ஷைத்தானுடன் கைகோர்த்த ஆலிம்கள்

Post image for ஷைத்தானுடன் கைகோர்த்த ஆலிம்கள்

in பிரிவும் பிளவும்

முஸ்லிம் உம்மத்திற்கு அல்லாஹ் இட்ட அழகிய பெயர் “முஸ்லிம்கள்’. இந்த முஸ்லிம்களின் கூட்டமைப்பிற்கு நபி(ஸல்) அவர்கள் வைத்த பெயர் “ஜமாஅத் அல் முஸ்லிமீன்’. இதனை தவிர்த்து வேறு எந்தப் பிரிவுப் பெயர்களையும் அல்லாஹ்வும் அவனது தூதரும் அங்கீகரிக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் ஸஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள் இவர்களுக்குப் பின் சுமார் ஆயிரம் ஆண்டு கால கட்டத்தில் கூட இஸ்லாத்தின் பெயரால் தனி ஜமாஅத் எவரும் ஏற்படுத்தவில்லை. ஆனால் இன்று தவ்ஹீது பேசும் ஆலிம்கள் தங்களை “ஸலஃபிகள்’ என்றும் தவ்ஹீத் வாதிகள் என்றும் கூறி பெருமைப்படுகிறார்கள். ஸலஃபி பெயரால், தவ்ஹீது பெயரால் ஏராளமான இயக்கங்கள் செயல்படுகின்றன.

ஸஹாபா பெருமக்கள் காலத்தில் கூட, ஆட்சி, அதிகாரம் சம்பந்தமாக கருத்து வேறுபாடுகள் தோன்றின. இதைக் காரணமாகக் காட்டி தனி ஜமாஅத் எந்த ஸஹாபியும் தோற்றுவிக்கவில்லை. மார்க்கத்தில் பிரிவினை செய்வது கொடிய ஹராம் என்பதை அவர்கள் விளங்கியிருந்தனர்.

ஸலஃபி பெயர் வைக்க குர்ஆனிலும்-சுன்னாவிலும் ஏதேனும் ஆதாரம் உண்டா? என்ற கேள்விக்கு… ஸஹாபா பெருமக்களை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். “ஸலஃப்’ எனும் சொல்லிற்கு ஆதாரம் தேவையில்லை. “ஸலஃபி’ என்று பெயர் வைத்து இயக்கம் நடத்தி மக்களை அழைக்க ஆதாரம் உண்டா?

“நாங்கள் ஸஹாபாக்களை பின்பற்றுகிறோம்; ஆகவே எங்களை “ஸலஃபீ’ என்று அறிவித்துக் கொள்கிறோம்’.. இது சரியான பதில்தானா? சிந்திக்க வேண்டும்! ஒரு முஸ்லிம் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுவதால் தன்னை “முஹம்மதீ’ என்று அழைக்க முடியுமா? ஸஹாபாக்களை பின்பற்றுவதால் தன்னை “அஸ்ஹாபீ’ என்று அழைக்க மார்க்கம் அனுமதிக்கிறதா? நிச்சயம் இல்லை. அந்த ஸஹாபாக்களும் தங்களை “முஸ்லிம்கள்’ என்றே அழைத்தனர். ஸஹாபாக்கள் இருந்த அந்த முஸ்லிம்கள் வட்டத்திற்குள் நாமும் நுழைய விரும்பினால் “முஸ்லிம்கள்’ என்பதை தவிர்த்து வேறு என்ன பெயர் வைத்தாலும் அதில் நுழைய முடியாது. ஸஹாபாக்களைப் பார்த்துத்தான் அல்லாஹ் கூறுகிறான்.

“தானும் நேர்வழியில் நடந்து பிறரையும் நேர்வழியில் அழைத்து தன்னை முஸ்லிம்களில் உள்ளவன் என்று கூறுகிறவனை விட அழகிய சொல் சொல்பவர் யார்?’ ( அல்குர்ஆன் 41:33)

அல்லாஹ்வுடைய நெறிநூலான அல்குர்ஆனில் ஏராளமான, பாடங்கள், படிப்பினைகள், அறிவுறுத்தல், எச்சரிக்கை, அத்தாட்சிகள் விவரிக்கப்படுகின்றன. மனிதர்களுக்கு எந்த ஒரு செய்தியைக் கூறினாலும், அந்த செய்தியின் முக்கியத்துவத்திற்குத் தகுந்தாற்போல், அல்லாஹ் தன் படைப்பின் மீது சத்தியமிட்டுக் கூறுவான். அல்லது தன் படைப்பினங்களை உதாரணமாகக் காட்டி அச்செய்தியை கூறுவான், அல்லது தனது நபிமார்களை சாட்சியாக வைத்து அச்செய்தியை அறிவிப்பான். இது அல்லாஹ்வின் வழி முறை, அவனது சுன்னத்.

இந்த உம்மத்திற்கு “முஸ்லிம்கள்’ என்று பெயரிட்டு விட்டு அத்துடன் அல்லாஹ் விட்டு விடவில்லை. அதற்கு சாட்சியாக நபி(ஸல்) அவர்களை ஆக்குகிறான். ”

அவன் தான் இதற்கு முன்னரும் இந்(நெறிநூ)லிலும் உங்களுக்கு “முஸ்லிம்கள்’ என்று பெயரிட்டான்; (இதற்கு) நம்முடைய தூதரே சாட்சியாக இருக்கிறார்.’ (அல்குர்ஆன் 22:78)

இன்றைய நவீன(பித்அத்) ஸலஃபீ-தவ்ஹீத் இயக்கத்திற்கு பெயர் வைத்தது யார்? சாட்சியாளர் யார்? உதாரணமாக, தமிழகத்தில் 1986ல் ஒன்றுபட்டிருந்த ஒரே முஸ்லிம் ஜமாஅத்தை உடைத்து “அஹ்லே குர்ஆன் வல் ஹதீஸ் (AQH) பின்பு “ஜம்மியத்து அஹ்லே குர்ஆன் வல் ஹதீஸ்’ (JAQH) என்று புது ஜமாஅத்தை நிறுவி பெயரிட்டவர் S.கமாலுத்தீன் மதனீ. இந்த உடைப்பு வேலையில் ஊக்கமுடன் சாட்சியாக இருந்தவர் P. ஜெய்னுலாப்தீன் உலவி.

பின்பு அதையும் உடைத்து மூன்றாவது ஜமாஅத் (TMMK) “தமுமுக’வை கட்டி எழுப்பினார். இதற்கு சாட்சியாக சிலர் இருந்தனர். அண்ணன் PJ அதையும் உடைத்து பங்கு பிரித்துக் கொண்டு நாலாவது ஜமாஅத் நிறுவினார். இதற்கு “தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்’ என்று பெயரிட்டார். “ததஜா’விற்கு சாட்சியாளர் பாக்கர்.

நிறுவனத்தில் உள்ள பங்குதாரர்களை குறைக்க கணக்குப் போட்டு, PJ யால் “பாலியல் பாக்கர்’ என்று பட்டம் கொடுத்து வெளியேற்றப்பட்டார். பட்டம் வாங்கி வெளியே வந்த பாக்கரும் அண்ணன் வழியில் ஐந்தாவது ஜமாஅத்தை ஏற்படுத்தி விட்டார். “அகில இந்திய தவ்ஹீது ஜமாஅத்’ இதற்கு சிலர் சாட்சியாளரானார்கள். இன்ஷா அல்லாஹ் இனி வருங்காலங்களில் இந்த ஐந்து ஜமாஅத்கள் ஐம்பது ஜமாஅத் ஆக மாறும். அதற்கும் “அகில உலக தவ்ஹீத் ஜமாஅத்’ பின்பு “சந்திர கிரக தவ்ஹீது ஜமாஅத்’ “செவ்வாய் கிரக தவ்ஹீது ஜமாஅத்’ என்று கிரகம் பிடித்து அலைவார்கள்.

ஏன் இவர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள்? அல்லாஹ் இட்ட முஸ்லிம்கள் பெயரில் ஏன் இவர்களால் ஒன்றுபட முடியவில்லை. காரணம் வேறு ஒன்றும் இல்லை, இவர்கள் தங்கள் மன இச்சைக்கு அடிமைப்பட்டு விட்டனர். இவர்களுக்கு (7:175ல்) அல்லாஹ் ஒருவனை உதாரணமாக கூறுகிறான். வழிகேட்டில் இருந்தவனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டிய பின்பும் மீண்டும் வழிகேட்டில் சென்றவன்.

சில வருடங்களுக்கு முன் தவ்ஹீது பேசும் மவ்லவிகள் தக்லீதுகளாக இருந்து, கத்தம், பாத்திஹா, கந்தூரி சடங்கு, மெளலூது மீலாது என்று கூலிக்கு கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தனர். அல்லாஹ் இவர்களுக்கு நேர்வழி காட்டினான். ஆனாலும் இவர்கள் தங்கள் மனோ இச்சையை ரப்பாக கருதி, பாம்பு சட்டையை உரிப்பது போல் தக்லீது சட்டையை உரித்து விட்டு, தவ்ஹீது சட்டையை போட்டுக் கொண்டு, கரன்ஸி கலக்க்ஷனில் இறங்கி விட்டனர். ஒன்றுபட்ட உம்மத்தை தொடர்ந்து பிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஷிர்க், பித்அத், நிறைந்த தக்லீத் வல் ஜமா அத்தில் இவர்கள் இருந்த போதும், மக்களை ஷாபீ, ஹனபீ எனப் பிரித்து சட்டம் சொல்லி சம்பாதித்தனர். இன்று நேர்வழிக்கு வந்த பின்னரும் தவ்ஹீதை சொல்லியே தவ்ஹீதை பிரிக்கிறார்கள். அன்று அன்றாடம் காய்ச்சிபோல் காசைப் பார்த்தனர். தற்போது அன்னிய செலவாணியில் கரன்ஸியை கைப்பற்றுகின்றனர். ஒட்டுமொத்தத்தில் முஸ்லிம் சமுதாயத்தை கூறுபோட்டு சோறு தின்பவர்கள்.

ஷைத்தானுடன் கை கோர்த்த இயக்க ஆலிம்கள்
இலங்கை, தமிழ்நாடு, கேரளாவிலிருந்து இளம் ஆலிம்கள் மதீனா இஸ்லாமிய பல்கலைக் கழகத்திற்குப் படிக்கச் சென்றனர். படிப்பு முடிந்து மதனீ பட்டத்துடன் இந்தியா வந்த இளம் ஆலிம்கள் ஆங்காங்கே பிரச்சாரம் செய்தனர். மவ்லவி P.J. மற்றும் மவ்லவி அல்லாத அபூ அப்தில்லாஹ் போன்றோர் ஒன்றிணைந்து “அந்நஜாத்’ வாயிலாக விழிப்புணர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தினர். மக்களும் சத்தியப் பாதையை நோக்கி கூட்டம் கூட்டமாக ஓடிவந்தனர்.

இது ஷைத்தானுக்குப் பொறுக்குமா? சதி ஆலோசனை வலை பின்னி அதில் தவ்ஹீது மெளலவிகளை தூண்டிவிட்டான். என்ன தூண்டினான்? புதிதாக ஒன்றும் இல்லை. அன்று இப்லீஸ் அல்லாஹ்விடம் வாதம் செய்து, நான் நெருப்பு உயர்ந்தவன்; மண்ணான தாழ்ந்த ஆதத்திற்கு தலை சாய்க்க முடியாது என்று சொல்லி தோற்று வெளியேறினான். அதே வாதத்தை தவ்ஹீது மெளலவிகளிடம் வைத்து வெற்றி பெற்றான்.

“நாமெல்லாம் அரபி படித்துப் பட்டம் பெற்ற ஆலிம்கள்; சாதாரண பாமர மக்களோடு சேர்ந்து தாவா செய்தால் அது எடுபடாது. நம் மதிப்பு போய்விடும். ஆகவே அவாம் அபூ அப்தில்லாஹ்வை ஓரம் கட்டுவோம் என மதனீகள் உலவீகள் உள்ளத்தில் ஷைத்தான் பிரிவினை விஷ விதையை தூவிவிட்டான். முதலில் அது “தவ்ஹீது ஜமாஅத்துல் உலமா’ செடியாக வளர்ந்தது. முஸ்லிம்களை “ஆலிம் -அவாம்’ என இதன் மூலம் பிளந்தனர். இதை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கினான்.

ஒன்றுபட்ட உம்மத்தின் மீது இவர்கள் அடித்த இரண்டாவது அடி… “இணை வைப்பவர்கள் பின்னால் நின்று தொழாதீர்கள்’ உடனடியாக தனிப்பள்ளிக்கு கலக்சன் செய்து பள்ளி கட்டினர். போட்டி பொறாமை உலகியல் ஆசை, அதிகார மனப்பான்மை காரண மாகவே போட்டி பள்ளிகள் கட்டப்பட்டன என்பதற்கு அவர்களின் செயல்பாடுகளே போதிய ஆதாரங்களாக இருக்கின்றன.

அரசு சாராயம் மூலம் சமுதாயத்தை சீரழித்து வரும் லாபத்தில் ஒத்த ரூபா அரசி கொடுப்பது போல், தவ்ஹீது மெளலவிகள் சமுதாய பிரிவினை எனும் கொடிய ஹராமை செய்து சமுதாய சேவை செய்கிறார்கள். “சொல் சுல்த்தான்-செயல் ஷைத்தான்’ ஆம்! “ஸலஃபி -தவ்ஹீத்’ என்ற இரண்டு சொற்களைக் கொண்டு ஷைத்தானிய வழியில் பிரிவினை செய்கிறார்கள். சுயநல ஆலிம்களின் சூது விளையாட்டிற்கு அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர்.

அன்புள்ள முஸ்லிம் சகோதரர்களே! சகோதரிகளே!
இஸ்லாம் மிக எளிமையான மார்க்கம், எழுதப் படிக்கத் தெரியாத மனிதரை, நம்மைப் போன்ற எளியவர்களுக்காக தூதராக ஆக்கிய மார்க்கம். கொள்கை குழப்பம் இல்லாத ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. தவ்ஹீது புரோகித ஆலிம்களின் சூழ்ச்சிக்கு பலியாகி நாம் பிரிந்து விடக்கூடாது. பிரிவினைக்கு இஸ்லாத்தில் எள் முனையளவும் இடம் இல்லை. இன்றைய இயக்க ஆலிம்களும் ஷைத்தானுடன் கூட்டுச் சேர்ந்து உம்மத்தைப் பிரிக்கிறார்கள்.

பெரும்பாலான சகோதரர்களுக்கு “தவ்ஹீத்’ என்ற வார்த்தையை கேட்டதும் ஒருவித மயக்கமும், ஈர்ப்பும் ஏற்படுகிறது. ஒருவன் “அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வர?லுஹூ’ என்ற கலிமா மொழிந்தவுடன் அவன் உடனடி தவ்ஹீதாக ஆகி விடுகின்றான். ஏனென்றால் முஸ்லிம் என்றாலே தவ்ஹீது தான். எனவே தனி தவ்ஹீது லேபிள் ஓட்ட வேண்டியது இல்லை. தனி ஜமாஅத் தேவையில்லை, “சில முஸ்லிம்கள் ஷிர்க்-பித்அத் செய்கிறார்களே? நான் எப்படி பிரித்துக் காட்டுவது? ஆகவே தனி தவ்ஹீத் ஜமாஅத்’. இது ஷைத்தானின் உபதேசம்!

அன்புச் சகோதரர்களே! சகோதரிகளே! நீங்கள் இப்படி பிரித்துக் காட்டினால் தான் அல்லாஹ்வுக்குத் தெரியும் என்ற நிலையில் அல்லாஹ் இல்லை; அவன் பேரறிவாளன், சத்தியமும், அசத்தியமும் விளங்காத கொள்கை குழப்ப முஸ்லிம்கள் தான் 73 கூட்டமாக பிரிவார்கள். ஒரு கூட்டம் மட்டுமே சுவனம் செல்லும். அந்த ஒரு கூட்டத்தை அல்லாஹ் மட்டுமே தேர்ந்தெடுப்பான். தவ்ஹீது ஆலிம்கள் அல்ல. சுவனம் செல்லும் கூட்டத்தில் நுழைய உங்கள் செயல்கள் முஸ்லிம்கள் என்ற பெயரில் மட்டுமே இருக்க வேண்டும். “முஸ்லிம்களாக’ வாழ்ந்து “முஸ்லிம்களாக’ மரணித்தால் தான் சுவனம்.

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான். (குர்ஆன் 2:208)

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இறை உணர்வு (தக்வா) கொள்ள வேண்டிய முறைப்படி இறை உணர்வு கொள்ளுங்கள். மேலும் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள். இன்னும் நீங்கள் அனைவரும் ஒரே ஜமாஅத்தாக அல்லாஹ்வின் கயிறை (குர்ஆனை) வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். (ஒருபோதும்) நீங்கள் பிரிந்து விடாதீர்கள். (குர்ஆன் 3:102, 103)

S.ஹலரத் அலி, ஜித்தா

{ 37 comments… read them below or add one }

Ishad November 5, 2012 at 1:41 am

I appreciate this article, and I’d like to say thanks to the Almighty Allah to be a Muslim.

Reply

haja jahabardeen November 5, 2012 at 5:24 am

ஒரு அருமையான கட்டுரை ! இயக்கத்தை நம்பாதீர்கள் எல்லா இயக்கமும் பணமும் ,பதவியும் உள்ளே நுழைந்துவிட்டது .இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக அவர்கள் பாடுபடவில்லை ,மாறாக அவர்களின் இயக்கத்திற்காக பாடுபடுகிறார்கள் .இதுதான் உண்மை! நாம் எல்லோரும் முஸ்லிம் ! தௌஹீத்வாதிகள் என்றோ ,அல்லது சுன்னத்ஜமாதோ என்றோ ,அல்லது இன்ன பிற இயக்கம் பெயரை சொல்லி வருவதினால் என்ன சாதிக்க போகிறார்கள் ? என்னதான் சாதித்தார்கள் ? ஒன்றும் இல்லை ! பிரிவுதான் ,பிளவுதான் ,சண்டைதான் ,சச்சரவுதான் , எங்கு பார்த்தாலும் பிரச்சனை .சுன்னத்ஜமாத்து என்று சொல்லிக்கொண்டு ,அவர்கள் எந்த சுன்னத்தை ?செய்கிறார்கள் ? அனாச்சாரம் ,நூதன பழக்க வழங்கள் , இன்னும் புதிய வழிபாடுகள் ! அல்லாஹ் தான் நம் அனைவரையும் காப்பாற்ற வேண்டும்! குழப்பங்களை விட்டு அதிகம் அதிகம் அல்லாஹ் விடம் பிராத்தனை செய்வோம் ! பிளவுபடுத்தும் தௌஹீத்வாதிகள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன் .இன்ஷாஅல்லாஹ் படித்பாருங்கள் !(islam -bdmhaja .blogspot .com ) இதை எழுதிய அன்பு சகோதரர் அவருக்கு அல்லாஹ் நற்கிருபை செய்வானாக ..ஆமீன் ..என் மனதில் உள்ள ஆதங்கத்தை தாங்கள் எழுதிவிட்டீர்கள் ! அல்ஹம்துலில்லாஹ் !!!

Reply

M. sabji November 5, 2012 at 12:20 pm

p .j என்ற தனிப்பட்ட மனிதரை குறை கூறுவதற்கு இவ்வளவு பெரிய கட்டுரை தேவை இல்லாதது . கட்டுரை எழுதியவர் ஏன் பிரிந்து வந்தார்கள் என்று அறியாமல் முட்டாள் தனமாக கட்டுரைகள் எழுதாதீர்கள் .

Reply

haja jahabardeen November 6, 2012 at 1:46 am

Assalamu alaikum! dear bros! M.SABJI! you can say that why they are divided ! please say !

Reply

ilyas December 16, 2012 at 10:02 pm

sagodharare katturai sariyagathan ezhudhiullargal kevalamane oru pen vishiyethilthane pirindhargal ivargalellam unmaiyai ulagirku koorubavargalam iraiva idhu ponre asaththiyevadhigalidemirundhu kaapaatruvayage aameen aameen ya rabbal aalameen

Reply

Cabir MOUGAMADOU November 6, 2012 at 8:26 pm

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

ஆக மொத்ததில் பலிகடாவாக ஆக்கப்பட்டது குறிப்பாக தமிழ் பேசும் முஸ்லீம்களே…..எந்த ஜமாஅத் சொல்வது சரி என தெரியாமல் தினம், தினம் ஒரு குழப்பம்…நாளுக்கு ஒரு புதிய செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றது…வல்ல இறைவன்தான் அனைவருக்கும் ஒரு நல்ல வழியை காட்ட துஆ செய்வோமாக !!!!!!!!! ஆமீன்….

Reply

M. sabji November 8, 2012 at 3:38 pm

கபீர் முகமது அவர்களே அஸ்ஸலாமு அழைக்கும்
எந்த ஜமாஅத் சொன்னாலும் சரி அது குரானுக்கும் ஹதீஸுக்கும் முரண்படாமல் இருந்தால் ஏற்று கொள்ளுங்கள் குரானுக்கோ ஹதீசுக்கோ முரண்பட்டால் அதனை தூக்கி குப்பையில் போட்டுவிடுங்கள்

Reply

saleem November 13, 2012 at 10:48 pm

எல்லா இயக்கத்தினரும் ஜமாஅத்தினரும் தங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை சொல்கிறார்கள்; செய்கிறார்கள். அவர்களில் எந்தக் கூட்டத்தினரும் எங்களுடைய கருத்தை சிந்திக்காமல் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை. இந்நிலையில் பொதுமக்கள் மார்க்க விஷயத்தில் கவனக்குறைவாக இல்லாமல் யார் சொல்வது சரி ? யார் சரியான ஆதாரம் காட்டுகிறார்கள்? என்று பிரித்தறிந்து பின்பற்ற வேண்டும். உலக விஷயத்தில் குழப்பம் ஏற்படும் போது சிந்தித்து முடிவெடுக்கம் மக்கள், மார்க்க விஷயத்திலும் சரி எது? தவறு எது? என்று சிந்தித்து சரியானதை தேர்வு செய்யும் வழக்கத்திற்கு வரவேண்டும். மற்றொரு விஷயம்…. இயக்கத்தினர்கள் ஜமாஅத்தினர் மக்களை குழப்புகிறார்கள்; பிரிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டிக் கொண்டு மக்களை யார் சொல்வதையும் கேட்டு சிந்திக்க விடாமல் பெயரளவு வாழ தூண்டுவதையே கொள்கையாக கொண்டு சிலர் கிளம்பிவிட்டார்கள். நாங்கள் சொல்வதை சிந்தித்து பாருங்கள் என்று சொல்லும் ஜமாஅத்தார்களை விட எந்த ஜமாஅத் சொல்வதையும் காதுகொடுத்துக் கேட்காதீர்கள் என்று கூறும் இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். இத்தகையவர்களின் கூற்றை செவிமடுத்து மார்க்க் சிந்தனையிழந்து வாழும் நிலையிலிருந்து வல்ல இறைவன் நம்மை காப்பானாக…

Reply

முபாரக் September 30, 2015 at 1:46 am

சூப்பர் கம்மெண்ட்..! நான் நினைத்ததை அப்படியே கம்மெண்ட் போட்டிருக்கிறீர்கள். அல்லாஹ் நமக்கு மார்க்கத்தை எளிதாக்கிதான் வைத்துள்ளான். ஆனால் இன்று பல குழப்பவாதிகளுக்கு மத்தியில் ஆதாரமான கருத்தை பெறுவது எப்படி. இன்று பலர் சில ஜமாத்தை குறை கூறுவதற்காகவே ஜமாத் நடத்துகின்றனர்.

Reply

abbas riyazi November 15, 2012 at 10:06 am

assalamu alaikum alhamdu lillah miga arumiyana katturai unmayyai solli yirkkirirgal iniyavadu makkal vilangi kollattum

Reply

rajamohamed November 16, 2012 at 2:50 pm

I accept this article but still there is a truthful Islamic organisation working among Muslim community through out India like popular front of India

Reply

mim aswar November 21, 2012 at 10:19 pm

allahvaiyom thotharaiyom pin fatronhal anro iraivan solhiran
nabi sonnarhal pirivo halathil jamathul muslimeenidanom athan imamidanom inaithironhal anro sonnarhal
anal muslim samuham fale firivohalahi vittarhal allahthan anaivarokkom neran valiyai katta vandom

Reply

hidayathulla November 24, 2012 at 8:13 pm

Asslamu alaikum
Allah yellorukkum nalla oru sinthanai yum Gnathayum kodukka dua syvom

Reply

safras December 12, 2012 at 8:35 pm

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகதுஹூ..

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்!
(அல்குர்ஆன் 47:33)

(ஏக இறைவனை) மறுத்து அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்துப் பின்னர் மறுப்போராகவே மரணித்து விட்டவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.
(அல்குர்ஆன் 47:34)

Reply

Dhivya December 22, 2012 at 2:55 pm

Asalamu alaikum to all, I am very much interested in Islam and now i m on the way to the Almighty Allah and the Al-Quran, But some times i have the confusion regarding the Jama-aths, in which i should be stick to. But now i have come to know the truth, thanks for the information. Please pray for me to become the Muslim girl with the blesses of almighty Allah.

Reply

wajith January 31, 2013 at 4:03 pm

Walaikum Assalam

Dear Sister,

Don’t confusion plz daily read alquarn.

Wassalam

Reply

mrazik July 26, 2013 at 12:41 am

Oworu poiyeyoum palamurrai solli unmaiyaakka muyarchikkiraargalo atharkku hasarath ali yedutha muyarchiye p aratta vendum

Reply

abdul azeez December 26, 2012 at 9:09 pm

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோதரி திவ்யா அவர்களுக்கு. குர்ஆன் மற்றும் ஹதீத் ஒலிகளில் உங்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நடத்திட உதவி புரிவாகட்டும் ஆமீன்.

இந்த இஸ்லாத்தில் பிரிவு பிளவு என்ற நிலைக்கு இடமில்லை. அந்த பிரிவில் ஏதாவதொன்றை மனதில் நிறுத்திக் கொண்டு நீங்கள் உள்ளே நுழைந்தால்.நீங்கள் பழைய திவ்யாவாக தான் இருப்பீர்கள் தவிர உங்களின் நோக்கத்தை அடைய தோற்றுவிட்டீர்கள். என்பதை திடமாக தெரிந்துக் கொள்ளுங்கள்.

மா சலாம்.

அப்துல் அஜீஸ்

Reply

b.m.fasmy January 3, 2013 at 9:55 am

p.j enra thanippatta ippaty kurai kooruvathu markkaththil nallatha?////////////

Reply

Abdul Basith-mayavaram January 6, 2013 at 7:14 pm

நண்பர் ஹலரத் அலி அவர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும், பல லட்சக்கணக்கான தமிழ் பேசும் முஸ்லீம்களின் மனக்குமுறலை உங்கள் கட்டுரையின் வாயிலாக வெளிப்படுத்தியமைக்கு நன்றி எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் சமூக அக்கறைக்கு உதவி செய்வானாக. நம் தமிழகத்தில் பெற்றோருக்கும் பிள்ளை களுக்கும் நல்ல உறவு இல்லை, ரத்த பந்துக்களிடத்தில் நல்ல உறவு இல்லை, நண்பர்கள், ஊர் ஜமாஅத் எங்கு பார்த்தாலும் பிரிவினை காரணம் மக்களிடையே ஒற்றுமையை குலைத்து இந்துக்களில் பிராமனர்களைப் போல் பிரிவினையை வளர்க்கும் மேற்சொன்ன கும்பலிடமிருந்து நம்மை ரப்புல் ஆலமீன் பாதுகாத்தருள்வானாக. ஆமீன். உங்களின் இந்த கட்டுரை பல பகுத்தறிவில்லாத அடிமை கூட்டத்துக்கு செருப்படி, அவர்கள் போகும் பாதை மிகவும் தவறானது, ஆபத்தானது என்பதை அவர்கள் உணரும் காலம் வெகுவிரைவில் வரும். அப்பொழுது அவர்கள் முகம் கருத்து சிருத்துவிடும்.

Reply

ibrahim January 9, 2013 at 2:53 pm

நண்பர் அப்துல் பாஸித் அவர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும் ,
நண்பரே மிகவும் அழகாக( செருப்படி ) கருத்து சொல்லுயுள்ளீர்கள்
இவ்வுலகில் ஒற்றுமையாக வாழலாம் சந்தோசமாக (மாற்று மதத்தவர்களை போல் அல்லாஹ்விற்கு இணை கற்பித்து) வாழலாம்.ஆனால் மறுமை என்ற ஒரு நிலையான வாழ்க்கையை மறந்து விட்டால் நீங்கள் சொல்வது போல் வாழலாம். சிந்தித்து செயல்படுங்கள். இவ்வாறு ஒற்றுமை என்று பேசி பேசி மறுமையில் நரகத்தில் நுழைய ஆசை படாதீர்கள். அல்லாஹ்வை மட்டும் வணங்கி அவனது தூதர் சொன்ன வழியில் ஒன்று படுவோம் அல்லா நம் அனைவருக்கும் அருள் புரிவானாக ஆமின்.

Reply

BADYRUDEEN January 24, 2013 at 5:47 pm

MATRAWARGALAI KURAI SOLWADAI VTTUVTTU SAMUDAYATHIRKKU PROJANAMANA VSHAYANGALAHA SOLLA WENDUM

Reply

ahmedkutty February 12, 2013 at 8:18 pm

assalamualaikkum jamaathul muslimeen yendrum yenda sahabiyum peyar waikka villai hudaifa raliyallah anhu awargal arivikkum hadees neengal sollum jamaathul muslimeen alla adu aatchiyodu koodiya koottamaippai kurikkum nabi sallalahu alaihiwasallam sonnargal yenadu ummathil sathiyathil oru koottam velippadayaga erukkum yendru adu yenda koottam yendru ungalal solla mudiyuma awargal than kalviyai murayaga sumanda salaf ulamaakkal than thayawu seidu markkathai murayaga katru adai pinpatri adarkkupin dawa seiyungal

Reply

abdul azeez February 14, 2013 at 12:29 am

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் அஹ்மத் குட்டி

// nabi sallalahu alaihiwasallam sonnargal yenadu ummathil sathiyathil oru koottam velippadayaga erukkum yendru adu yenda koottam yendru ungalal solla mudiyuma awargal than kalviyai murayaga sumanda salaf ulamaakkal than //

என்னால் சொல்லமுடியவில்லை. நீங்கள் எந்த அடிப்படையில் அப்படி கூறினீர்கள். அப்படி என்றால்

நபி (ஸல்) அவர்கள் சலப் உலமாக்கள் என்ற வார்த்தையோடு சேர்த்து அந்த ஹதீதில் இருக்கிறதா?

அப்படி இருந்தால் இங்கு அதை சமர்ப்பியுங்கள். அது தான் முறையாக கற்றவர்களுக்கு உண்டான அடையாளம். வெறுமனே யாரையாவது தலையில் தூக்கிக்கொண்டு ஆடுவதில் பிரயோஜனம் இல்லை

மா சலாம்.

அப்துல் அஜீஸ்

Reply

ziya February 13, 2013 at 3:19 am

Assalamualaikkum !
ORU ARABIAN PALAMOLI UNDU ” ALLAH ARIVAI PANKITTAAN ELLORUM DHIRUPTHIYANARKAL (EN ENDRAL OVVARUVARUM NAN ARIVALI ENDRU NINAITHATAL) ADUTHU SELLVATHAI PANKITTAN YARUM DHIRUPTHI ADAYA VILLAI.
ENAVE YAR ORU KARUTHAI SONNAL UDANE OVVARUVARUM DHAN ARIVAIKONDU ARAINDHU YERKAVUM.
MARKKA VISAYATHIL KURAN AND HADHISAI PENPADRA VENNDUM.

Reply

SULAIMAN March 6, 2013 at 5:07 pm

Assalmau alikum varah… Nice Thought Brother Mr.Ali

Reply

malik john September 20, 2014 at 7:04 pm

Masha Allah, This is very very important article this time. Because some people create the wrong meaning for thowheed and this word is own for them only. I am dua to ALLAH for all Muslim brothers and sisters, protect from that persons.

Reply

A.ABDULRAJAK September 21, 2014 at 5:26 pm

20:94. (இதற்கு ஹாரூன்:) “என் தாயின் மகனே! என் தாடியையோ என் தலை (முடி)யையோ பிடி(த்திழு)க்காதீர்கள்; “பனீ இஸ்ராயீலிடையே நீங்கள் பிரிவினையை உண்டாக்கி விட்டீர்கள்; என் வார்த்தைக்காக நீங்கள் காத்திருக்கவில்லை!” என்று நீர் கூறுவீரோ என நிச்சயமாக நான் அஞ்சினேன்” என்று கூறினார்.

30:32. எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ; (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்

3:103. இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் – உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் – நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை – வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்
6:159. நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை; அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது – அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்
42:14. அவர்கள், தங்களிடம் ஞானம் (வேதம்) வந்த பின்னர், தங்களுக்கிடையேயுள்ள பொறாமையின் காரணமாகவேயன்றி அவர்கள் பிரிந்து போகவில்லை; (அவர்கள் பற்றிய தீர்ப்பு) ஒரு குறிப்பிட்ட தவணையில் என்று உம்முடைய இறைவனின் வாக்கு முன்னரே ஏற்பட்டிருக்காவிடில், அவர்களிடையே (இதற்குள்) நிச்சயமாக தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்; அன்றியும், அவர்களுக்கு பின்னர் யார் வேதத்திற்கு வாரிசாக்கப்பட்டார்களோ நிச்சயமாக அவர்களும் இதில் பெரும் சந்தேகத்தில் இருக்கின்றன
trust is allowed in islam. but variety of jamath not allowed. we have MUSLIM LEAGUE. muslim league word translated to arabic jamatal muslimin. unfortunately our muslim league is only political party only. notmuch involvement in

Reply

JUNAID October 12, 2014 at 5:09 pm

ASSALAMU ALAIKUM SAGOTHARARKALEY…
avargal pakam thavaru illai endral sagotharargaluku unarthi iruka vendumey thavira thaniaga oru samoogathai uruvakkum muyarchi varuthathai alikirathu.naam anavairum sagothararkal enbathey marakamal irupathu muslim samuthayathirku nalathu.

Reply

M.M.A.NATHARSHA November 11, 2014 at 4:50 pm

GOOD ARTICAL THANKS FOR GOOD INFORMATION

Reply

Hassain November 23, 2014 at 2:32 am

MashaAllah very nice and this time required article. All muslims are confuse sate now including me since my friends are in salaf group. Really its very useful article specially me.

Jazakkahallah khair.
Hassain

Reply

rifath ahamed December 6, 2014 at 9:59 am

buhari
3606. ஹுதைஃபா இப்னு யமான்(ரலி) அறிவித்தார்.
மக்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நன்மையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் நபி அவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சிய காரணத்தால் தான் (அதைப் பற்றிக் கேட்டேன்.) நான், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் அறியாமைக் கால மாச்சரியத்திலும், தீமையிலும் மூழ்கிக் கிடந்தோம். அப்போது அல்லாஹ (இஸ்லாம் எனும்) நன்மையை எங்களிடம் கொண்டு வந்தான். இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை (குழப்பம்) இருக்கிறதா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘ஆம் (இருக்கிறது)” என்று பதிலளித்தார்கள். நான், ‘இந்தத் தீமைக்குப் பிறகு நன்மை ஏதும் இருக்கிறதா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம். ஆனால், அதில் சற்று கலங்கலான நிலை (குழப்பம்) இருக்கும். என்று பதிலளிக்க நான், ‘அந்தக் கலங்கலான நிலை என்ன?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஒரு சமுதாயத்தார் என்னுடைய நேர்வழியில்லாத ஒன்றைக் கொண்டு பிறருக்கு வழி காட்டுவார்கள். அவர்களில் நன்மையையும் நீ காண்பாய்; தீமையையும் காண்பாய்” என்று பதிலளித்தார்கள். நான், ‘அந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை உண்டா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம், நரகத்தின் வாசல்களுக்கு (வருமாறு) அழைப்பவர்கள் சிலர் தோன்றுவார்கள். அவர்களின் அழைப்பை ஏற்பவனை நரகத்தில் அவர்கள் எறிந்து விடுவார்கள்” என்று பதிலளித்தார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! அவர்க(ளுடைய அடையாளங்க)ளை எங்களுக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘அவர்கள் நம் இனத்தைச் சேர்ந்தவர்களாகவேயிருப்பார்கள்; நம் மொழிகளாலேயே பேசுவார்கள்” என்று பதிலளித்தார்கள். நான், ‘நான் இந்த (மனிதர்களைச் சந்திக்கும்) நிலையை அடைந்தால் என்ன (செய்ய வேண்டுமென்று) எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தை (கூட்டமைப்பை)யும் அவர்களின் தலைவரையும் (இறுகப்) பற்றிக் கொள்” என்று பதில் கூறினார்கள். அதற்கு நான், ‘அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஒரு தலைவரோ இல்லை (பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால்… (என்ன செய்வது)?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘அந்தப் பிரிவுகள் அனைத்தையும்விட்டு (விலகி) ஒதுங்கி விடு; ஒரு மரத்தின் வேர் பாகத்தை பற்களால் நீ கவ்விப் பிடித்திருக்க நேர்ந்து, அதே நிலையில் மரணம் உன்னைத் தழுவினாலும் சரி (எந்தப் பிரிவினரோடும் சேராமல் தனித்தே இரு)” என்று பதிலளித்தார்கள்.

aahave jaathul muslimeen enroru koottam oru ameerkku keela oru koottamaha quran hadhees mattum pin patri kondu ullathu athai neenkal aaraya vendama?

Reply

Sadiq(Nahangudi) April 22, 2015 at 6:45 pm

Dear Brother

Please send Br-Ali to participate with TNTJ Immams (Vivatham )then we under stand he is true or not.

Reply

Ajmeer ali May 6, 2015 at 4:14 am

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். சகோதரே! இஸ்லாம் ஒற்றுமையையே விரும்புகிறது,பிரிவினையை அல்ல. எனவே முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஒற்றுமையாய் இருந்து,நம்மில் எந்த சண்டையும் இல்லாமல்,நபி வழியை பின்பற்றி நடப்போம்,அல்லாஹ் நம் அனைவருக்கும் உதவி புரிவானாக,ஆமின்.

Reply

M.Jahabar Ali May 16, 2015 at 3:03 pm

Dear Br. Assalamu Alaikum Warah…. It’s a good article. Everybody should read and practice. We must call us MUSLIM. Jazakallahu Khairan.

Reply

rifka June 18, 2015 at 2:17 pm

Assalamualaikum brother,maasha alh i truly accept this article alhmdullillah.

Reply

yasar August 1, 2015 at 5:53 pm

assalamu alaikkum , oru nalla katturai

Reply

Cancel reply

Leave a Comment

Previous post:

Next post: