுவதற்கு முன்புவரை உலகமே மாயம் - வாழ்வே மாயம் - எல்லாமே மாயம் - அனைத்தும் பொய் என்ற
நம்பிக்கை எங்கும் வியாபித்திருந்தது.
புத்தாண்டு பொதுவாக உலக மக்களின் வழக்கில் பல வகையான
வருடப்பிறப்புகள் காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஒர் இறைத்தூதரின் அல்லது மகானின் பிறப்பையோ
அல்லது இறப்பையோ அடிப்படையாக வைத்தே கணக்கிடப்படும். ஆனால் அந்த வழக்கத்திற்கு மாறாக இஸ்லாமிய
புத்தாண்டு கணக்கிடப்பட்டு வருகிறது.
ஆண்டுகள் கடந்து போகிறதே மனிதா ஐங்கால தொழுகைகளை முறைப்படி தொழுது வருகிறோமா!
தேடிய செல்வத்திற்கு ஜகாத்தை கணக்கிட்டுக் கொடுத்து விட்டோமா? ஏழை எளியவர்களிடம் அன்பு
பாராட்டி அவர்களுக்குரிய உதவி உபகாரங்களைச் செய்கிறோமா? உற்றார் உறவினர்களை அவர்கள் வெட்டிச்
சென்றாலும், நாம் அரவனைத்து செல்கிறோமா
மிஃராஜ்
ஒருபுறம் வெற்றி, மறுபுறம் கொடுமைகள் என்ற இரண்டிற்கும் இடையில் நம்பிக்கை
நட்சத்திரங்கள் வெகு தூரத்தில் மின்னத் துவங்கின. அப்போதுதான் நபி (ஸல்)
அவர்களின் வானுலகப் பயணம் நடைபெற்றது. இதையே இஸ்லாமிய வரலாற்றில்
''மிஃராஜ்'' என அறியப்படுகிறது.
எது
உண்மையான மார்க்கம் ஏழைகளாக
இருப்பதைவிட குடிசையில் வாழ்வதைவிட கூழை குடித்து கந்தையைக் கட்டுவதைவிட மிகப்பெரும் இழிவு
இறைவன் கொடுத்த மார்க்கத்தை விட்டு மனிதன் படைத்த மதங்களைப் பின்பற்றுவது இழிவு மாதிரமல்ல,
மறுமையில் மாபெறும் நஷ்டத்தையும் துன்பத்தையும் தரக்கூடியது.
மனித நேய விரோதிகள்
முஸ்லிம்கள் இன்று இக்கட்டான ஓர் அபாய நிலையை
சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பான்மையான முஸ்லிம்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு முரணாக
நடப்பது இன்று சர்வ சாதாரணமாகி விட்டது.
மனித அபிப்பிராயம்
ஒரு கூட்டம் ஒரு
அறிஞரின் மனித அபிப்பிராயத்தைச் சரி கண்டு செயல்படுகிறது. இன்னொரு கூட்டம் இன்னொரு அறிஞரின்
மனித அபிப்பிராயத்தைச் சரி கண்டு செயல்படுகிறது. இப்படி அல்லாஹ் கொடுத்த நேரான வழிவிட்டு
தடம்புரண்டு பல கோணல் வழிகளில் சென்று தன்னை மாய்த்துக் கொண்டிருக்கிறது இந்த சமுதாயம்.
இஸ்லாமிய சமுதாயம் படிப்பினை பெறுமா?
அரசு புள்ளிவிவரப்படி இன்று உள்ள
முஸ்லிம்களில் 46% வறுமைக் கோட்டில் உள்ளார்கள் எனக் கூறுகிறதே! முஸ்லிம்களில் எத்தனை பெரிய
பணக்காரர்கள் தன் சொத்தை கணக்கிட்டு ஏழைகளுக்கு ஜகாத் கொடுக்கிறார்கள்?
நடுநிலைச் சமுதாயத்தின் இன்றைய நிலை!
அன்றைய, இன்றைய
யூத கிறிஸ்தவ சமுதாயங்கள் எப்படி புரோகித குருமார்களை சுய சிந்தனையற்று, குறுட்டுத்தனமாக நம்பி மோசம்
போனதோ, இப்போதும்
போய்க் கொண்டிருக்கின்றனவோ, அதே வழியில் நாமூம் மோசம் போய் கொண்டிருக்கிறோம்.
அல்குர்ஆன் யாருக்குச் சொந்தம்? அல்குர்ஆன் அது எங்களுக்கே சொந்தம் என்று நெஞ்சில் அடித்துப் பேசும் முஸ்லிம்கள், அதனுள்ளே உள்ள வசனங்கள்
பற்றி வரும்போது
இது
யூதர்களுக்கு;
இது கிறிஸ்தவர்களுக்கு; இது காபிர்களுக்கு என்று பெரும்பாலான
வசனனங்களை முஸ்லிம் அல்லாதவர்களுக்காக ஆக்கிவிடுகிறார்கள்.
அனாச்சார
சடங்குகள்
இஸ்லாம்
அனுமதிக்காத பல அனாச்சாரங்களை இஸ்லாத்தின் பேரிலேயே நடைமுறைப் படுத்தி வருவதால், வகுப்பு கலவரங்கள்
ஏற்பட முஸ்லிம்களும் துணை போகிறார்கள் என்ற உண்மையை நாம் மறுக்க முடியாது.
கோஷ்டி மனப்பான்மை இறை
மார்க்கத்தின் அடிப்படையில் அஹ்ல ஹதீஸ், ஹனபி, ஷாபி, தேவ்பந்தீ, பரேலவி, ஷியா, ஸன்னி எனும்
வகையில் தனிதனிக் குழுக்கள் உருவாக முடியாது. இந்தக்
குழுக்கள் எல்லாம் அறியாமையினால் தோற்றுவிக்கப்பட்டவை. இறைவன்
தனது உம்மத்தாக இஸ்லாமிய சமுதாயம்' என ஒரே ஒரு
சமுதாயத்தைதான் அமைத்திருக்கிறான்.
அழைப்புப் பணியில் தவறான சிந்தனை நாம் நேர்வழியில் இருக்கிறோம் என்பதற்கு சரியான அளவுகோல் குர்ஆனும்
ஹதீஸும் ஆகும். அவை எடுத்துச் சொல்லுபவை சிறிய விஷயங்களாக இருந்தாலும், பெரிய விஷயங்களாக
இருந்தாலும், மக்கள் முன் எடுத்து வைப்பதே பிரசாரகனின்
கடைமையாகும்.
மத வியாபாரம்!
ஜோதிடத்திற்கு எதிரான குர்ஆன் ஆயத்துகளும், ஹதீதுகளும் மாற்று மதத்தாரிடம் ஜோதிடம்
கேட்பதைத்தான் தடுக்கின்றன; நம்ம ஆலிம்களிடம் ஜோதிடம் பார்ப்பதை அல்ல என்றே முஸ்லிம்கள்
நம்புகிறார்கள். அதாவது, நம்ம கையைக் கொண்டே நம் கண்ணைத் தோண்டினால் வலிக்காது என்ற மூட நம்பிக்கை.
பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள்
எப்படி மக்களிடையே வேரூன்றின? பலவீனமான,
இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் 1000 வருடங்களுக்கு முன்பே தெளிவாக அடையாளம் காட்டப்பட்டிருந்தும், இன்றளவும்
அவை மக்களால் நிராகரிக்கப்படாமல் போனதற்கு காரணம் என்ன?
இகாமதுத்தீன்"
இறையாட்சி "இகாமதுத்தீன்" (இறையாட்சி) என்றால் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றுவது தான் என்று
இவர்களுக்கு தவறாக போதிக்கப்பட்டு விட்டது. இந்த தவறான போதனை காரணமாக இவர்களது
சிந்தனை யெல்லாம் உலகிலுள்ள நாடுகளின் ஆட்சிகளைப் பிடிப்பதிலேயே சுழன்று வருகிறது.
பிரிவினை
இஸ்லாமிய
குழுக்களிடையே காணப்படும் பிரிவினை வாதத்தால் முஸ்லிம் உம்மாவை கூறுபோடும் அவல நிலைதான் அது.
இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக பாடுபடும் பல குழுக்களின் முயற்சிகளால் நன்மைகள் சில ஏற்பட்டிருப்பினும்,
இக்குழுக்களால் முஸ்லிம்களிடையே ஒற்றுமையின்மைக்கான விதை தூவப்பட்டுள்ளது.
தர்ஹா மாயை? இஸ்லாமிய மாதங்களை
நபி (ஸல்) கற்றுத் தந்த முறைப்படி நமது பெண்கள் சொல்லுவதில்லை. மாறாக ரசூலுல்லாஹி மெªலூது பிறை,
அப்துல் காதிர் ஜீலானி மெலலூது பிறை, நாகூரார் மெªலூது பிறை என்று சரளமாக கூறும் அளவிற்கு முஸ்லிம்
பெண்களிடம் தர்கா மோகம் மலிந்து காணப்படுகிறது.
இந்த இழி நிலை மாறுமா?
அழியும் இவ்வுலகத் வாழ்கைக்கு யாரையும் நம்பாமல் தனது கையே
தனக்கு உதவி என்று உறுதி கொண்டு செயல்படும் மனிதன், அழியாத நிந்திய மறு உலக வாழ்கையை மட்டும் இந்த முல்லாக்களை நம்பி ஒப்படைப்பது எவ்வளவு பெரிய
மதியீனம். ஷைத்தானுடைய எவ்வளவு பெரிய சூழ்ச்சி?
இதைவிட
ஒரு ஆபத்தான நிலை
இருக்க முடியுமா?
கண்மூடி பின்பற்றாதீர்கள் முஸ்லிம்களில் பெருங்கூட்டம் மார்க்கம் என்ற பெயரில்
யாராவது எதையாவது சொன்னால் கண்மூடிப் பின்பற்றுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
நாம் தடுமாறினால்
மாற்று மதத்தாரை,
அரசியல்வாதிகளைத் தூற்றுவதால், பழிப்பதால், கரித்துக் கொட்டுவதால் லாபம் நமக்கில்லை என்பதை முஸ்லிம்கள்
உணர வேண்டும். அதன் மூலம் முஸ்லிம் சமுதாயம்தான் துன்பத்திற்குள்ளாக நேரிடும். அவர்களின் அநியாய அக்கிரமங்களைப்
பக்கம் பக்கமாக எழுதுவதை விட்டும், பேசித்ிதிரிவதை விட்டும்,
விடுபடவேண்டும்.
குர்ஆன், ஹதீஸ் பயிற்சி முஸ்லிம்களாகிய நம்மை
அகில உலகிற்கும் முன்மாதிரிச் சமுதாயமாக அமைத்திருப்பதாகவும் குர்ஆனிலே அல்லாஹ் கூறுகிறான். நபி(ஸல்)
அவர்கள் விட்டுச் சென்றுள்ள பணிகளை ஒவ்வொரு முஸ்லிமான ஆணும்,பெண்ணும் செய்வது கடமை என்பதையும் ஹதீஸ்களின்
மூலம் நாம் அறிகிறோம்.
முஸ்லிம் என்றால்
முஸ்லிம் என்றால் இனத்தின் பெயரா? சற்று சிந்தனை செய்யுங்கள்! நீங்கள் முஸ்லிம்
என்று சொல்லுகின்ற வார்த்தையின் கருத்தென்ன? மனிதன் தன் தாய் வயிற்றுலிருந்தே இஸ்லாத்தை தன்னோடு கொண்டு வருகிறானா? முஸ்லிமுடைய மகன்
முஸ்லிமுடைய பேரன் என்னும் அடிப்படையில் ஒரு மனிதன் முஸ்லிமாகிறானா?
பழி சுமத்தும் இழி செயல்!
மனித
சமுதயாத்தினர் சிலர் எதையும் தீர்க்க அறிய முடியாதவர்கள் அரைகுறைத் தகவல்களை வைத்துக் கொண்டு வெகு
விரைவாக எவர் மீதாவது பழி சுமத்தி விடுகின்றனர். பழி சுமத்துவதற்கு பல காரணங்கள்
இருந்தாலும் ஆதிக்க உணர்வும் காரணமாகி விடுகின்றது.
சிலர் சிலர்மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
இந்த ஆதிக்கம்
பலனளிக்காமல் போனால்
இதுவே பழி சுமத்துவதற்கு
காரணமாகி விடுகின்றது.
போற்றுதலுக்குரியவர்கள் யார்
ஒரு ஆலிம்
தன்பயானை துவக்கும் முன் அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டு நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத் உரைத்து விட்டு" முஹ்யித்தீனே
கைப்பிடியுங்கள்"என்று கூறி உரையைத் துவக்குகின்ற அவல நிலயைத் காண்கிறோம்.
"உலகத்து மாந்தரின் ஈமானை
இன்னொரு
தட்டிலும், அபூபக்கரின்(ரழி) அவர்களின் ஈமானை
இன்னொரு தட்டிலும்
வைத்து எடை போட்டால் அபூபக்கர் (ரழி) ஈமானே கனமுள்ளதாகும்"
என்ற நபி மொழி கூட
இவர்களுக்கு
தெரியாமல் போனது ஏன்?
சாத்தான் வேதம் ஓதுகிறது
நபி(ஸல்)
அவர்களின் காலத்தில், நபித் தோழர்கள், தாபியீன்கள் வாழ்ந்த பொற்காலத்தில்
இருந்த
அசல் மார்க்கம் இன்று காணப்படவில்லை. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் வழிகேட்டில் வீழ்த்தும் செயல்களாக
கருதப்பட்டவை இன்று நேர்வழி காட்டிகளாக கருதப்படுகின்றன. இந்த மாற்றம் ஏன் ஏற்பட்டது? எப்படி ஏற்பட்டது?
இஸ்லாத்தின் பெயரால் தீர்ப்புகள்
சில அறிஞர்கள் தங்கள் தீர்ப்புக்கு
ஆதாரமாக கடந்த காலத்தில் எழுதப்பட்ட ஒரு நூலைத் குறிப்பிட்டு அதில் இப்படி உள்ளது என்று தீர்ப்பு
வழங்குகின்றர். சரியான தீர்ப்பை வழங்கி விட்டதாக எண்ணிக் கொள்கின்றனர். எந்த நூலிலிருந்து
இந்த தீர்ப்பை பெற்றனரோ, அந்த நூலாசிரியர், குர்ஆனின் எந்த வசனத்தை, எந்த ஹதீஸை ஆதாராமாகக் கொண்டு
இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கின்றாரோ அதனை மக்கள் முன்னே வைப்பதில்லை.
இறந்தவர்களுக்காக...!
இது உண்மையில்
இஸ்லாம்
அறிமுகப்படுத்திய நடை முறையா? என்றால் இல்லை இந்த
பாத்திஹாக்கள் ஊருக்கு ஊர் வித்தியாசப்படுவதிலிருந்து இது
மார்க்கதில் இல்லாத
ஒன்றும் ,பித்அத் என்றும் அறியலாம்.
இறையில்லங்களைப்
பாழாக்குவோர் அல்லாஹ்வின் பள்ளியில் எந்தச்
நாட்டைச் சேர்ந்தவனும் அதில் தொழலாம். எந்த மொழி பேசுபவனும் தொழலாம், துதிக்கலாம். உலகம் முழுவதும்
இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் மட்டும்தான் அல்லாஹ்வின் பள்ளியில் தொழுவதற்கு தடை
விதிக்கப்படும் கொடுமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கஃபதுல்லாஹ் இடம் பெயர்ந்ததா?
இமாம் ஹஸன் பஸரீ அவர்களின் காலத்தில், அவர்கள்
ஹஜ்ஜுச் செய்யச் சென்றபோது, காஃபதுல்லாஹ்வை அதன் இடத்தில் காணவில்லையாம்! எங்கே என்று விசாரித்த போது
ராபியாபஸரிய்யா அவர்களை வரவேற்கச் சென்றுவிட்டதாகச் தெரிந்ததாம். இந்தக் கதை பல
வகைகளில் பலவிதமக சொல்லப்படுகின்றது. இந்த கதை சரியானது தானா! என்று நாம் ஆராய்வோம்!
ஷிர்க்கின் தோற்றம்
ஆதம்(அலை) அவர்களிலிருந்து மனிதன் ஓரிறைக்
கொள்கை உடையவனாகவே இருந்து வந்தான். அந்தத் தவ்ஹீதைத் பிரச்சாரம் செய்த நல்லடியார்களை அளவுக்கு
அதிகமாகக் கண்ணியப்படுத்தி, கடவுள் நிலைக்கு அவர்களை உயர்த்தியதுதான் "ஷிர்க்" (இணை
வைத்தல்) தோன்ற மூல காரணமாக இருந்தது. இந்த உண்மையைத் திருக்குர்ஆன் கூறுகின்றது.
ஈமானைப்
பாழாக்கும் செயல்கள் அல்லாஹ்வின்
மகத்தான பண்புகளை அவனது படைப்புகளுக்கு கொடுத்து இயற்றப்பட்ட கவிகளுக்கு மார்க்க அறிவு குறைந்த பொதுமக்கள்
தான் பலியாகிறார்கள் என்றில்லை, கற்றறிந்த "மவ்லவிகளும்" இந்த ஷிர்க்கான கவிதைகளுக்கு துணைபோவதை நாம்
சர்வ சாதரணமாகக் காண்கிறோம்.
அசத்தியம்
அழிந்தே தீரும் அல்குர்ஆனும்,
ஸஹீஹான ஹதீஸ் தொகுப்புகளும் 1400ஆண்டுகளுக்கு மேலாக இறையருளால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் அல்குர்ஆனின்
மொழியாக்கமும், ஸஹீஹான ஹதீஸ்கள் தொகுப்பும் நமது முன்னோர்களுக்கு முழுமையாக கிடைத்தனவா என்றால் இல்லை.
ரகசிய ஞானம் என்று ஒன்று உள்ளதா? சமீபகாலமாக முரீது கொடுப்போர் ரகசிய
ஞானம் என்று கூறிப்பாமர மக்களை ஏமாற்றுவது அதிகரித்துள்ளது. அதனால் இது பற்றிக் கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.
ஒளியிலிருந்து நபி (ஸல்) அவர்களின் தனிச் சிறப்புகளைச் சொல்லவே நேரம்
போதவே இல்லை. அவர்களின் ஒழுக்கம், நேர்மை, தூய்மையான அரசியல், சிறந்த இல்லறம், வணக்க வழிபாடு,
அவர்களின் அருங்குணங்கள், அல்லாஹ்வை தவிர எவருக்கும் அஞ்சாமை, அவர்களின் வீரம், தியாகம் போன்ற எண்னற்ற
சிறப்புகளை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியுள்ளான். பொய்யானவைகள் மூலம் அவர்களைப் புகழும் நிலையில் அல்லாஹ்
அவர்களை வைத்திருக்கவில்லை.
மார்க்கத்தை மறைத்து உலக ஆதாயம் தேடுதல்
நீங்கள்
சொல்வதெல்லாம் சரிதான்; என்ன செய்வது? எங்கள் பிளைப்புக்காக சில பித்அத்துகளைச் செய்யவேண்டி உள்ளது;
மேலும் தவிர்க்கமுடியாத நேரத்தில் ஷிர்க்கையும் செய்துவிட்டு, அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பும் செய்து
கொள்கிறோம் என்று கூறுகின்றனர்.
குர்ஆன்,ஹதீஸ் பற்றி அப்துல் காதிர்
ஜீலானி (ரஹ்)
ஹிஜ்ரீ ஐந்தாம் நூற்றாண்டில் இஸ்லாமிய உலகம்
கண்ட மாபெரும் சீர்திருத்தவாதி அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள். இஸ்லாமிய உலகில் மற்ற எவரது
பெயராலும் கட்டிவிடப்பட்டுள்ள கதைகளைவிட, இவர்கள் பெயரால்தான் அதிகமாக பொய்யான கதைகள் உலவுகின்றன.
இறைவனுக்கு இணைவைக்கக்கூடிய தகாத சொற்களைக் கூட அவர்கள் சொன்னதாகத் துணிந்து பொய்ப் பிரச்சாரமும்
செய்யப்படுகின்றது.
|