பர்லு தொழுகைக்குப் பிறகு கூட்டு துஆ

in பித்அத்

நபி அவர்களும் அவர்களின் கலீபாக்களும், மற்றும் சஹாபாக்களும் பர்லு தொழுகைக்குப் பிறகு கூட்டாக துஆ ஓதியதற்கு எவ்வித ஆதாரமுமில்லை. அதாவது மாம் துஆ ஓத மற்றவர் “ஆமீன் ஆமீன்” என்று கூறும் நிலை (ன்று நமது பகுதிகளில் நடைமுறையில் ருப்பது போல்) அவர்கள் காலத்தில் கிடையாது.

    நம்மைவிட துஆ கேட்கும் வகையில் பன்மடங்கு ஆர்வம் கொண்டுள்ள நபி அவர்களும், அவர்களின் உத்தம ஸஹாபாக்களும் ஒரு நேரத் தொழுகையிலும் கூட மாம் துஆ ஓத, மற்றவர் ஆமீன் கூறும் அமைப்பில் ருந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் ஹதீஸ்களில் கிடையாது. மாறாக நபி அவர்களும், சஹாபாக்களும் ஜமாஅத் முடிந்தவுடன் தனித்தனியே துஆ ஓதியுள்ளார்கள் என்பதையே ஹதீஸ்களின் வாயிலாக அறிய முடிகிறது.

    நபி அவர்கள் தொழுகையிலிருந்து திரும்பிவிட்டால் “மும்முறை” أأَسْتَغْفِرُ اللهَ அஸ்தஃபிருல்லாஹ்” என்று (கூறி) பாவமன்னிப்புத் தேடுவார்கள். (பின்னர்)اللَّهُمَّ أَنْتَ السَّلأمُ وَ مِنْكَ السَّلأمُ تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ وَ الإِكْرَم  “அல்லாஹும்ம அந்த்தஸ்ஸலாம் வமின்கஸ் ஸலாம் தபாரக்த்த யாதல் ஜலாலி வல்க்ராம்” என்று ஓதுவார்கள். என்று ஸவ்பான் (ரழி) அறிவித்துள்ளார்கள். (நூல்:முஸ்லிம், திர்மிதீ,ப்னுமாஜ்ஜா, அஹ்மத்)

    பொருள்:யா அல்லாஹ்! நீயே சாந்தியானவன். மேலும் உன்னிடமிருந்தே சாந்தி பிறக்கிறது கண்ணியமும், மகத்துவமும் மிக்கவனாகிய நீயே மிக மேலானவனாகும். மேற்காணும் துஆவை நபி அவர்கள் தாம் தொழ வைத்துவிட்டுத் தனித்த நிலையில் ஓதினார்களே அன்றி அவர்கள் தொழ வைத்தபின் ஓதிய துஆக்களுக்கு எந்த ஸஹாபியும் ஆமீன் கூறினார்கள் என்பதை ஹதீஸ்களில் காணமுடியவில்லை. ஆகவே நபி அவர்கள் தனித்து ஓதியது போன்றே மற்ற ஸஹாபாக்களும் ஓதியிருப்பார்கள் என்பதை நம்மால் உணர முடிகிறது.

    நபி அவர்கள், உங்களில் ஒருவர் தொழுதுவிட்டால் அவர் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ ஆரம்பித்து, பின்னர் நபி அவர்கள் மீது ஸலவாத்தோதி, பிறகு அவர் தாம், நாடியவற்றை (அல்லாஹ்விடம் கேட்டுப்) பிரார்த்திப்பாராக! என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஃபுழாலத்து பின் உபைத்(ரழி) நூல்: திர்மிதீ)

    நான் ஒரு முறை நபி அவர்களுடன் அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) ஆகியோர் ருக்கும் போது தொழுது கொண்டிருந்தேன். நான் தொழுதுமுடித்து உட்கார்ந்தவுடன் அல்லாஹ்வை போற்றிப் புகழ ஆரம்பித்து, பின்னர் நபி அவர்கள் மீது ஸலவாத்து கூறிவிட்டுப் பின்னர் எனக்காக துஆ கேட்டுக் கொண்டிருந்தேன், அப்போது நபி அவர்கள் நீர் கேளும்! தரப்படும் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் மஸ்ஊத்(ரழி) நூல்:திர்மிதீ)

    அல்லாஹ்வின்  தூதரே!  (அல்லாஹ்விடம்) மிகவும்  ஏற்று  கொள்ளப்படுவதற்கு தகுதிவாய்ந்த துஆ (வின் நேரம்) எது? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், கடைசி ரவின் நடுப்பகுதியும், பர்லான தொழுகைகளுக்குப் பிறகும் என்றார்கள். (அபூ உமாமா(ரழி) திர்மிதீ)

    மேற்காணும் ஹதீஸ்களின் வாயிலாக பர்லான தொழுகைகளுக்குப் பிறகுள்ள நேரம் துஆ கபூலாகக்கூடிய நேரம் என்பதையும் நமது தேவைகளை நாமே கேட்டுப்பெற முயற்சிக்க வேண்டும் என்றும் நபி அவர்கள் தமது ஸஹாபாக்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளார்கள் என்பதையும் அறிகிறோம்.

    இமாம் சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடித்தவுடன் நீங்கள் அனைவரும் ஆமின் கூறுங்கள்! நீங்கள் கூறும் ஆமீன் மலக்குகளின் ஆமீனுக்கு ஒத்தாக அமைந்து விட்டால் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும் என்று தமது ஸஹாபாக்களுக்கு ஆமீன் கூறும்படி ஆர்வ மூட்டிய நபி அவர்கள் பர்லான தொழுகைகளுக்குப் பிறகு நான் மட்டும் துஆ ஓதுகிறேன் நீங்கள் அனைவரும் நான் ஓதும் துஆவுக்கு ஆமீன் சொல்லிக்கொண்டிருங்கள் என்று ஒருபோதும் ஒரு வார்த்தைகூட அவர்கள் கூறியதாக சரித்திரமே ல்லை. வ்வாறு எந்த ஸஹாபியும் தாம் மக்களுக்குத் தொழவைத்த பின் அவர்கள் துஆ ஓத மக்கள் ஆமீன் கூறினார்கள் என்று ஹதீஸ் நூல்களில் காணப்படவில்லையே என்று தான் ஹதீஸ் கலா வல்லுனர்கள் கேட்கிறார்கள்.

    இமாம் துஆஓத பின்பற்றி தொழுதவர்கள் ஆமீன் ஆமீன் என்று கூறுவது நல்லது தானே வ்வாறு செய்தால் என்ன தவறு? என்று பலர் கருதுகிறார்கள். நல்லது தானே என்று கூறுபவர்கள் அந்த நல்லதை நபி அவர்கள் நமக்கு காட்டித் தராமல் சென்று விட்டார்கள் என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.

    ஒன்றை நல்லதுதான் என்று நாமாகக் கருதிக் கொண்டு எதையும் செய்துவிட்டுப் போவதா? மார்க்கத்தில் நல்லதென்று ஒன்றிருக்குமானால், அது நபி அவர்கள் கூறிய, அல்லது செய்து காட்டிய, அல்லது அங்கீகாரம் செய்த ஒன்றாகத்தான் அது ருக்க வேண்டுமே அன்றி, நாமாக நடைமுறை படுத்தினால் நல்லதாகிவிட முடியாது.

    உங்களை நரகத்தை விட்டும் தூரப்படுத்தி, சுவர்க்கத்தின் பக்கம் உங்களை அணுகச் செய்யும் (எந்த ஒரு நன்மையும் தீமையும்) உங்களுக்குத் தெளிவுபடுத்தப்படாது ஒரு விஷயமும் விடுபட்டு விடவில்லை என நபி அவர்கள் கூறினார்கள். (அபூதர்ரு(ரழி) நூல்: தப்ரானி)

    “நபித்தோழர்கள் செய்யாத வணக்க வழிபாடுகள் எதனையும் செய்யாதீகள். முன்சென்றவர்கள் பின் சென்றவர்களுக்கு எதனையும் விட்டு வைக்கவில்லை” என ஹுதைபா(ரழி) அறிவித்துள்ளார்கள்.” அல்லாஹ்வின் ஏவல்களைக் கொண்டும், நபி அவர்களின் நடை முறைகளைக் கொண்டும் மார்க்கத்தை போதுமாக்கிக் கொள்ளுங்கள். அதன் பின்னால் வந்தவர்கள் ஏற்படுத்திய புதுமை (பித்அத்)களை விட்டு விடுமாறு எச்சரிக்கை செய்கிறேன்.” என தாபியீன்களின் தலை சிறந்தவரும், சீரிய கலீபஃபாவுமான ப்னு அஜீஸ்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

{ 15 comments }

m.jainulabdeen February 15, 2011 at 10:38 pm

very good explain

haja jahabardeen February 18, 2011 at 3:24 am

ALLAH AKBAR ! VERY GOOD EXPLANATION !ALLAH BLESS YOU MY DEAR BROS!

ASHAK April 7, 2013 at 12:56 am

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,

தொழுகைக்குப்பின் இமாம் ஓதும் துஆவிற்குப் பின்பற்றித் தொழுதவர்கள் ”ஆமீன்” கூறும் இன்றைய நடைமுறையிலுள்ள கூட்டுத் துஆவிற்கு எந்த ஆதாரமும் சொல்லப்படவில்லை. மாறாக நபி (ஸல்) அவர்கள் கூட்டுத் துஆ ஓதினார்கள் என்றும் இல்லை! ஓதவில்லை என்றும் இல்லை! என்று சொல்லி, ”நான் சொல்கிறேன் ஓதியிருப்பார்கள்” என்று அனுமானம் தான் ஒலி நாடாவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இமாம் தமக்கு மட்டும் பிரார்த்திக்காமல் எல்லோருக்குமாக துஆச் செய்திடவேண்டும் என்பது பொதுவான விதி! ஒரு முஸ்லிம் தனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வது போல் தன் கண்ணெதிரே இல்லாத முஸ்லிம் சகோதரர்களின் நலனுக்காகவும் துஆச் செய்தால் ”ஆமீன்” – அதுபோல் உனக்கும் கிடைக்கட்டும். என்று வானவர் கூறுகிறார். சமூக பொது நலனில் தம் நலனையும் இஸ்லாம் உள்ளடக்கியுள்ளது.

”ஒரு முஸ்லிமான அடியார், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காக பிரார்த்திக்கும்போது வானவர் ”உனக்கும் அதைப் போன்றே கிடைக்கட்டும்” என்று கூறாமல் இருப்பதில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூதர்தா (ரலி) (நூல் – முஸ்லிம் 5272)

நான் ஷாம் நாட்டுக்குச் சென்றபோது (என் மனைவியின் தந்தை) அபூதர்தா (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றேன். அங்கு அவரைக் காண முடியவில்லை. (என் மனைவியின் தாய்) உம்முத் தர்தா(ரஹ்) அவர்களைக் கண்டேன். அவர் என்னிடம், ”இந்த ஆண்டில் நீங்கள் ஹஜ்ஜுக்குச் செல்ல நாடியுள்ளீர்களா?” என்று கேட்டார். நான் ”ஆம்” என்றேன்.

அதற்கு அவர் சொன்னார், அவ்வாறாயின் எங்கள் நலனுக்காகவும் பிரார்த்தியுங்கள் ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் ”ஒரு முஸ்லிம் கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகச் செய்யும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. அந்த முஸ்லிமின் தலைக்கருகில் நியமிக்கப்பட்ட வானவர் ஒருவர் உள்ளார். அந்த முஸ்லிம் தம் சகோதரருக்காக நன்மை வேண்டிப் பிரார்த்திக்கும்போதெல்லாம் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அந்த வானவர் ‘இறைவா! (இவரது பிரார்த்தனையை) ஏற்றுக்கொள்வாயாக! அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும் எனப் பிரார்த்திக்கிறார்” என்று கூறினார்கள்.

பிறகு நான் (அங்கிருந்து) புறப்பட்டுக் கடைத்தெருவுக்குச் சென்றபோது, அபூதர்தா (ரலி) அவர்களைச் சந்தித்தேன். நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறியதாக அவர்களும் என்னிடம் அறிவித்தார்கள். அறிவிப்பவர் ஸஃப்வான் பின் அப்துல்லாஹ் பின் ஸஃப்வான் (ரஹ்) (நூல் – முஸ்லிம் 5281)

கண்ணெதிரே உள்ளோருக்கும், இல்லாதோருக்கும் ஒரு முஸ்லிம் பிரார்த்தனை செய்யலாம். இது கூட்டுத் துஆவிற்கு ஆதாரமாகாது. ஒரு முஸ்லிம் தம் பார்வையில் இல்லாத சகோதர முஸ்லிம்களுக்காகவும் ஒருவர் மட்டுமே பிராத்திக்கிறார். இது கூட்டுத் துஆ அல்ல! என்பது போன்று இமாம் தமக்காக மட்டும் பிரார்த்திக்காமல் பிறருக்காகவும் பிரார்த்திக்கவேண்டும் என்று கூறப்படுகிறது. அதாவது, எல்லோருக்கமாக ஒருவர் துஆச் செய்தால் அது கூட்டுத் துஆ என்று தான் உரையாற்றப்பட்டுள்ளது. கூட்டுத் துஆவிற்கு ஆதாரம் கேட்போர் இதைக் கேட்கவில்லை.

கூட்டுத் துஆ என்பது ஒருவர் துஆ ஓத அதைக் கேட்டு அமர்ந்திருக்கும் மக்கள் ஆமீன் சொல்லவேண்டும் என்பதற்கு எந்த ஹதீஸும் ஒலி நாடாவில் சொல்லப்படவில்லை! மாறாக, இரண்டுக்கும் ஆதாரமில்லை என்றே உரையில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

(அல்லாஹ் மிக அறிந்தவன்)

2011/6/27 அபூமுர்ஸிதா

– عرض النص المقتبس –
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

அன்பு சகோதர, சகோதரிகளே;

கூட்டு துஆ கேட்கலாமா? என்று ஷைபுத்தீன் ரஷாதி ஹஜ்ரத் அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு அவர்கள் சொன்ன பதில் சரியாகத் தான் எனக்கு தெரிகிறது. இது சம்பந்தமான ஆடியோவை இத்துடன் இணைத்துள்ளேன். இதைக்கேட்டு விட்டு சரியாக இருக்கும்பட்சத்தில் அனைவரும் கடைபிடிக்கவும். மேலும் தவறுதலாக இருந்தால் அது எந்த விதத்தில் தவறுதலாக உள்ளது என்பதையும் குர்ஆன் மற்றும் ஹதீதுகளின் அடிப்படையில் தெளிவுபடுத்தவும்.

வஸ்ஸலாம்!

அன்புடன்,
உங்கள் சகோதரன்.

haroon May 2, 2013 at 10:30 pm

saifudeen rasadi is a clown.

Mahibal M. Fassy April 22, 2013 at 9:15 am

Is there any base or proof in Quran or Hadees for joint Dhua is not allowed? If so, please mention the numbers of the sentences.

mohammed nishath April 27, 2013 at 1:02 pm

ﻭﻋﻠﻴﻜﻢ ﺍﻟﺴﻼﻡ ﻫﺬﺍ ﺑﺤﺚ ﻻ ﺑﺪ ﺃﻥ ﻧﻌﻤﻖ ﻧﻈﺮﻧﺎ

A.M.Afzal May 27, 2013 at 10:53 pm

1. நபி (ஸல்) அவர்கள் தனியாக துஆ செய்ததற்கு ஆதாரம் இருக்கும் என்றால் ஒரு ஹதீஸை கொண்டுவந்து காட்டினால்
இவரின் கருத்தை ஏற்றுக் கொள்ளலாம் .
2. இவர் துஆ வுக்கும் அல்லாஹ்வை புகழ’ வதற்கும் வித்தியாசம் தெரியாமல் பேசுகிறார்.
3. கூட்டு துஆ வுக்கு ஆதாரமாக உள்ள ஸஹீஹான ஹதீஸை இவர் மாறுகிறார்/தெரியாமல் இருப்பார்.( இதில் இருந்து இவருக்கு
ஹதீஸ் துறை இல் பூரண அறிவு இல்லாமல் இருக்கலாம்)

Subair Abul Hudha July 3, 2013 at 9:03 pm

அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்
முஸ்லிம்களுடைய அறிவு எப்போது உலக அறிவு மார்க்க அறிவு என்று சீர்குலைக்கப் பட்டதோ அப்போதிருந்தே முஸ்லிம்களுக்கு மத்தியில் வீணான பிரச்சினைகள் அதிகரிக்க ஆரம்பித்தது. நபி சல்லல்லாஹு அலைஹிவசல்லாம் அவர்களுடைய காலத்திலிருந்து கருத்து முரண்பாடு இருந்தது. ஆனால் யாரும் பிளவுபடவில்லை. உறவுகளை பகைக்க வில்லை. ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயம் ஒற்றுமையாகவே இருந்தது. ஆனால் இப்போது தொழாத மக்கள் பலர் வீதியில் இருக்க, தொழுகின்றவனை வம்புக்கிளுக்கிரார்கள்.
துஆ ஒரு வணக்க வழிபாடு (அமல்). அதை அதிகமாக அல்லாஹ்விடம் கேட்க வேண்டும் என நபியவர்கள் வலியுறுத்தினார்கள். துஆவே கேட்காதவர்கள் பலர் இருக்கும் போது துஆ கேட்பவனிடம் தனி துஆ கூட்டு துஆ என்று சண்டை பிடிக்கின்றோம்.
துஆவை தனி துஆ கூட்டு துஆ என்று பிரித்தது யார்..? நபியவர்கள் கூட்டாக நீங்கள் துஆ கேட்க வேண்டாம் என்று எப்போதாவது சொல்லி இருக்கிறார்களா..? அல்லது துஆ கேட்கும் போது ஆமீன் சொல்லே வேண்டாம் என்று ஏதாவது சஹீஹான ஹதீஸ் உண்டா..? (உண்மையில் என்னைப் பொருத்தவரை ஆமீன் – “ஏற்றுக் கொள்வாயாக” என்பதும் ஒரு துஆ தான். ஒருவர்(இமாம்) முஸ்லிம் சமூகத்திற்காக கேட்பதை ஏனையவர்கள் (மக்மூம்கள்) இறைவனிடம் ஏற்றுக்கொள்ளும் படி பிரார்த்தித்தல்)..
ஏன் கூட்டாக துஆ கேட்பது “பித்அத்”?
மக்கள் சேர்ந்து துஆ கேட்பதை நபியவர்கள் தடுத்தார்கள் என்று எந்த ஹதீஸும் இல்லையே ..! ஏன் சிலர் துஆ கேட்பதை தடுக்கிறார்கள்…? நபியவர்கள் செய்யாததை சில இயக்கங்கள் செய்கின்றதா? மக்கள் “பித்அத்” செய்கிறார்களா? அல்லது சில இயக்கங்கள் “பித்அத்” செய்கின்றனவா ? தெளிவை அறிய ஆசைப் படுகின்றேன்.. அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் பாலிப்பானாக.. ஆமீன்…

T.Mohamed Ibrahim July 4, 2013 at 1:23 pm

ஜி ஒரு விஷயத்தை முதலில் புரிந்து கொள்ளுங்கள் மார்க்கம் சம்பந்தமான அனைத்து விசயங்களுக்கும் நபி அவர்கள் தான் முன்னுதாரணம். துவா விசயத்தில் அல்லா என்ன கூறுகிறான் என்று பாருங்கள் . 7:55 ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ
7:55. (ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் – வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை.

கூட்டு துவாவில் எங்கு அந்தரங்கம் இருக்கு பணிவு இருக்கு

Mahibal M. Fassy September 7, 2013 at 5:58 pm

Allah said in 7:55 commonly and not mention it after the compulsory prayer.
Asking Allah humbly is a basic requirement as we can’t command Him.
Asking privately is due to our situation.

Asking together after the compulsory prayer, in common for common needs, such as the Du’a which we make after a prayer for rain, is how can wrong?

When people have similar requirements from Allah they jointly ask and such Du’a included all necessities for a Du’a accepted by Allah, such as Bismillah, praising Allah, Salawaath and again end the Du’a with Salawaath.

From this way, the Mahmoons learn how to ask Allah. Such join Du’as are modified with all necessities of all people in common. And people say Ameen as they agree for that. is there any harm?

When people are not necessary for such Du’a, and they wish to ask privately, they can ask their own and Imam or no one will refuse them to do so.

When people ask together for them and others, and when Angels says Ameen, such Du’a’s are more stronger than asking alone, I believe.

So, when there is no specified proof or evidence from Qur’an or Hadees for joint Du’a is not allowed after a compulsory prayer, it seems there is no harm to continue such practice.

And, However, asking Du’a either jointly or privately which Allah likes more than one is not asking Him ever, is my humble opinion.

MOHAMED HANEEF July 11, 2013 at 5:51 pm

Assalamu alaikum va rahumathullah, sakotharar T.MOHAMED IBRAHIM sonnadhu pondru koottu dhua-vil andharangam illai enbadhey unmayanadhu. ex: imaam avargal 1.engal anaivarkum udal nalathai tharuvayaga endru koorugayil ammen solvadhu sari. 2. enadhu thaai thandhayarukku neenda aayulai tharuvayaga endru koorinaal idhu thani nabar dhu-a vaga karudhapadugiradhu, idhu pondra kootu dhua- kalukku mattume aamen solli vittu thaniyaga dhua ketkadhavargal ethanai per. satru sindhiyungal tholargaley kootu dhuavirku ameen solla vendam endru koora villai, kootu dhuavil mattum ameen solli vittu ungal kudumbathirkaga thanipatta murayil allahvidam silar dhua ketpadhillai endru dhaan solla varugiren. satru sindhiyungal. ellam valla iraivan namdhu thevaigalai poorthi seidhu arul purindhu namakku nal vali kaatuvaanaga . Ameen….

mohamed June 3, 2014 at 10:40 am

koottu thuwaa aatharththil balm ullawarukku sunnath balam kurainthawarukku jaayis bithath enpatharku evarukkum athihaaram kidaiyaatu

ABDUL AZEEZ June 7, 2014 at 4:33 pm

அஸ்சலாமு அலைக்கும் சகோதரர் முஹம்மது அவர்களுக்கு

பித் அத் என்று கூற அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்)உரிமை படைத்தவர்கள்.

கீழ் கானும் ஹதீத் உங்களுக்கு போதுமானது.

ஆஸிம் பின் சுலைமான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவைப் புனித நகரமாக அறிவித்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்; இங்கிருந்து இதுவரை (மதீனா புனிதமானது என்று நபியவர்கள் அறிவித்தார்கள். மேலும் சொன்னார்கள்:) அதில் யார் (மார்க்கத்தில் இல்லாத செயல்) ஒன்றைப் புதிதாக உருவாக்குகின்றானோ அவன்மீது அல்லாஹ்வின் சாபமும், வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும். (இது ஒரு கடுமையான எச்சரிக்கை) அவன் செய்த கடமையான வழிபாடு மற்றும் கூடுதலான வழிபாடு எதையுமே அல்லாஹ் ஏற்கமாட்டான்” என்று கூறினார்கள் என விடையளித்தார்கள்.
அப்போது மூசா பின் அனஸ் (ரஹ்) அவர்கள் “(“ஒன்றைப் புதிதாக உருவாக்குகின்றவன்”) அல்லது புதியவற்றைப் புகுத்துபவனுக்குப் புகலிடம் அளிக்கின்றவன்” என்று (சேர்த்துக் கொள்ளுமாறு) கூறினார்கள். (முஸ்லிம் 2650)

மா சலாம்.
அப்துல் அஜீஸ்

Ashak July 25, 2018 at 2:41 am

எது மார்க்கத்தில் இல்லாதது, கூட்டு துவா மார்க்கத்தில் உள்ளது தான், எவர் அல்லாஹ்வுக்காக்க கூடி ஒருவர் துவா செய்ய மற்றவர் ஆமீன் சொன்னால் அதை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான் என்று ஒரு ஹதீஸ் உள்ளது, பள்ளிவாசல் அல்லாஹ்வுக்காக கூடும் இடம், தொழுகை முடிந்ததும் கூட்டு துவா செய்தால் கூடும், கொட்டு துவா பித் அத் என்றால், தொழுது முடிந்தவுடன் பள்ளியை விட்டு வெளியேறுவதும் பித் அத் தான், அதை என் சொல்லமாட்டேன் என்கிறீர் ?

Ashak July 25, 2018 at 2:42 am

பித் அத் க்கான வரையையே தவறு, மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரும் செய்யவில்லை

Comments on this entry are closed.

Previous post:

Next post: