இஸ்லாம் சமய(மத)மல்ல!

in மூடநம்பிக்கை

மற்ற சமயங்களைப் போல் மதங்களைப்போல் “இஸ்லாம்” ஒருசமய(மத)மாகவே மாற்றார்களால் கணிக்கப் பட்டுள்ளது. இது வி„யத்தில் அவர்களைக் குறைகூறி விமர்சிக்கும் இடம்பாடு மிகக்குறைவாகத் தான் இருக்கும் என்றாலும், இன்றைய முஸ்லிம்களின் புரோகித மோகம், உண்மை மார்க்கத்தை சமயமாய் மாற்றிக் காட்டிக் கொண்டிருக்கிறது.

மற்ற சமயங்களில் நியதியாக்கப்பட்டுள்ள மூடச்சடங்கு சம்பிரதாயங்களில் பெரும்பாலானவைகள் அப்படியே  அல்லது சிற்சில மாற்றங்களுடன் இன்றைய முஸ்லிம்களின் நடைமுறையை அனுசரித்து நன்மை, புண்ணியம் என்ற போர்வையில் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மார்க்க அறிஞர்களின் அங்கீகாரத்துடன், இவைகள் அவர்களாலேயே நடத்தி வைக்கப்படுகின்றன. அதனால், இதுவும்  இஸ்லாத்திற் குட்பட்டதே என்பது இன்றைய முஸ்லிம்களின் அசைக்க முடியாத நம்பிக்கை!

இஸ்லாத்திற்கு இன்றைய  முஸ்லிம்கள்  மாற்றாருடன்  போட்டிக் போட்டுக்கொண்டு  பாரம்பரிய  சொந்தம் கொண்டாடுவதால் மற்ற சமயத்தவர்கள் மூடச்சடங்கு சம்பிரதாயங்களை நியாப்படுத்த செய்யும் விதண்டா வாதங்களே இங்கும் நியாயங்களாகின்றன.

இந்நிலையில்,இன்றைய  முஸ்லிம்கள்  நன்றாகச் சிந்திப்போர் கூட இஸ்லாத்தைப் பாரம்பரிய அடிப்படியில் அணுகி, இஸ்லாமும், மற்றசமயங்களைப் போல் ஒருசமயம் என்ற மாயையில் சிக்கித் தவிக்கின்றனர். இவர்கள் போன்றவர்கள் மூலம்தான் மாற்றார்கள் இஸ்லாத்தை அறியும் சூல்நிலை பரவலாகக் காணப்படுகின்றது.

ஏற்கனவே மூடச்சடங்கு சம்பிரதாயங்களில் மூழ்கிக்கிடக்கும் இன்றைய முஸ்லிம்கள் (தவறான) நடை முறைகளைக் கண்டு இஸ்லாத்தை மாற்றார்கள் தவறாகக் கணித்து வைத்துள்ளனர். சில போற்றத்தக்க நடைமுறைகள் முஸ்லிம்களிடத்தில் காணப்பட்டாலும், அவைகள் மாற்றார்களிடம் இஸ்லாத்தை நிƒத் தோற்றத்தில் அறிமுகப்படுத்த ஏற்றதாய் இல்லை.அதனால் மற்ற சமயத்தவர்கள் போல் இன்றைய முஸ்லிம்களும்  ஒரு சமயத்தவர்களே!

சடங்கு சம்பிரதாயங்களைத் தோற்றுவித்தவர்கள் புரோகிதர்கள். இறைவன் கூறுகிறான்:
மனிதர்களில் சிலர் இருக்கின்றனர்; அவர்கள் (பொய்யான கட்டுக் கதைகள் முதலிய) வீணான செய்திகளை விலைக்கு வாங்கி,  அல்லா‹வுடைய வழியிலிருந்து, அறிவின்றி (ƒனங்களை) வழிகெடுத்து, அதனைப் பரிகாசமாகவும் எடுத்துக் கொள்கின்றனர். இத்தகையோருக்கு இழிவு தரும் வேதனை நிச்சயமாக உண்டு.(அல்குர்ஆன் 31:6)

மற்ற சமயங்களைப் போல் இஸ்லாமும் ஒரு சமயமே மதமே என்ற (தவறான) தோற்றம் எப்படியோ ஏற்ப்பட்டுவிட்டது. இது போலித் தோற்றம், உண்மையல்ல. இதற்கு இன்றைய முஸ்லிம்களும், அவர்களின்  முன்னோர்களும், மார்க்கத்தைப் புரோகிதமாக்கிய முல்லா வர்க்கமும் முழுப் பொறுப்பாளர்களாகிறார்கள்.


இஸ்லாம் பொறுப்பு அல்ல!
இஸ்லாம் ஒரு மதமல்ல!
இஸ்லாம் ஒரு சமயம் அல்ல!
இஸ்லாம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு இயக்கம் அல்ல!
இஸ்லாம் இறைவன் அருளிய மார்க்கம்.
அல்லா‹ முஸ்லிம்கள் அனைவரையும் உண்மையான மார்க்கத்தை  விளங்க வைப்பானாக.

ANK

Comments on this entry are closed.

Previous post:

Next post: