இஸ்லாமும் இயக்கமும்

in பிரிவும் பிளவும்

இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் உலகிலிருந்து ஒழித்துவிட பல வருடங்களுக்கு முன்பிருந்தே சர்வதேச அளவில் முயற்சிகள் அதிவேகமாக செய்யப்பட்டு வருவதை அறியாதவர்கள் இருக்க முடியாது. வருவதை அறியாதவர்கள் இருக்க முடியாது. பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி போன்ற புரட்சிக்கு தலைமை தாங்கும் சாதனங்கள் அனைத்தும் இஸ்லாத்திற்கு எதிர்த்திசையில் செயல்படுகின்றன. இம்முயற்சிகளை முறியடிக்க அவ்வப்போது பல இயக்கங்கள் உலக அளவில் தோன்றின.

இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் இங்கு முஸ்லிம்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக ஆக்கப்பட்டதை தொடர்ந்து, முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காக இங்கும் பல இயக்கங்கள் தோன்றின. இன்றும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த இயக்கங்களின் நோக்கங்கள் நல்லவிதமாக இருந்தாலும் இயக்கம் தவறானதாக இருப்பதால் முழு அளவு இஸ்லாமிய புரட்சி என்பது கேள்விக்குறியாகி விட்டது.

ஒவ்வொரு இயக்கம் தோற்றுவிக்கப்படும் போதும், அது இயக்க வளர்ச்சியாகவும் போதும், அது இயக்க வளர்ச்சியாகவும், இயக்க உறுப்பினர்களின் பாதுகாப்பாகவும் இருந்ததே தவிர இஸ்லாமிய வளர்ச்சியாகவும் முஸ்லிம்களின் பாதுகாப்பாகவும் அவை என்றுமே இருந்ததில்லை.

நடத்தப்படும் ஒரு சிலப் போராட்டங்களாலும், அதனால் கிடைக்கும் பலன்களாலும் செய்யப்படும் ஒரு சில செயல்களாலும் அது ஏற்படுத்தும் தாக்கத்தினாலும் இயக்கச் சகோதரர்கள் கட்டுண்டு கிடக்கிறார்களே தவிர முஸ்லிம்களின் எதிர்காலம், அவர்களின் தலைமை, ஒன்றுபட்ட சமுதாயம் இவை குறித்து அவர்கள் சிந்திக்கத் தவறி விட்டார்கள்.

முஸ்லிம்களின் மார்க்கப்பற்று உலகியல் இரண்டும் படுவீழ்ச்சி அடைந்து வரும் காலக்கட்டத்தில் அதை சரி செய்வதற்காக முன்னுக்கு வந்து இரவுப் பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கும் பலர் கூட இயக்க ஷைத்தானிடம் சிக்கி இயக்கப்படும் பரிதாப சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு இயக்க அல்லது அமைப்புக்காரர்களும் தங்கள் இயக்கக் கோட்பாடு அல்லது அமைப்புக் கோட்பாடு பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லிம் சமுதாயம் என்பது ஒரு சில நூறு அல்லது ஆயிரம் பேர்களை கொண்டதோ, அல்லது இயக்க உறுப்பினர்களை மட்டும் உள்ளடக்கியதோ அல்ல. இது பூமியின் இறுதி எல்லை வரை வியாப்பித்திருக்கக் கூடியதாகும்.

இந்நிலையில் அரசாங்கம், அதனால் ஏற்படும் விளைவுகளை காரணம் காட்டி தனி, தனி இயக்கங்களைத் தோற்றுவிப்பது இந்த பரந்த சமுதாயத்தின் அங்கங்களை ஊனப்படுத்துவதற்கு ஒப்பாகும்.

ஒற்றுமை, ஒற்றுமை என்று மேடைகளில் முழங்கிக்கொண்டே ஒற்றுமை நாசத்திற்கு பாதைப் போட்டுக் கொண்டிருக்கின்றன இந்த இயக்கங்கள்.

இயக்கங்கள் ஒற்றுமையை குலைக்கவில்லை என்று எவரும் வாதித்தால் அதனடைய போலித்தனங்களை நாம் வரிசையாக இனங்காட்டுவோம். உதாரணத்திற்கு ஒன்று,

1956 ஏப்ரல் 13ம்தேதி செயல்முறைக்குக் கொண்டு வரப்பட்டது “ஜமா அத்தே இஸ்லாம்” என்ற இயக்கம் (அதாவது சுதந்திரத்திற்குப் பின் இஸ்லாமிய வளர்ச்சிக்காகவும், முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காகவும் துவங்கப்பட்ட இயக்கம்)

52 வருடங்களுக்கு முன்பு இந்த இயக்கம் பற்றி இதனுடைய ஸ்தாபகர் பேரறிஞர் அபுல் அஃலா மவ்தூதி(ரஹ்) பேசும் போது இது தனி இயக்கமல்ல; இது நிர்வாகம் தான் என்று பேசியதை யாரும் மறுக்கமுடியாது. 52 ஆண்டுகளில் அந்த நிர்வாகம் தனி இயக்கமாக வளர்ச்சிப் பெற்று நிற்கின்றது.

அல்லாஹ் விதித்த சட்டத்திட்டங்கள்படி பிரச்சாரம், போராட்டம் இன்னும் பிறகாரியங்களை செய்ய வேண்டிய முஸ்லிம்களை மனிதர்கள் வகுத்த தனிச்சட்டம், கோட்பாடுகளின் கீழ் செயல்படத் தூண்டுகிறது இயக்கம்.

(ஆதாரம்: ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பு சட்டம் பாகம் 2, பிரிவு 6, எண் 5)

எந்த ஒரு இயக்கத்தைப் பதிவு செய்யும் போதும் அதற்கென்று தனி சட்ட திட்டம் வகுக்கப்பட்டு உறுப்பினர்கள் சேர்க்கப்பட வேண்டும். இந்த உறுப்பினர் சேர்க்கையே முஸ்லிம் சமுதாயத்தை பலவீனப்படுத்தி விடுகிறது.

இஸ்லாத்திற்காக துவங்கப்படுவதாக கூறப்படும் இயக்கங்களில் ஒரு இயக்கத்தில் உறுப்பினராக இருப்பவர் அடுத்த இயக்கத்தில் உறுப்பினராக, அது முடியாத சூழ்நிலையும், தப்பித்தவறி இரண்டு இயக்கங்களின் உறுப்பினராக இருக்கக் கூடியவர்கள் எதிர் எதிரான இரண்டு இயக்க சட்ட விதிகளுக்கு மத்தியில் மாட்டிக் கொண்டு விழிப்பதும் நடக்காமல் இல்லையே!

குர்ஆன்-ஹதீஸ்படியே வாழ வேண்டும் என்று சூளுரைத்துப் புறப்பட்டவர்கள் கூட தனி, தனி இயக்கமாக இயங்கலாம் என்றும், அதற்கு ஆதாரம் இருக்கிறது என்று வாதிப்பதும் விந்தையே.

ஒரே இறைவன், ஒரே தூதர், ஒரே நெறிநூல்; இதுவே தாரக மந்திரம் என்று முழங்கி வருபவர்கள் ஒரே தலைமை ஒரே ஜமாஅத் என்ற கொள்கையை மட்டும் கிடப்பில் போட்டு விட பல குழுக்களாக உதிர்ந்து போனது ஏன்?

இறைவனுக்குக் கட்டுப்பட்டவர்களை ஒன்றிணைப்பதற்காக ஒரே இயக்கமாக இறைவன் இஸ்லாத்தையும் அந்த இயக்கத்து உறுப்பினர்களுக்கு ஒரே பெயராக முஸ்லிம்கள் என்ற பெயரையும் சூட்டியுள்ள போது, அதையே செயல்படுத்துவமாறு நபி(ஸல்) கட்டளையிட்டிருக்கும் போது, முஸ்லிம்கள் என்ற பெயரில் இஸ்லாமிய இயக்கத்தை வளர்க்காமல், அஹ்லே ஹதீஸ், முஜாஹித், JAQH, ஜம்யித்து அன்சாரி சுன்னத்தே முஹம்மதியா, SIM, ஜமாஅத்தே இஸ்லாமி, த.மு.மு.க., த.த.ஜ., போன்ற தனித்தனிப் பெயர்களில் இயங்குவதின் காரணம் என்ன?

இப்படித் தனித் தனியாக செயல்படுவது சரியா? கூடாது என்கிறார் முன்னாள் அல் ஜன்னத் ஆசிரியர் P.J.

மொத்த உலகுக்கும் ஒரே தலைமையும், அமைப்பும் ஏற்பட வேண்டும் என்பதை நாம் மறுக்கவில்லை. ஏகத்துவ பிரச்சாரம் செய்யும் எல்லா அமைப்புகளும் ஒரே அணியில் திகழ வேண்டும் என்பதை நாம் பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறோம்.

(மே.1993 அல்ஜன்னத் இதழ், பக்.26)

நபி(ஸல்) அமைத்துக் காட்டிய முஸ்லிம் சமுதாய அமைப்பில் ஒரே ஒரு தலைமையும், அந்த தலைமைக்கு கீழ் செயல்படும் துணை அமீர்கள் மட்டுமே இருந்தார்கள். அதே சமுதாய அமைப்பிற்காகப் பாடுபடுகிறோம் என்று சொல்பவர்களுக்குள் நூற்றுக்கணக்கான தலைமைகள்.

சரி, தனி, தனிப்பெயர்களில் செயல்பட என்ன ஆதாரம்?

இறைவன் முஹாஜிர்கள், அன்சாரிகள் என்றெல்லாம் கூறுகிறான் . இது ஒரு ஆதாரம்.

முஹாஜிர், அன்சார் என்பதெல்லாம் பண்புப்பெயர்களாகும். மக்காவிலிருந்து சென்றவர்கள் அன்சார் என்றப் பெயருக்குள் வரமாட்டார்கள். மதினாவிலிருந்தவர்கள் முஹாஜிர் என்றப் பெயருக்குள் வரமாட்டார்கள். ஏனெனில் அவை காரணங்களை சொல்லக் கூடிய பெயர்களாகும்.

முஹம்மத் என்றப் பெயருள்ள ஒருவர் அதிகமாக வாரி, வாரி வழங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவருக்கு கொடைவள்ளல் என்றப் பெயர் கிடைக்கலாம். இப்படி பெயர் கிடைப்பதால் அவரது இடுகுறிப்பெயரே கொடை வள்ளல் என்ற நிலையைப் பெறாது. ஏனெனில் அவருக்கு சூட்டப்பட்டப் பெயர் முஹம்மத்.

அதே போன்று, முஹாஜிர்களும், அன்சாரிகளும் முஸ்லிம்கள், அவர்களின் பண்பு மட்டுமே அங்கு வெளிப்பட்டது. அந்தப் பண்பைக் கூட இறைவன்தான் வெளிப்படுத்தினானே தவிர அவர்களாக வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.

முஹாஜிர், அன்சார் என்று பண்புப்பெயர் வந்த பிறகு கூட அவர்கள் அந்தப் பெயர்களில் பிரச்சாரமோ, நல உதவிகளோ செய்யவில்லை. மாறாக முஸ்லிம்கள் என்றப் பெயரிலேயே செயல்பட்டார்கள். ஏனெனில் இறைவன் முஸ்லிம் என்றே செயல்படச் சொல்கிறான்.

“அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து தாமும் நற்செயல்கள் செய்து முஸ்லிம்களில் நானும் உள்ளவன் என்று எவன் கூறுகிறானோ அவனை விட அழகான சொல் சொல்பவன் யார்?”

(அல்குர்ஆன் 41:33)

நடுநிலையாக வசனங்களை அணுகுபவர்களுக்கு இந்த ஒரு வசனமே போதுமானதாகும். தனி, தனிப்பெயர்களுக்கு எதிரானதாகவும், முஸ்லிம் என்றப் பெயரில் தான் செயல்பட வேண்டும் என்பதற்கும்,

வேடிக்கையான விஷயம் என்னவென்றால் தனி, தனிப்பெயரில் செயல்படுபவர்கள் கூட 41:33 வசனத்தை நாங்கள் செயல்படுத்துகிறோம் என்று கூறுவதுதான்.

அவர்கள் சொல்வதை அந்த வசனம் ஏற்கிறதா? நிச்சயமாக இல்லை. “முஸ்லிம்” என்பதை “பேனர்” படுத்த வேண்டும் என்றே அந்த வசனம் கூறுகிறது. கவனியுங்கள.

“மன் அஹ்ஸன கவ்லன்” அழகான வார்த்தை கூறுபவன் யார்? “மிம்மன் தஆ இலல்லாஹீ” அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து,

“வ அமில ஸாலிஹன்” மேலும் தாமும் நற்செயல்கள் (தொழுகை நோன்பு முதல் தெருக்களில் கிடக்கும் கற்களை நகர்த்துவது, எந்த சகோதரனிடமும் முகமலர்ச்சியோடு பழகுவது, மனைவியோடு அன்பாக பழகுவது போன்ற தர்மங்கள், மக்கள் சேவை ஆகியவை) செய்து “வகால இன்னனீ மினல் முஸ்லிமீன்” முஸ்லிம்களில் நானும் உள்ளவன் என்று கூறுகிறானோ (அவனைவிட). அல்லாஹ்வின் பக்கம் ஒருவன் மக்களை அழைக்கிறான்; தஃவா செய்யும்போதே அவன் முஸ்லிம் என்று தெரிந்து விடும்.

மக்கள் சேவை உட்பட அனைத்து நற்கருமங்களையும் செய்கிறான். இந்த செயல்களிலிருந்தே அவன் முஸ்லிம் என்று தெரிந்து விடும். இவ்வளவுத் தெளிவாக அவன் முஸ்லிம் தான் என்று தெரிந்தே பிறகு “நான் முஸ்லிம்களில் உள்ளவன்” என்று எதற்காக கூறச் சொல்கிறான். இந்த இடத்தை ஆழமாக நன்றாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஒருவன் தன் செயல்கள் மூலம் நான் முஸ்லிம்தான் என்று நிரூபித்து விட்ட பிறகும் நான் முஸ்லிம் என்று கூறுவதன் காரணம் முஸ்லிம் என்பதைத் தவிர வேறு பேனர் இருக்கக்கூடாது என்பதற்குத்தான்.

“இஸ்லாமிய மாநாடு” இவன் JAQH, இஸ்லாமிய கருத்தரங்கு இவண் அஹலே ஹதீஸ், இஸ்லாமிய பிரச்சார வாரம், இவண் ஜமாஅத்தே இஸ்லாமி, தவ்ஹீத் எழுச்சி மாநாடு, இவண் ததஜ.

தனி, தனி இயக்கமாக இயங்குபவர்கள் அடுத்து ஒரு சிறுபிள்ளைத்தனமான வாதத்தை வைக்கிறார்கள்.

முஸ்லிம் என்றப் பெயரை தவிர வேறு பேனரில் செயல்படக்கூடாது என்று தடை இருக்கிறதா? தடை இல்லாத போது எதற்கு விமர்சிக்க வேண்டும்? என்பதே அவர்களின் வாதமாகும்.

பெயர் எதற்காக வைக்கப்படுகிறது என்பதைக் கூட புரிந்துக் கொள்ளாதவர்கள், இயக்கப் பெயரை கெட்டியாக பிடித்துக் கொண்டிருப்பது வேதனை.

ஒருவருக்கு “முஹம்மத்” என்று பெயர் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். “முஹம்மத்” என்று அவரை இனங்காட்டுவதற்குத்தான் அந்தப் பெயரே தவிர முஹம்மத் என்றப் பெயரை ஏட்டில் வைத்துவிட்டு, யூனூஸ், தாவூத், பாரூக் என்று அந்த நபரை அழைக்கலாம் என்றால் முஹம்மத் என்றப்பெயர் வைத்ததன் காரணம் தான் என்ன? சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

ஜகரிய்யாவே யஹ்யா என்றப் பெயர் கொண்ட ஒரு புதல்வரைப் பற்றி நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். (அல்குர்ஆன் 19:7)

ஜகரிய்யா (அலை) அவர்களின் பிரார்த்தனையை ஏற்று இறைவன் ஒரு மகனை கொடுக்கும் போது “யஹ்யா” என்றப் பெயரை சூட்டியே கொடுக்கிறான். எதற்காக இறைவன் பெயர் சூட்டி அனுப்புகிறான்? “யஹ்யா” என்ற பெயரில்தான் அவர் இனங்காட்டப்பட வேண்டும் என்பதற்காகத்தான்.

யஹ்யா என்று பெயர் இருக்கும்போது அந்தப் பெயரை விட்டு விட்டு வேறு பெயரால் அவர் தம்மை இனங்காட்டினால், இறைவன் சூட்டிய யஹ்யா என்ற பெயருக்கு அர்த்தமில்லாமல் போய்விடும்.

பெயர் எதற்கு என்பதற்கு தான் இந்த விளக்கம்.

தனி மனிதர்களுக்கு பெயர் சூட்டுவது போன்றுதான் முஹம்மத்(ஸல்) அவர்களின் உம்மத்தினருக்கு, முன்னரே இறைவன் “முஸ்லிம்கள்” என்று பெயர் சூட்டியுள்ளான். (22:78)

ஒட்டு மொத்தமாக ஒரு மிகப் பெரிய சமுதாயத்திற்கு இடப்பட்ட பெயர் இது. பெயர் என்பதே இனங்காட்டுவதற்காகத்தான் என்பதால் முஸ்லிம் என்ற பெயரில் மட்டும்தான் இனங் காட்டப்பட வேண்டும்.

துலுக்கர்கள் என்று நமக்கு மற்றவர்கள் பெயர் சூட்டியதை நாம் அறிவோம்.

இதை மேடையில் எதிர்க்கிறார் சகோதரர் P. ஜெய்னுல் ஆபிதீன்.

இறைவன் எங்களுக்கு முஸ்லிம் என்று பெயர் வைத்திருக்கும் போது நீ எப்படி எங்களை துலுக்கன் என்று அழைக்கலாம்? என்று கர்ஜிக்கிறார் P.J. (ஆதாரம்: த.மு.மு.க. கூட்டம், நாகூர் பேச்சு)

இறைவன் சூட்டிய பெயருக்கு மாற்றாக வேறு பெயரை எதிர்க்கக் கூடியவர்கள், தாமாக வேறு வேறு பெயரை சூட்டிக் கொண்டு செயலாற்றுவது எந்த வகையில் நியாயம்?

துலுக்கர்கள், முஹம்மதியர்கள் என்று நமக்கு மாற்றுப் பெயர் சூட்டும்போது கண்டனக் கணைகள் தொடுக்கக்கூடிய நாம்-இறைவன் நமக்கு முஸ்லிம்கள் என்று பெயர் சூட்டியுள்ளான் என்று தெளிவுபடுத்தக் கூடிய நாம், அதே பெயரிலேயே செயல்பட முன்னுக்கு வரவேண்டாமா?

குர்ஆன், ஹதீஸ் பார்வையில் இயக்கம் என்பதே இஸ்லாம்தான்; மற்றவைகளை இயக்கம் என்று குர்ஆன்-ஹதீஸ் அங்கீகரிக்கவில்லை.

அருமை சகோதர, சகோதரிகளே! இஸ்லாத்தில் ஒற்றுமை என்பது கடமையாக்கப்பட்ட ஒன்று.

கூட்டுத் தொழுகை, நோன்பு, ஜகாத்தை ஒன்றாக சேகரித்து விநியோகிப்பது, மாபெரும் இஸ்லாமிய மாநாடாகி ஹஜ், போர்க்களங்கள், இஸ்லாத்தின் இந்தக் கடமைகள் எல்லாம் ஒற்றுமையை மையமாக வைத்தே செயல்பட வேண்டும் என்பதற்காகவே விதிக்கப்பட்டுள்ளன.

அதே போன்று பிரசாரங்கள், மக்கள் சேவைகள் எல்லாவற்றிருக்கும் ஒற்றுமை வேண்டும். தனி, தனிப் பெயர்கள், தனி, தனி சட்டதிட்டங்கள், உறுப்பினர் சேர்க்கை நிச்சயமாக ஒற்றுமையை ஏற்படுத்தப் போவதில்லை.

தனி, தனியாக ஒவ்வொரு பெயரை நாம் தேர்ந்தெடுக்கும் போதும், அங்கீகரிக்கும் போதும், அது ஒன்றுபடக்கூடிய முஸ்லிம் சமுதாயத்தின் மீது விழும் அடி, ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் மிகப்பெரிய தீய செயல் என்பதை நினைவில் வையுங்கள்.

உலகளாவிய நமது இயக்கத்திற்குப் பெயர் இஸ்லாம், இஸ்லாமிய இயக்கத்தில் சேர்ந்தவர்களுக்குப் பெயர் முஸ்லிம்கள். இந்த இயக்கத்தின் (பைலா) சட்டதிட்டம், குர்ஆனும், நபிமொழிகளும்தான். எனவே எல்லா பிரிவினை இயக்கங்களையும் விட்டு ஒதுங்கி முஸ்லிம்களாக மட்டுமே வாழ சபதமேற்போம்.

ஜீ.என்.

{ 18 comments… read them below or add one }

mohammed February 26, 2014 at 10:02 pm

மிக அருமையான பதிவு . நீங்கள் சொல்லுவது போல அணைத்து இயக்கமும் ஒன்று சேர வைப்பே இல்லை ஏன் என்றால் இவர்கள் அனைவரும் முஸ்லிகள் தான் ஆனால் இதில் இறைவனுக்கு மாறு செய்ய கூடி வர்களும் இருக்கிறார்கள் எப்படி ஒன்று சேர்ப்பது

Reply

Abubakkarsithik March 6, 2014 at 7:36 pm

Assalamu Alaikum,
Masaha allah, nalla pathivu, satthiyam sonnier nanbare aanal ean Dhableeq Jamathai patri ondrum sollavillai, enakku therindha varai nalla kolgai thaan ithil ulladhu aanal ithai kurai koorubavargal koorikondu thaan ullarhal aanal ivarhalo masha allah, poikonduthaan ullarhal 4 maatham, 40 naal endru, ivargalidam vaakkuvatham seithaalum athigamana per seivathillai avargal undu avargal velai undu endru thaan irukkirargal, utharanathirku ippodhu neengal kurai kurinirgal endralum naanum namba matten.

melum ivargalin pecchu ellam dheen eppadi nammidam varum endra kavalai paduvargal matravargal ellam matravargalidam eppadi kurai varum endru ethiparkirargal. melum varungalam patri pesikondu ullargal namma iyakkavathigal idhartku evvalvo udharanam undu, aanal indha dhableeq karargal ellam 1400 varudangalukku munbulla visyam patri pesikondu ullargal. naam avargalidam paarpadhu ellam andha thamleem engira, amalgalin sirappai mattum dhaan athil kurai ulladu ithil kurai ulladhu endru,

anaal oruvar pothuvaga athai thaan sulabamaga vilanga mudigirathu, pin udaney ivar periya sufiyagi athye kurai solgirar en endru theriyavillai , pinbu ethavadhu iyakkathil poi serndhu kurai solgirar, aanal athai vilangi ithuthaan haq endru uruthiyaga aamal seithu athileye uyirum vidugirar, allah naalai theerppu seivaan andrey theriyum insha allah.

allahu aalam, nammai vilangi allahu matrum rasul kattiya valiyil neram selavalikka tawfeek seyya veendum
Assalamu alikum
Abubakkarsithik

Reply

ABDUL AZEEZ March 8, 2014 at 5:07 pm

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் ஆபுபக்கர் சித்கிக் மற்றும் அனைத்கு சகோதரர்கலுக்கும்.
தப்லீக் ஜமா அத் உல்லவர்கள் ஆனாலும் பிரிவில் இருந்தால் வழி கேடு தான் அதில் இல்லாமல் அந்த நபர் செயல் பட்டால் வெற்றி பெருவார். காரணம் இந்த ஆயத் தான்

நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை; அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது – அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான் குர் ஆன் 6:159

நாம் நபியுடனே சம்பந்தம் இல்லை என்று இருக்கும் போது எவ்வளவு பெரிய புத்தகதை விழுந்து விழுந்து படிதாலும் பத்து காசுக்கு பிரயோஜனம் இல்லை.

// இவர்களின் பேச்சு எல்லாம் தீன் எப்படி நம்மிடம் வரும் என்ற கவலை படுவார்கள் //

மேர்கண்ட வசனம் படி அல்லாஹ் நம்மலை கேள்விகேட்ப்பான் என்ற கவலையுடன் தப்லீக் என்ற இயக்கத்தை நீக்கிட்டு முஸ்லிம்கள் என்ற பெயரிலேயே செயல் பட்டால் வெற்றி உறுதி தானே !

அந்த சிந்தனை எங்கே போனது அந்த கவலை அனைதையும் விட மிக முக்கியம் தானே இல்லை என்றால் பலரை வழி கெடுத்ததாக ஆகுமே !

அமல்களின் சிறப்புகள் புத்தகம் குறைகள் எராளம் அது நமக்கு வழி காட்டாது.அதில் உல்ல ஷிர்க் பித் அத், அத்வைத கொள்கை திருக் குர் ஆனுக்கு எதிரான கருத்துக்கள் அல்லாஹ்விடம் இருந்து தனக்கு வஹீ வருவது போன்ற நச்சு கருதுக்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாக உல்லடஙகியது தான் அமல்களின் சிறப்புகள் இது விஷயமாக சத்யமார்க்கம் இனயதளம் போய் தப்லீக் தக்லீம் கிதாப் படிக்கலாமா என்றதில் கருத்துகள் பார்வை இடவும்.

மேலும் தப்லீக் சகோதரர்கள் பற்றி எந்த குரைகள் நான் சொல்ல வில்லை. நாம் அனைவரும் முஸ்லிம்கள் என்ற வட்டத்தில் இருந்து முஹம்மது (ஸல்) அவர்களின் ஹதீத்களை சரி பார்த்து ஆய்ந்து செயல்படும் படியும் அவர்களுக்கு அருளப்பட்ட குர் ஆனையும் பின் பற்றி வாழும் படியும் உங்கள் சகோதரன் நான்
மா சலாம்.
அப்துல் அஜீஸ்

Reply

ABDUL AZEEZ March 8, 2014 at 5:59 pm

http://www.satyamargam.com/islam/for-muslims/1762-1762.html

this link will help you.
maa salaam
abdul azeez

Reply

Abubakkarsithik March 18, 2014 at 3:34 pm

Jasakallahu Haira,En anbu sahaotharar, Abdul Azeez avargalukku (anegamaaga thangal Aalimaga Iruppirgal endru ninaikiren) ungalai pole ennal vilakkamo alladu, puriyavaikkavo mudiyadu, allah naadinal purindu amal seyya mudiyum, ALLAH RAHMAAN !!!!!!!!!!!!!!,

// தப்லீக் என்ற இயக்கத்தை நீக்கிட்டு முஸ்லிம்கள் என்ற பெயரிலேயே செயல் பட்டால் வெற்றி உறுதி தானே !//

satthiyam thaan nanbarey. aanal thabliq iyakkm illaiye ,وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ

الْمُنكَرِ ۚ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் – இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.
intha muyartchi thaan

thabliq illai endral enakku intha purithalum irunthirukkadu!! athanaal athai neekka mudiyadu,. enn endral ithaiyum allahval thaan ertpaduttha mudiyum, aanal naan alhamdu lillah Muslim, (( isalamai en thooya margamagavum, allah vai en allah vagavum, rasul muhammed (sal) avargalai en nabiyagavum eatru konden)) enkku intha thabliq iyakkamaga thondravillai, arasiyalagavum illai !!

//நாம் நபியுடனே சம்பந்தம் இல்லை என்று இருக்கும் போது எவ்வளவு பெரிய புத்தகதை விழுந்து விழுந்து படிதாலும் பத்து காசுக்கு பிரயோஜனம் இல்லை.//

masha alla, avargalin purithalai kavanithirgala?!?! sahathora? athavadu intha thabliq vathigal !, sari avargalidam poi sollungal ungal nabi zakkariya , allathu ilyas, allathu yusuf illai veru yaravadu irundhal avargalin peyargalaiyum koorungal avargal nabiyaga eatru kolgirargala??

pin eppadi pirayojanam irunthirukka mudiyadu, athe pole avargalin mun nabi (sal) avargalin meedu (nawoodhubillahi minha) eathenum avathooru kooripparungal (sinna purithalukkaga sonnen vendam, vendam allah nmmai kaaptra vendum, asthagufirullah) avargal summa irunthu vittargal endral neengal solvadu sari thaan nanbarey!!

masha allah, thangal ilmil abivruthi undakka allah kirubai seivaanaha. antha link parthen miga neenda kalanduraiyadalum irundadu, niraya vilakkamum ulladu, aanal oru sinna visayam en manathil vandhadu,

avargal appadi, ivargal ippadi, endrum thaalim bookil ivvalavu pilaigal endra neenda visayamum paarthen, aanal ummath ippodu entha pilaigal illamal illai. sollungal,?? neengal solvadu 100/100% sari than allah ennaiyum ungalaium amal seya arul purivanaha, aameen,

neengal sonna visayam ellam eduthu irundhal ellorum athai allava pinpatra vendum, veru etho seithu kondallavaa irukirargal kavanikkavum, antha amalgal ellam bith attha, Utharanamaga – pallivasalil athigamaga irukiraargal, thajooth tholugirargal, innum evvalvo naan koora virumbavillai neengaley kavanikkavum, (kavnikka vendam ethavathu kuraigal therinthal avargal nabiyallavey sadharana manithar thaaney pin athai veru naan sonnathaal thaan kuraikavanikkap pattadu, allah parthukolvan vidungal)

aanal evvalavu per amalin aarvathirku varuvargal yosiyungal, vilangiyavan amal seivaan insha allah, vilangathavanin nilai engey povaan,

sari hair, allah podumanavan, neengal intha mathiri sollikondu irundhaal thaan nalladu,
naamakul karuthugal vetrupadalaam, aanal neengalum naanum muslim, duaa seyyavum allah avan virumbiya vaazkai vaaza, avan nabiyin vaziyil

allah nammai porindhi avan porutham thara vendum,

Reply

ABDUL AZEEZ March 19, 2014 at 2:53 am

சகோ சகோதரர் ஆபுபக்கர் சித்கிக் அஸ்ஸலாமு அலைக்கும்.

அருமையான அல்லாஹ்வின் வார்த்தையை வைத்து பதில் கொடுக்கிறீகள் அல்ஹம்துலில்லாஹ்

நீங்கள் எடுத்து காட்டிய வசனம் பிரகாரம் ரசூல் காலத்திலிருந்து நடந்தேரியுள்ளது. ஆனால் அப்படி ஏவுவதர்க்கும், தடுப்பதர்க்கும் நமக்கு ஒரு ப்ராண்ட் பெயர் இருந்தால் தான் செயல் பட முடியும் என்றால் அது வழிகேடு என்பதில் சகோதரர் உணரவேண்டும். என்பதை சுட்டிக் காட்டுகிரேன்.

ஒவ்வொரு இயக்கமும், அமைப்புகளும், நீங்கள் குரிப்பிட்டது போல் நல்ல காரியத்தை முன் வைத்து தான் இயங்கி கொண்டிருக்கிறது.

அனைவருமே தங்களை சரியான செயலில் இருப்பதாக சொல்லிக் கொல்கிறார்கள்.

அனைவருக்குமே முஹம்மது (ஸல்) அவர்கள் நபியெனவும் அல்லாஹ்வை அதிபதியாகவும் ஏற்று செயல் படுகிறார்கள்.

அனைவருக்குமே இயக்கம் மற்றும் அமைப்புகள் ரீதியில் செயல்கள் மட்டுமே சரியானது. ஆனால் அதன் மூலம் தங்களை புதிய பெயர் கொண்டு வேரு முகமாக தங்களை வெளிக்காட்டிக் கொள்கிரார்கள்.

இந்த புதிய பெயரை சொல்லி தங்களை அடையாலபடுத்தி காட்ட அனுமதி இருக்கா ??

ஹுவ சம்மாகுமுல் முஸ்லிமீன் – அவன் தான் உங்களுக்கு முஸ்லிம்கள் என்று பெயர் வைத்தான்.

அல்லாஹ் நமக்கு முஸ்லிம்கள் என்று பெயர் சூட்டி இருக்கும் பொழுது நமக்கு மாற்றி வெளிபடுத்த அதிகாரம் இல்லாதவர்களாக இருக்கிரோம். அப்படி செய்தால் அதிகாரத்தை நம் கையில் எடுத்துகொண்டோம் என்றாகிறது.

மேலும் முஸ்லிமாக அன்றி மரணிக்காதீர்கள். என்பதும் அல்லாஹ்வின் கட்டலை.

//நாம் நபியுடனே சம்பந்தம் இல்லை என்று இருக்கும் போது எவ்வளவு பெரிய புத்தகதை விழுந்து விழுந்து படிதாலும் பத்து காசுக்கு பிரயோஜனம் இல்லை//

என்று சொன்னது இஸ்லாத்தை விட்டு நபியையும் அல்லாஹ்வையும் விட்டு ஒதுங்கி போனானே ! அவனை சொல்லலை அவனுக்கு பெயர் காஃபிர்.

பின்னே நான் சொன்னது என்ன ? அந்த அல்லாஹ்வையும் ஏர்ப்பான் நபியையும் ஏர்ப்பான். பெயர்கள் மூலம் வழிகேட்டில் மாட்டி இருப்பான். அந்த வசனம் அதை தான் சொல்கிறது காஃபிர்களை சொல்லவில்லை.

நிமிடத்திர்க்கு ஒரு முரை நபியையும் அல்லாஹ்வையும் பற்றி வாய் கிழிய பேசுவார்கள்.செயல்படுவார்கள்.
ஆனால் நவீன பெயர் தாங்கி கொண்டு நல்ல காரியம் செய்வார்கள்.

அல்லாஹ் சான்றிதல் தருகிறான்
மக்களை நேர் வழியின் பக்கம் அழைத்து சாலிஹான நல்ல செயல்கள் செய்து தன்னை முஸ்லிம் என்றூ கூருபவனைவிட அழகிய சொல் சொன்னவன் யார் ?

ஆக இயக்கம் அமைப்பு அல்லது எதுவுமே இல்லாமல் ஒரு பெயரை மட்டும் சொல்லி ஒரு கூட்டம் அதில் ஒலிந்திருந்தால் அவர்கலையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டு தான் இருக்கிரான். அப்படி பிறிந்தவர்களை அல்லாஹ் சுட்டி காட்டுகிறான். அவர்கள் அல்லாஹ்வின் சான்றுக்கு உட்பட மாட்டார்கள்.

அன்றியும் என் இல்முக்கு அடிக்கடி து ஆ செய்யும் சகோதரருக்கும் என் து ஆவும் கண்டிப்பாக உண்டு என்பதை மகிழ்சியுடன் தெரிவிக்கிரேன்

//உம்மத் இப்போது எந்த பிழைகள் இல்லாமல் இல்லை. சொல்லுங்கள்,?? //

உம்மத் தவரு செய்வது இயல்பு தவரு செய்பவர்களாக தான் படைத்துள்ளான்.

அதர்க்காக தவரான கருத்தோட்ட நூலை படிக்க தூண்ட கூடாது. அனுமதிக்க கூடாது.

இரவில் தஹஜ்ஜத் தொழுகை இஃதிகாஃப் போன்ற வணக்கங்கள்ளாம் ஆதார போர்வமானது தான். அதை மறுப்பதற்க்கில்லை

சகோதரருக்கு என் வார்த்தை மனம் புண்படும் படியோ அல்லது வேரு எதாவது ஒருவகயில் தீங்கு உண்டு பன்னி இருந்தால் மன்னித்துக்கொள்ளும்படி கேட்டுக் கொல்கிறேன்.

மா சலாம்.
அப்துல் அஜீஸ்

Reply

Abubakkarsithik March 19, 2014 at 5:55 pm

Assalamu alaikum,

Nanbarhale, thabliq seibavargal innum sila puthagamum padikirargal athai patri ungalukku theriyadu endru ninaikiren, Utharanatirku sila (Kootagavum thanipatta muraiyagavum)
1 – Fadaela – Aamal
2 – Fadaela – Sadhaka
3 – Munthab – A – Hadhees
4 – Hyathus – Sahaba
5 – Riyalus Saleeheen
Thanipatta muraiyil
1 – Quran
2 – Masnoon Duaa
3 – Dua – a – Walib
4 – Buhari
5 – Muslim
innum irukku aanal avargalin virupatirku erpa, avargalin ikhlaas namakku etharkku, namkku vendiyathu avargalin thawaru engu velipadum endru thaaney

allah ennaiyum vilanga vaikka vendum, ean endral naaney innum sariyaga pogavillai thabliq, ivai ellam en paarvail pattathey
Abubakkarsithik

Reply

ABDUL AZEEZ March 20, 2014 at 2:14 am

சகோதரர் ஆபுபக்கர் சித்கிக் அஸ்ஸலாமு அலைக்கும்.

ஏராளமான இஸ்லாம் சம்பந்ததப்பட்ட புத்தகஙகள் நம் சகோதரர்கள் படிப்பது மற்றவருக்கு தெரிய வாய்ப்பு இல்லை இன்னும் சந்தோஷமான விஷயமே !

// இன்னும் இருக்கு ஆனல் அவர்கலின் விருப்பதிற்க்கு ஏர்ப, அவர்களின் இக்க்லாஸ் நமக்கு எதர்க்கு, நம்க்கு வேண்டியது அவர்களின் தவறு எங்கு வெளிப்படும் என்று தானே //

அந்த நோக்கம் யாருக்கும் வரக்கூடாது. ஒருவர் பின்னாலேயே போய் அவர் என்ன செய்கிறார் எங்கே பிழை விடுகிறார் என்று துறுவி துறுவி நோட்டம் விடுவது என்பது ஒரு விஷயம்.

ஆனால் ஒரு சகோதரர் தவரான பாதையில் நம் கண் முன்னுக்கு தெரிந்து நாசமாகிரார் அதை எடுத்து சொல்லி புரியவைத்து நல்ல நிலைக்கு கொண்டுவருவது அல்லது எச்சரிப்பது என்பது இன்னொரு விஷயம்.

தவரை சுட்டிக் காட்டி எடுத்து சொல்வதே சிலருக்கு ஜீரணிக்க முடியவில்லை என்றால் அவர்கள் எந்த முகத்தோடு மற்றவர்களுக்கு தீன் பனி செய்ய முடியும் எந்த அருகதையில் மற்றவர் தவரை எடுத்து சொல்லி இப்படி எல்லாம் இருக்காதே மொவ்த் இருக்கு தொழ வந்துடு என்று பள்ளிவாயிலுக்கு கொண்டு வரமுடியும்.

அதனால் தவரு என்பது யாவரும் செய்வதே நீங்கள் என்னை திருத்தலாம் நான் உங்கலுக்கு சொல்லலாம் ஆனால் தென்படும் தவரை சுட்டிக் காட்டுவதே தவறு என்பது தவறானது.

மா சலாம்.
அப்துல் அஜீஸ்

Reply

Abubakkarsithik March 21, 2014 at 2:58 pm

Assalamu alaikum,
Sahothar Abdul azeez avargalukku, // இன்னும் இருக்கு ஆனல் அவர்கலின் விருப்பதிற்க்கு ஏர்ப, அவர்களின் இக்க்லாஸ் நமக்கு எதர்க்கு, நம்க்கு வேண்டியது அவர்களின் தவறு எங்கு வெளிப்படும் என்று தானே // indha vaarthai thanglain manthai punpaduthi irundhal mannikkavum,

nanbarey intha karuthai naan solvadhaga neengal padithu parungal!!!!!!!!!
//அதனால் தவரு என்பது யாவரும் செய்வதே நீங்கள் என்னை திருத்தலாம் நான் உங்கலுக்கு சொல்லலாம் ஆனால் தென்படும் தவரை சுட்டிக் காட்டுவதே தவறு என்பது தவறானது.//

ean endral naanum athey ye virumbinen, enthavarai sutti kaatum bodu alhamdu lilah naan eatru kolven, melum varuthappattu athai kalaya paadu paduven insha allah,

meendum thangalidam naan ethavadu thavarahavo alladu manam ppunpadumbadi karuthu therivithirundhal ennai mannikkavum.

Assalamu alaikum

Reply

Abubakkarsithik March 20, 2014 at 8:26 pm

Assalamu alaikum,

sahothar Abdul Azeez, avargalukku,
// ஆனால் அப்படி ஏவுவதர்க்கும், தடுப்பதர்க்கும் நமக்கு ஒரு ப்ராண்ட் பெயர் இருந்தால் தான் செயல் பட முடியும் என்றால் அது வழிகேடு என்பதில் சகோதரர் உணரவேண்டும். என்பதை சுட்டிக் காட்டுகிரேன்.//
neengal solvadu sari, namakku allahvin margathin ulla thodarbey podumaanadhu, namakku entha front um thevai illai enbathai alhamdu lillah naan unarven,
“ithai vaithu thaan, athai vaithu thaan, ithu irundhal thaan, adhu irundhaal thaan” allahvin maargathi solla mudiyum enbathum ennai pondra ariveeli in paarvail shirk endrey thondrugirathu.

Allah Jalla jalalu, ellam seyyakudiya aatral udayya kaadhir, avan markathil nammai therndu eduthu avanai imaan kondu, avan kooriya paathai il nadakka vaitthu, nammakku uyarndha kooli kodukka ippadi oru poruppaiyum koduttha Rhaman ALLAH, atharku naam thaguthi vaainthavargalaa endrall allah oruvaney arinthavan,
Athil ean iyakkam, katchi, front, leag endrellam, namkku intha onrey podumey neengal sutty kattyadey, allah vin Quran il ” “ஹுவ சம்மாகுமுல் முஸ்லிமீன் – அவன் தான் உங்களுக்கு முஸ்லிம்கள் என்று பெயர்
வைத்தான்” ” pin etharuku veru arimugam, sari thaney, ithai naan orupodum marukkavillai!!!

Aanal naan solvadu, intha thbliq patriya oru sina kalandaaiyvu patriyadu, ((naan ethaiyum kurai koora vendum enro, sari endru sollavo, ellam theridhavan endro allthu naan ellam vilagiyavan endro intha visayangalai patri aalosanai siya villai, oru kavalai thaan eppadi ummath ondru pada vendum atharkku entha vali indru sumugam endra avalil thaan, Allah ennai mannikka vendum “”laa howla walkuwwatha illa billah””))
sari hair, visaytirkku varvom thabliq iyakkamagavo, katchi yagavo thannai arimugam seiyavillaye!!! athei matravargal solliyadhu thaan thabliq endru avargaley koorugiraargal, athey pole, indrya ella iyakkamum,front um ennai porutha varai il avargalin ulagathai patri kavalai padum alvirtku aheerath visayam patri kavalai padugiraar galey illay,

asalaga akheerath udaya visyangal thaan kavalai paduvatharkkum, sanjalppadvatharkum uriyadu aanal indru nadappadho veru, allah ennai vilanga vaikka vendum, atharkkaga ellam vittu vida vendum endru sollavillai, thevai nokkam endra purithal illathaal ulla kavalai in kaaranamaga vey, thabliq visayam patri meendum meendu pesa thondruthu,
athanal thaan ivvalvu eluthukkal, mash allah thangalin arivu uraigalukku sirandha nartkooli ulagam akheerath irandilum kodupanaga,

thangalin karuthugalo, varthaigalo enakku entha paathippum ertpadutha villai, allah porinthiya vazkai vazza allah nam anaivar meedu arul purivaanaha, Aameen

Assalamu alaikum
Abubakkarsithik

Reply

ABDUL AZEEZ March 22, 2014 at 12:13 am

வ அலைக்கும் ஸலாம் சகோதரர் ஆபுபக்கர் சித்கிக் அவர்களுக்கு.
// என்னை போன்ற அறிவிலி இன் பார்வையில் ஷிர்க் என்றே தோன்றுகிறது.//
இது சரி இல்லை தன்னை மட்டம் தட்டுவது.

ஷிர்க் என்பது அல்லாஹ்வுக்கு யாரையாவது நிகராக்குவது ஆனால் இது அல்லாஹ் ஏர்படுத்தி வைததில் சில மாற்றம் கொண்டு வருவது அதாவது பித் அத்

// நாம் தகுதி வாய்ந்தவர்களா என்றால் அல்லாஹ் ஒருவனே அறிந்தவன்,//

நாம் தகுதி உல்லவர்கள் தாம் இல்லை என்றால் நம்மை பார்த்து கட்டலை இடமாட்டான்
உங்களில் ஒரு கூட்டம் நல்லதை ஏவவும், தீயதை தடுப்பதர்க்கும் இருக்கட்டும் என்று.
அப்படி நமக்கு இல்லை என்றால் அல்லாஹ்வால் சரியான ஆளை தேர்ந்தெடுக்கும் திரண் இல்லாதவன் போல் என்றாகிறது. மேலும் இச்சிந்தனை அல்லாஹ்வின் ஆற்றலுக்கு குந்தகம் விலைவிக்கக் கூடியது.

// ஒரு கவலை தான் எப்படி உம்மத் ஒன்று படவேண்டும் //

உங்கள் உம்மத் ஒன்று படவேண்டும் என்ற கவலைக்கு அல்லாஹ் கூலி கொடுப்பானாக. ஆமீன்.

// தப்லிஃ இயக்கமாகவோ, கட்சி யாகவோ தன்னை அரிமுகம் செய்யவில்லயே!!! //

ஜமா அத்தாக சில சமயம் உங்களை தவிர மற்ற சகோதரர்களால் இயக்கமாகவே சொல்லப் படுகிரது.

இயக்கம் என்பது ஒரு விகாரம் அல்ல நாங்கு நபர் ஒரு மையித் தூக்கி கொண்டு செல்கிரார்கள். அதில் ஒருவர் இயங்காமல் விலகிவிட்டால் நிலமை என்னாகும் அடுத்த கனம் மயித் தரையில் விழும்.

அதே போல தான் தப்லீஃக் ஜாமாத் சகோ க்கலும் பெரிய கூட்டம் நடத்துகிராற்கள் வீடு வீடாக சென்று மற்ற சகோ க்கலை தொழ அழைக்கிராற்கள். அவர்கள் இயங்காமல் அந்த சகோதரர் பள்ளிக்கு தொழ வருவாரா ? இல்லை நார்ப்பது நால் மாசம் கனக்கில் எப்படி போய் தங்குகிரீர்கள். எல்லாமே திட்டம் அடிப்படையிலும் உங்களின் செயல்கலில் தானே உல்லது
அந்த செயல்களுக்கு பெயர் தான் இயக்கம் அனைவருமே படுத்த படுக்கயில் கோமா நிலையில் இருந்தால் மட்டுமே இயங்காமல் இருக்கிரீர்கள் என்று அர்த்தம்.

உங்களின் எழுத்துக்களை நான் தமிழ் எழுத்துருவியில் உங்கள் அனுமதி இல்லாமல் மாற்றியதர்க்கு வருந்துகிரேன்.

நான் சத்யமார்கம் இனய தளதில் உல்ல தமிழ் தட்டச்சுவில் அடித்து உங்களுக்கு பதிகிறேன்.

மா ஸலாம்.
அப்துல் அஜீஸ்

Reply

Abubakkarsithik March 22, 2014 at 6:48 pm

Assalamu alaikum,
Sahotharar Abdul Azeez avarkalukku.
Masha allah, // என்னை போன்ற அறிவிலி இன் பார்வையில் ஷிர்க் என்றே தோன்றுகிறது.//
இது சரி இல்லை தன்னை மட்டம் தட்டுவது// ithanaal than ennai ariveeli endru solli vitten,

Subhanallah //அப்படி நமக்கு இல்லை என்றால் அல்லாஹ்வால் சரியான ஆளை தேர்ந்தெடுக்கும் திரண் இல்லாதவன் போல் என்றாகிறது. மேலும் இச்சிந்தனை அல்லாஹ்வின் ஆற்றலுக்கு குந்தகம் விலைவிக்கக் கூடியது.// Sariye allah vin aatralukku kunthagam vilaivikkum vaartahi ennal ertpattadukku, allah ennai mannikka vendum, Asthagufirullah, Asthagufirullah,

//இயக்கம் என்பது ஒரு விகாரம் அல்ல நாங்கு நபர் ஒரு மையித் தூக்கி கொண்டு செல்கிரார்கள். அதில் ஒருவர் இயங்காமல் விலகிவிட்டால் நிலமை என்னாகும் அடுத்த கனம் மயித் தரையில் விழும்// Appo thabliq sariya? thavara??

Allahu Akbar //உங்களின் எழுத்துக்களை நான் தமிழ் எழுத்துருவியில் உங்கள் அனுமதி இல்லாமல் மாற்றியதர்க்கு வருந்துகிரேன்//Appadi ondrum illai puriya vaikka thangal seidha muyartchi varavertka thakkathe, Masha allah,

Naanum pala thadavai, sathiyamargam web site il poi ullen,
Assalamu alaikum,

Reply

ABDUL AZEEZ March 23, 2014 at 2:29 am

வ அலைக்கும் ஸலாம் சகோதரர் ஆபுபக்கர் சித்கிக் அவர்களுக்கு.
// அப்போ தப்லீஃ சரியா? தவரா??//

தவரானதே ! அந்த இடத்தில் முஸ்லிம்கள் என்று மாற்றிக் கொண்டால் சரியாகிவிடகிறது.

வீடு வீடாக போய் தொழ அழைக்கலாம் பள்ளியில் அமர்ந்து ஹதீத் படிக்கலாம். உங்களின் அனைத்து செயல்கலையும் குறைவு இல்லாமல் செய்யலாம்.
அது தான் நீங்கள் நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும்/ என்ற வசனத்திற்க்கு ஒப்பாகிறீகள்.

அதே போல் தமிழ் நாடு தௌஹீத் என்ற பெயரையும் அந்த சகோதரர்கள் மாற்றி முஸ்லிம்கள் என்று வைத்து அவர்கள் செயல்கலான அனைதையும் செய்தால் அல்லாஹ்வுக்கு பொருத்தமான செயல்கள் செய்ததாக அமைந்துவிடுகிறது.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் ஒவ்வொரு பெயர்களில் பிரிந்து செயலாற்றும் இயக்கத்தினர்க்கும்.

எல்லோருக்கும் செயல்களில் தப்பில்லை வைத்துக் கொண்ட தலைப்பின் பெயரில் தான் தப்புல்லது.

அப்படி செயல் விஷயதிலயும் பிழை இருந்தால் அதையும் மாற்றிக் கொள்வது கஷ்டம் இல்லை.

// இந்த வார்த்தை தங்களின் மனதை புன்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்,//

நீங்கள் இதுவரை கருத்திட்டதில் எந்த வார்த்தையும் எதுவும் என்னை புன் படுத்தவில்லை.

இயக்க மோகமோ அல்லது அமைப்பு தாக்கமோ எதுவுமே உங்களை மேழலச் செய்யாமல் இயல்பு என்ன என்று தெரிந்து கொல்லவேண்டும் என்ற ஆசையில் உங்களை போன்ற ஆர்வமுல்ல சகோதரர்கள் ஒவ்வொருவரும் உணர்ந்தால் கண்டிப்பாக ஒன்றுபடுவது உறுதி

மா ஸலாம்.
அப்துல் அஜீஸ்

Reply

Abubakkarsithik March 25, 2014 at 1:08 pm

Assalamu alaikum,

Sahotharar avargalukku

//நீங்கள் இதுவரை கருத்திட்டதில் எந்த வார்த்தையும் எதுவும் என்னை புன் படுத்தவில்லை// Alhamdu lillaah

//இயக்க மோகமோ அல்லது அமைப்பு தாக்கமோ எதுவுமே உங்களை மேழலச் செய்யாமல் இயல்பு என்ன என்று தெரிந்து கொல்லவேண்டும் என்ற ஆசையில் உங்களை போன்ற ஆர்வமுல்ல சகோதரர்கள் ஒவ்வொருவரும் உணர்ந்தால் கண்டிப்பாக ஒன்றுபடுவது உறுதி// Insha allah, summa insha allah,

Jasakallahu Khaira, allah ungalin dheenudaya kavalaiyai porundhi, eatru kolvaanaha

Assalamu alaikum,

Abubakkarsithik

Abubakkarsithik March 20, 2014 at 8:45 pm

assalamu alaikum,

Masha allah thangalin web arumai, naan thinamum oru visit aavadhu ingu varuven, athe pole oru topic padithu vittu poven Alhamdu lillah,

anaal karuthugal idam perum column il mattum siriya maruthal ertpadithinal innum sirappaga irukkum, (aagavali news paper il kooda karuthugal column il englisil type seithaal tamilil varugirathu) thangal eluthum visyam thamilil Masha allah sariyaga pathivagi vidugirathu, aanaal nangal pathivu seyum karuthugal mattum appadiye English il nindruvidugirathu, athanal siriya varutham

Allah ungalin muyartchiyai porindhi kolvaanaha!, melum intha web um allah vin perai solli allah vin pakkam azaikkum kaaranama allah amaippanaga!!, Aameen!!!

Assalamu alaikum
Abubakkarsithik

Reply

msm.hameem March 21, 2014 at 3:49 pm

தங்கள் கட்டுரைஇல் விமர்சித்துள்ளீர்கள் ஒரு தலைமையில் ஒன்ருபடுவதட்கான மாற்றீடை சொல்லவில்லையே அதுதானே தேவை

Reply

Abubakkarsithik March 22, 2014 at 7:08 pm

Assalamu alaikum,
sahotharar, msm.hameem, avarhaley //தங்கள் கட்டுரைஇல் விமர்சித்துள்ளீர்கள் // naan ethum katturai eluthavillai, en santhegangalaiyum, en kulappangalaiyum kettullen,

//மாற்றீடை சொல்லவில்லையே அதுதானே தேவை// itharkum naan badhil solla mudiyadhavan, en endral itharkku thakva ulla aalim perumakkalidam kettu kollavendiyadiya kelvi,

Masha allah, thalippu katturaiye sariyana thoru theervaha irukkum konjam kavanikkavum,

//அருமை சகோதர, சகோதரிகளே! இஸ்லாத்தில் ஒற்றுமை என்பது கடமையாக்கப்பட்ட ஒன்று.

கூட்டுத் தொழுகை, நோன்பு, ஜகாத்தை ஒன்றாக சேகரித்து விநியோகிப்பது, மாபெரும் இஸ்லாமிய மாநாடாகி ஹஜ், போர்க்களங்கள், இஸ்லாத்தின் இந்தக் கடமைகள் எல்லாம் ஒற்றுமையை மையமாக வைத்தே செயல்பட வேண்டும் என்பதற்காகவே விதிக்கப்பட்டுள்ளன.

அதே போன்று பிரசாரங்கள், மக்கள் சேவைகள் எல்லாவற்றிருக்கும் ஒற்றுமை வேண்டும். தனி, தனிப் பெயர்கள், தனி, தனி சட்டதிட்டங்கள், உறுப்பினர் சேர்க்கை நிச்சயமாக ஒற்றுமையை ஏற்படுத்தப் போவதில்லை.

தனி, தனியாக ஒவ்வொரு பெயரை நாம் தேர்ந்தெடுக்கும் போதும், அங்கீகரிக்கும் போதும், அது ஒன்றுபடக்கூடிய முஸ்லிம் சமுதாயத்தின் மீது விழும் அடி, ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் மிகப்பெரிய தீய செயல் என்பதை நினைவில் வையுங்கள்.

உலகளாவிய நமது இயக்கத்திற்குப் பெயர் இஸ்லாம், இஸ்லாமிய இயக்கத்தில் சேர்ந்தவர்களுக்குப் பெயர் முஸ்லிம்கள். இந்த இயக்கத்தின் (பைலா) சட்டதிட்டம், குர்ஆனும், நபிமொழிகளும்தான். எனவே எல்லா பிரிவினை இயக்கங்களையும் விட்டு ஒதுங்கி முஸ்லிம்களாக மட்டுமே வாழ சபதமேற்போம்.//

Assalamu alaikum

Reply

Mohamed Nalim April 9, 2014 at 7:26 pm

ஜமாத்தின் கட்டுக்கோப்பை மாத்திரம் சிந்திப்பவர்கள் இஸ்லாத்தின் கட்டுக்கோப்பை மறப்பது ஏனோ ? உலக வசதிக்காக ஜமாத்திற்கு பெயர் வைப்பவர்கள் மார்க்க விடயங்களுக்கு அதை பயன் படுத்தாமல் செயற்பட முடியுமா ?

Reply

Leave a Comment

Previous post:

Next post: