அற்புதம் விளைவிக்கும் அல்குர்ஆன்!

in இஸ்லாம்

யூதர்கள், கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் ஆகிய மூன்று சமூகத்தாரும் கொண்டாடும் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு இரண்டு ஆண் மக்கள். ஹாஜரா (அலை) அவர்கள் மூலம் பிறந்த இஸ்மாயீல் (அலை) சாரா (அலை) அவர்கள் மூலம் பிறந்த இஸ்ஹாக் (அலை).

அரபு நாட்டினர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழி வந்தவர்கள். ஆரம்ப கால யூத, கிறிஸ்தவர்கள் இஸ்ஹாக் (அலை) அவர்களின் வழி வந்தவர்கள். இப்ராஹீம் (அலை) அவர்களின் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களிலிருந்து இறுதி நபி صلى الله عليه وسلم அவர்களது காலம் வரை சுமார் 3500 ஆண்டுகால வரலாற்றின் இடையில் அரபுகளிடம் ஒரு நபியும் வரவில்லை. ஆனால் இஸ்ஹாக் (அலை) அவர்களிலிருந்து ஈஸா (அலை) அவர்களது காலம் வரை ஆயிரக்கணக்கான நபிமார்கள், குர்ஆன் சிறப்பித்துக் கூறும் பனீ இஸ்ரவேலர்களிடையே தோன்றியுள்ளனர். இந்த விபரங்களை ஏன் எடுத்து எழுதுகிறோம் என்றால் 3500 ஆண்டுகள் இடைப்பட்ட காலத்தில் மக்களை நேர்வழிப் படுத்தும் ஒரு நபியும் அரபுகளிடையே தோன்றவில்லை என்றால் அவர்கள் எந்த அளவு வழிகேட்டிலும் மூட நம்பிக்கையிலும், மூடச்சடங்கு சம்பிரதாயங்களிலும் மூழ்கி இருந்திருப்பார்கள் என்பதை உணர்த்தத்தான்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் அந்த மக்களிடையே சத்திய மார்க்கத்தை எடுத்து வைக்கும்போது அந்த அரபு மக்களிடையே இருந்த அறியாமைக்கு வேறு எந்த சமூகத்தாரையும் உதாரணம் காட்ட முடியாது. அவர்களை விட வழிகேட்டில், மூட நம்பிக்கைகளில், மூடச் சடங்கு சம்பிரதாயங்களில் வேறு எந்த சமூகமும் அன்று உலகில் இருந்ததாகத் தெரியவில்லை. 365 சிலைகளை ஏக இறைவனின் வீடான கஃபத்துல்லாஹ்வின் உள்ளே வைத்து வணங்கி வழிபட்டு வந்தார்கள். குடி, விபச்சாரம், கொலை, கொள்ளை போன்றவற்றில் கொடிகட்டிப் பறந்தார்கள். பஞ்சமா பாதகங்கள் அனைத்தும் அவர்களிடம் வீர, தீரச் செயல்களாகப் பெருமை பேசப்பட்டு வந்தன.

பல்லாண்டு ஊற வைத்த மதுக்குடங்கள் இருப்பது கொண்டு பெருமை பேசினர். குடம் குடமாக குடித்த பின்னரும் நிதானமாக இருப்பதாக பெருமை பேசினர். தங்களுடைய வாட்களால் எத்தனை பேருடைய தலைகளைச் சீவியுள்ளோம் என்று பெருமை பேசினர். தந்தைக்கு நூறு மனைவிகள் என்றால் அந்தத் தந்தை இறந்தவுடன் அவனது பிள்ளைகள் அந்தத் தந்தையின் மனைவிகளை பங்கு போட்டு தங்களின் மனைவிகளாக ஆக்கிக் கொண்டு பெருமை பேசினர். இப்படி ஆகாத செயல்கள் அத்தனைகளிலும் பெருமை பேசினர்.

இப்படி பங்கு போடுவதிலும், வேறு பல சில்லரைக் காரியங்களிலும் மனவருத்தம் ஏற்பட்டுவிட்டால், அதற்காகத் தலைமுறை தலைமுறையாகச் சண்டையிட்டுக் கொண்டார்கள். அன்றைய அரபு நாட்டில் பல்வேறு பிரிவினர்களாக, குழுக்களாகப் பிரிந்து நின்று பெறுமை பேசுவதோடு, மற்றப் பிரிவினரை இழிவாக, கேவலமாக எண்ணி ஏகத்தாளம் பேசுவதோடு, அதனால் போட்டி பொறாமை ஏற்பட்டு காலமெல்லாம் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். இப்படி மனித உள்ளம் படைத்தவர்கள் செய்யக் கூடாத அத்தனைக் காரியங்களையும், சுருக்கமாகச் சொன்னால் மிருகங்களாக வாழ்ந்து வந்தார்கள்.

மனித வர்க்கத்தின் இழிவான, மோசமான ஒரு நிலையே இல்லை என்றும் சொல்லும் அளவிற்கு வீழ்ந்து கிடந்தனர். இறுதி நபி அந்த அரபு மக்களிடையே வரும்போது அந்த மக்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாகவும், நரக நெருப்பின் விழிம்பில் இருந்ததாகவும் அல்லாஹ் அல்குர்ஆன் 3:103 வசனத்தில் தெளிவுபடுத்திவிட்டான். அப்படியானால் அதைவிட இழிவான, மோசமான கீழ்த்தரமான வேறு நிலையே மனித வர்க்கத்தில் இல்லை என்பதுதான் அதன் பொருள். அரபு மக்களிடையே இருந்த பிரிவுகள் போல் உலகில் வேறு எங்கும் இருக்கவில்லை.
அப்படிப்பட்ட அந்த மக்கள் தங்களின் அந்த நிலைக்கு நேர் மாற்றமாக ஒன்றுபட்டு, மனிதனின் ஆக உன்னத நிலை, மனிதப்புனிதன் என்று சொல்வார்களே அப்படிப்பட்ட ஆக உன்னத நிலைக்கு உயர்த்தப்பட்டார்கள். அகில உலக மக்களுக்குக் முன்மாதிரியாக, வழிகாட்டிகளாக ஆனார்கள். எப்படி? அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடந்தவர்கள் இமயமலை உச்சிக்கே உயர்ந்தார்கள் எப்படி? அதி அற்புதமான இந்த அதிசயத்தை எது நிகழ்த்திக் காட்டியது?

ஆம்! அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கியருளப்பட்ட அல்குர்ஆனே இந்த அற்புதத்தை நிகழ்த்திக் காட்டியது. ஆயினும் இந்த அற்புத மாற்றம் மிக எளிதாக நிறைவேறிவிடவில்லை. மிகமிக கடின முயற்சிக்குக் பின்னரே இது சாத்தியமாயிற்று. வழமைப்போல் அந்த காலத்திலும் புரோகிதரர்களே மக்களிடையே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். “தாருந்நத்வா”(அறிஞர்கள் சபை) என்ற புரோகிதரர்களின் சபையினரே மக்களை ஆட்டிப்படைத்து வந்தனர். அந்த மக்கள் எளிதாக அல்லாஹ்வின் இறுதி வேதமான அல்குர்ஆனை ஏற்றுச் செயல்பட அந்த தாருந்நத்வா அறிஞர்கள் விட்டு வைக்கவில்லை. அல்குர்ஆனை விட்டு மக்களைத் தூரப்படுத்த என்ன என்ன தந்திரங்களைப் கையாள முடியுமோ அத்தனைக் தந்திரங்களையும் கையாண்டார்கள்.

இந்த முஹம்மது ஷைத்தானிடமிருந்து சில மந்திரங்களை அறிந்து கொண்டு அவற்றை மக்களிடம் ஓதிக்காட்டி மக்களை மயக்குகிறார்; வழிகெடுக்கிறார். அவர் ஒரு சூன்யக்காரர், கவிஞர், பொய்யர், சந்ததியற்றவர், பைத்தியக்காரர், மோசடிக்காரர் என்றெல்லாம் தொடர்ந்து துர்ப்பிரச்சாரம் செய்து மக்கள் இறுதி நபியையும், அல்குர்ஆனையும் நெருங்க விடாமல் செய்தனர். தப்பித்தவறி கூட குர்ஆன் ஓதுவதை கேட்டுவிடக்கூடாது என்பதற்காக மக்களை காதுகளில் பஞ்சை வைத்து அடைத்துக்கொள்ள தூண்டினார்கள். அல்குர்ஆனை நெருங்க விடாமல் இருக்க அத்தனை முயற்சிகளையும் தாருந்நத்வா புரோகிதரர்கள் செய்தனர்.

நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு சத்தியத்தை நிலைநாட்டுவது மிகப் பெரிய சவாலாக இருந்தது. நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு எத்தனை விதமான தொல்லைகள், துன்பங்கள் கொடுக்க முடியுமோ அத்தனையையும் கொடுத்தார்கள். சிலரைக் கோரமாகக் கொலை செய்தார்கள். எப்படியும் நேர்வழிக்கு வந்தவர்களை மீண்டும் தங்களது வழிகேட்டுப் பாதைக்கு கொண்டு வந்து சேர்க்க பெரும்பாடு பட்டார்கள். சிலரைக் கொலை செய்தல், கடும் வெயிலில் வெற்று மேனியினராகப் போட்டு வதைத்தல், சாட்டையால் அடித்துக் கொடுமைப்படுத்தல் நபி صلى الله عليه وسلم அவர்களையும் அவர்களது குடும்பத்தாரையும் ஒரு பள்ளத்தாக்கில் ஊர் ஒதுக்கி வைத்தல், இப்படி அந்தப் புரோகிதரர்களால் முடிந்த அத்தனைத் துன்பங்களையும் கொடுத்து சித்திரவதை செய்தனர். சில முஸ்லிம்களும் இந்தத் துன்பங்களால் ஓய்ந்துபோய் அல்குர்ஆனை செயல்படுத்துவது சாத்தியமில்லை என்று பின்வாங்கி இருப்பார்களானால் இன்று நாமெல்லாம் முஸ்லிமாக இருக்க முடியுமா? அல்குர்ஆன் வசனம் 5:67 என்ன கூறுகிறது?

தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்; (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நிறவேற்றியவராக மாட்டீர்; அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்; நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். (5:67)

இந்த இறைக்கட்டளையில் அல்லாஹ்வால் இறக்கப்பட்டதை அப்படியே மக்களிடம் எடுத்து வைத்துவிட வேண்டும். அதனால் மக்கள் துன்பம் இழைக்க முற்பட்டால் அல்லாஹ் உம்மை காப்பாற்றப் போதுமானவன். எனவே நபி صلى الله عليه وسلم அவர்கள் இந்த இறைக்கட்டளைகளை உணர்ந்து சத்திய பிரச்சாரத்தில் சிறிதும் கூடுதல், குறைவு செய்யாமல் நிறைவாகவே நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களும் நபித்தோழர்களும் துன்பங்களின் எல்லைக்கே போய் இறைவனிடம் முறையிடும் அளவிற்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள்.. சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

இத்தனை சோதனைகளுக்கும் உட்பட்டு நபி صلى الله عليه وسلم அவர்கள் அயராது, சளிக்காது அல்குர்ஆனை மக்கள் மன்றத்தில் தொடர்ந்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள். அல்குர்ஆன் நடைமுறை சாத்தியமில்லை என்று சொந்த யூகங்ளைப் புகுத்த முற்படவில்லை. அதன் இறுதி முடிவு பல பிரிவினர்களாகப் பிரிந்து வீழ்ச்சியின் அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடந்தவர்கள், ஒன்றுபட்டு ஒரே சமுதாயமாகி அகில உலகிற்கும் வழிகாட்டிகளாக, முனோடிகளாக இமயமலை உச்சிக்கே உயர்ந்தார்கள்.
 

{ 7 comments… read them below or add one }

hafsa October 19, 2010 at 4:52 am

\இப்ராஹீம் (அலை) அவர்களின் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களிலிருந்து இறுதி நபி صلى الله عليه وسلم அவர்களது காலம் வரை சுமார் 3500 ஆண்டுகால வரலாற்றின் இடையில் அரபுகளிடம் ஒரு நபியும் வரவில்லை//

allah entha oru samu thayathirkum ner valihattiyai anupamal illainu solli irukan. innum allah than thirumarail koori ullan “avarhal iraiva engaluku oru ner vali katti anupi iruka vendama naagal ner vali
petrirupome” endru kooramal irupatharkaha avarhaluku ner vali kati anupiullom.
so neega ivvaru eluthi irupathu thavaru enru solren 3500 years entha nabium varavillai endru entha aatharathin padi eluthi ulleerhal.

Reply

ReadIslam.net October 19, 2010 at 7:16 pm

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
இப்ராஹீம் (அலை) அவர்களின் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களிலிருந்து இறுதி நபி(ஸல்) அவர்களது காலம் வரை சுமார் 3500 ஆண்டுகால வரலாற்றின் இடையில் அரபுகளிடம் ஒரு நபியும் வரவில்லை என்பது சரிதான். அதே வேளையில் மற்ற சமூகத்திடம் தொடர்ந்து பல இறைத்தூதர்கள் தோன்றிகொண்டே இருந்தார்கள். ஆனால் அரேபிய சமுகத்திடம் இஸ்மாயீல் (அலை) அவர்களுக்குப்பிறகு நபி(ஸல்) அவர்களுக்கிடையில் எந்த நபியும் தோன்றவில்லை என்பது வரலாற்று தகவல் அடிப்படையில் சரிதான்.

Reply

mohamed naina July 23, 2011 at 2:51 am

allah unkaluku arul purevanaca

Reply

Ashraf ali March 17, 2013 at 4:39 pm

ASSALAMU ALAIKUM
quranil koorapatirukum nabimaragalin varalarai ungal sitil thelivaga podumaru virivaga podumaru anbudan ketu kolgirean jazakallau hair

Reply

Rahman khan March 28, 2013 at 6:41 pm

Assalamu alaikum.. Quranil ulla marundukal patri vilakkavum

Reply

sharmila November 28, 2015 at 12:14 am

uyirkalai yellam padaithathu Allah yenral.Allah eppadi vanthan.idharku sariyana explain please..

Reply

A.Abdulrajak October 21, 2017 at 11:58 am

7418. இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்கள் அருகில் இருந்தேன். அப்போது பனூதமீம் குலத்தாரில் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். (அவர்களிடம்) நபி(ஸல்) அவர்கள், ‘நற்செய்தியை ஏற்றுக்கொள்ளுங்கள், பனூதமீம் குலத்தாரே!’ என்றார்கள். அதற்கு அவர்கள், ‘எங்களுக்கு நற்செய்தி சொன்னீர்கள். (அது இருக்கட்டும்! தர்மம்) கொடுங்கள்’ என்று கூறினார்கள்: அப்போது யமன் நாட்டு மக்கள் சிலர் (-அஷ்அரீ குலத்தார்) வந்தனர். நபி(ஸல்) அவர்கள், ‘யமன் வாசிகளே! நீங்கள் நற்செய்தியை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், பனூதமீம் குலத்தார் அதை ஏற்கவில்லை’ என்றார்கள். அதற்கு அவர்கள், ‘நாங்கள் (அதை) ஏற்றுக் கொண்டோம்; மார்க்கக் கல்வி கற்பதற்காகவும், இந்த உலகம் உண்டானதன் ஆரம்ப நிலை குறித்துத் தங்களிடம் கேட்பதற்காகவுமே நாங்கள் தங்களிடம் வந்தோம்’ என்று கூறினார்கள்:
நபி(ஸல்) அவர்கள், ‘(ஆதியில்) அல்லாஹ் மட்டுமே இருந்தான் . அவனுக்கு முன் எந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனுடைய அரியாசனம் (அர்ஷ்) தண்ணீரின் மீது இருந்தது. பின்னர் வானங்கள் மற்றும் பூமியை அவன் படைத்தான். (லவ்ஹுல் மஹ்ஃபூழ் எனும்) பாதுகாக்கப் பெற்ற பலகையில் (பிரபஞ்சத்தின்) எல்லா விஷயங்களையும் எழுதினான்’ என்றார்கள்.
(அறிவிப்பாளர் கூறுகிறார்:) பின்னர் ஒருவர் என்னிடம் வந்து, ‘இம்ரானே! உங்கள் ஒட்டகத்தை (கண்டு) பிடியுங்கள்; அது (ஓடிப்) போய்விட்டது’ என்று கூற, நான் அதைத் தேட (எழுந்து) சென்றுவிட்டேன். சென்று பார்த்தால் ஒட்டகத்தைக் காண முடியாதபடி கானல் நீர் தடுத்துவிட்டது. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அது போனால் போகட்டும் என்று கருதி, (ஹதீஸ் முடிவதற்கு முன்) நான் அங்கிருந்து எழுந்து செல்லாமல் இருந்திருக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன்.57
Volume :7 Book :97

அப்துல்ரஜாக் ஆகிய நான் புரிந்து கொண்டது என்னவென்றால் அல்லாஹ் ஒரு தான்தோன்றி .அவன் இருக்குமிடம் அர்ஷ் என்ற இடமாகும் .

7:54. நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் – அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு – ஆட்சிக்குக் – கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.

10:3. நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே; அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் – பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்; (இவை சம்பந்தப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனிடம்) பரிந்து பேசுபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன், ஆகவே அவனையே வணங்குங்கள்; (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?

11:7. மேலும், அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் அவனுடைய அர்ஷு நீரின் மேல் இருந்தது. உங்களில் யார் அமலில் (செய்கையில்) மேலானவர் என்பதைச் சோதிக்கும் பொருட்டு (இவற்றைப் படைத்தான்; இன்னும் நபியே! அவர்களிடம்) “நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்” என்று நீர் கூறினால், (அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள்) காஃபிர்கள், “இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை” என்று நிச்சயமாகக் கூறுவார்க

13:2. (இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான்; நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள்; பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான்; இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; (இவை) அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான் – நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன் (இவ்வாறு தன்) வசனங்களை விளக்குகின்றான்.

17:42. (நபியே!) நீர் சொல்வீராக: அவர்கள் கூறுவதுபோல் அவனுடன் வேறு தெய்வங்கள் இருந்தால், அப்போது அவை அர்ஷுடையவன் (அல்லாஹ் தஆலாவின்) அளவில் ஒரு வழியைத் தேடிக்கண்டு பிடித்துச் (சென்று) இருக்கும் என்று.

20:5. அர்ரஹ்மான் அர்ஷின் மீது அமைந்தான்.

21:22. (வான், பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும், அர்ஷுடைய இறைவனாம் அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய) தன்மைகளிலிருந்து மிகவும் தூய்மையானவன்.

23:86. “ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்?” என்றும் கேட்பீராக.

23:116. ஆகவே, உண்மையில் அரசனான அல்லாஹ், மிக உயர்ந்தவன்; அவனைத் தவிர நாயனில்லை. கண்ணியமிக்க அர்ஷின் இறைவன் அவனே!

25:59. அவனே வானங்களையும், பூமியையும், அவற்றிற்கிடையிலுள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர் அவன் அர்ஷின் மீது அமைந்தான்; (அவன் தான் அருள் மிக்க) அர்ரஹ்மான்; ஆகவே, அறிந்தவர்களிடம் அவனைப் பற்றிக் கேட்பீராக.

27:26. “அல்லாஹ் – அவனையன்றி வணக்கத்திற்குரிய நாயன் (வேறு) இல்லை. (அவன்) மகத்தான அர்ஷுக்கு உரிய இறைவன்” (என்று ஹுது ஹுது கூறிற்று).

32:4. அல்லாஹ் தான் வானங்களையும், பூமியையும், இவ்விரண்டிற்கும் இடையிலிருப்பவற்றையும் ஆறு நாட்களில் படைத்துப்பின் அர்ஷின் மீது அமைந்தான்; அவனையன்றி உங்களுக்கு உதவியாளரோ, பரிந்து பேசுபவரோ இல்லை. எனவே (இவற்றையெல்லாம்) நீங்கள் (நினைத்து) சிந்திக்க வேண்டாமா?

9:75. இன்னும், மலக்குகள் தங்கள் இறைவனைப் புகழ்ந்து தஸ்பீஹு செய்த வண்ணம் அர்ஷை சூழந்து நிற்பதை நீர் காண்பீர்; அப்பொழுது, அவர்களுக்கிடையே சத்தியத்தை கொண்டு தீர்ப்பளிக்கப்படும். “அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்று (யாவராலும்) கூறப்படும்.

40:7. அர்ஷை சுமந்து கொண்டிருப்பவர்களும், அதைச் சுற்றியுள்ளவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் தஸ்பீஹு செய்து கொண்டும் இருக்கிறார்கள்; அவன் மேல் ஈமான் கொண்டவர்களாக மற்ற ஈமான் கொண்டவர்களுக்காக மன்னிப்புக் கோருகின்றனர்: “எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி, உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!

40:15. (அவனே) அந்தஸ்துகளை உயர்த்துபவன்; அர்ஷுக்குரியவன்; சந்திப்புக்குரிய (இறுதி) நாளைப்பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக தன் அடியார்களில் தான் நாடியவர்கள் மீது தன் கட்டளையை வஹீ மூலம் இறக்கி வைக்கிறான்.

43:82. வானங்களுக்கும் பூமிக்கும் இறைவன்; அர்ஷுக்கும் இறைவன். (அத்தகைய இறைவன் அவனுக்கு சந்ததி உண்டென்று) அவர்கள் வர்ணிப்பதை விட்டும் மகா பரிசுத்தமானவன்.

57:4. அவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும்; வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான்; நீங்கள் எங்கிருந்து போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் – அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்.

69:17. இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள்; அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள்.

81:20. (அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர்.

85:15. (அவனே) அர்ஷுக்குடையவன்; பெருந்தன்மை மிக்கவன்.

Reply

Cancel reply

Leave a Comment

Previous post:

Next post: