மஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம்

Post image for மஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம்

in பிரிவும் பிளவும்

மஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம் என நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் எச்சரிப்பதைக் கண்டு கொள்ளாமல் தங்கள் தங்கள் சுய பெயர்களில் பதிவு செய்து ஆதிக்கம் செய்கின்றனர். அல்லாஹ்வின் தெளிவான இந்தக் கட்டளையைப் புறக்கணித்து ஒவ்வொரு பிரிவாரும் அல்லாஹ்வின் பள்ளிகளைக் கூறுபோட்டுள்ளனர். மற்றவர்களின் சொத்துக்களைப் போலிப் பத்திரங்கள் தயாரித்து தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் படுகிறபாடுகளை இப்போது ஊடகங்களில் பார்த்து வருகிறோம் அல்லவா? இங்கு கூட தங்களின் பண பலம் அரசியல் செல்வாக்குக் கொண்டு தண்டனையிலிருந்து சிலர் தப்பி விடலாம்.

ஆனால் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான பள்ளிகளை போலிப் பத்திரங்கள் மூலம் ஆதிக்கம் செய்து, அட்டூழியம் செய்கிறவர்கள் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் தப்ப முடியுமா? ஒருபோதும் தப்ப முடியாது. அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான பள்ளிகளை இந்த அறிவீனர்கள் கூறு போட்டு ஆதிக்கம் செலுத்தி வருவது உண்மை தான். ஆயினும் நேர்வழி நடக்கும் முஸ்லிம்களின் கடமை என்ன? இதற்கு நபி(ஸல்) அவர் கள் 33:21 கூறுவது போல் வழிகாட்டவில்லையா? நிச்சயம் வழிகாட்டி இருக்கிறார்கள். அல்லாஹ்வின் வீடான கஃபதுல்லாஹ் முஷ்ரிக்குகளிலும் மிகக் கொடிய முஷ்ரிக்குகளான தாருந்நத்வா மதகுருமார்கள் கையில் சிக்கி இருந்தது. அங்கு எண்ணற்ற சிலைகளும், சமாதிகளும் நிறைந்து காணப்பட்டன.

இந்த நிலையிலும் நபி(ஸல்) அங்கு சென்று தான் அல்லாஹ்வைத் தொழுதார்கள். அப்போது அந்த தாருந்நத்வா குருகுல மடத்தின் தலைமை இமாமாகவும் அந்த மக்களால் அபுல் ஹிக்கம்-ஞானத்தின் தந்தை எனப் போற்றப்பட்ட, நபி(ஸல்) அவர்களால் அபூ ஜஹீல்- மடமையின் தந்தை என அடையாளம் காட்டப்பட்டவனும், இந்த அபூ ஜஹீலின் தோழர்களும் நபி(ஸல்) கஃபாவில் அல்லாஹ்வைத் தொழும்போது பெரும் துன்பங்களைக் கொடுத்தார்கள்.

ஒரு சமயம் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ் தொழுது கொண்டிருக்கும்போது அவர்கள் மீது அழுகிய ஒட்டகக் குடலை அபூ ஜஹீல் வகையறாக்கள் போட்டதால் நபி(ஸல்) மூச்சுத் திணறி பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். அந்த காஃபிர்களோ கைகொட்டிச் சிரித்து மகிழ்ந்தார்கள் என்ற வரலாற்றைப் பார்க்கிறோம்.

இதிலிருந்து நாம் பெறும் படிப்பினை என்ன? கஃபதுல்லாஹ் எண்ணற்ற சிலைகளைக் கொண்டும், சமாதிகளைக் கொண்டும் நிரப்பப் பட்டிருந்தாலும் அது அல்லாஹ்வின் வீடு என்பதில் எவ்வித மாற்றமும் பெறவில்லை. அதனால் தான் நபி(ஸல்) அங்கு சென்று மிகமிக ஆபத்தான, துன்புறுத்தல்கள் நிறைந்த நிலையிலும் அல்லாஹ்வைத் தொழுது தமது உம்மத்திற்கு வழி காட்டி இருக்கிறார்கள். சிலைகளும், சமாதிகளும் இருக்கும் நிலையிலேயே மதீனாவிலிருந்து கஃபாவை நோக்கியே தொழுதார்கள். இது இறைவனின் கட்டளையாகும்.

அதேபோல் அல்லாஹ்வின் பள்ளிகளைக் கூறு போட்டு அவரவர்கள் பெயர்களில் பதிவு செய்து பித்அத், குஃப்ர், ´ஷிர்க் போன்ற அட்டூழியங்களை நடைமுறைப்படுத்தி வந்தாலும் அவை அல்லாஹ்வின் பள்ளிகள் என்ற நிலையிலிருந்து மாறப் போவதில்லை.

எனவே நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த அழகிய முறைப்படி நேர்வழி நடக்க விரும்பும் முஸ்லிம்கள் அப்பள்ளிகளில் சென்று அல்லாஹ்வைத் தொழுவதே சமுதாய ஒற்றுமைக்கு வழி வகுக்கும். அவர்கள் எவ்வளவு பெரிய ´ஷிர்க், பித்அத்களில் மூழ்கி இருந்தாலும், அடிப்படை விஷயங்களில் தொழுகையில் நபி(ஸல்) காட்டித் தந்ததையே பின்பற்றுகின்றனர். ஐங்கால தொழுகைகளில், ரகாஅத்களில், ருகூஃ, சுஜூதுகளில், இருப்பில் நபி(ஸல்) காட்டித் தந்தபடிதான் செய்கின்றனர். 39:17,18 இறைக் கட்ட ளைகள்படி அவர்கள் செய்யும் இந்த அழகானவற்றில் நேர்வழி நடக்க விரும்பும் முஸ்லிம்கள் பின்பற்றுவதில் குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்ட செயல் ஒன்றுமில்லை.

ஒருவருடைய சுமையைப் பிரிதொருவர் சுமக்க மாட்டார் என்று குர்ஆன் 6:164, 17:15, 35:18, 39:7, 53:38 போன்ற பல இடங்களில் அல்லாஹ் நேரடியாகக் கூறியுள்ளான். தொழவைக்கும் இமாமின் பித்அத், குஃப்ர், ´ஷிர்க் காரணமாக அவரின் தொழுகை அவரது முகத்தில் எறியப்பட்டாலும், அவர் பின்னால் தொழும் நேர்வழி நடக்கும் முஸ்லிம்களின் தொழுகையில் அணுவளவு கூட குறைவு செய்ய மாட்டான் அல்லாஹ்.

அவர்கள் பின்னால் நின்று தொழக்கூடாது என்று சட்டம் சொல்லும் மதகுருமார்கள் 9:31, 42:21, 49:16 வசனங்களின் வழிகாட்டல்படி தர்கா, மத்ஹபினரை விட கொடிய ´ஷிர்க் செய்கிறவர்களாகவே இருக்கிறார்கள். காரணம் முன்னவர்கள் அல்லாஹ்வுக்கும் தங்களுக்குமிடையில் முன் சென்ற இமாம்கள், வலிமார்கள் போன்றோரை வசீலாவாக-இடைத்தரகர்களாக மட்டுமே ஆக்குகிறார்கள்.

இவர்களோ அல்லாஹ் விதிக்காத சட்டங்களை விதித்து 42:21 வசனப்படி அல்லாஹ்வுக்கே இணையாளர்களாக ஆகிறார்கள். 21:92, 23:52 இறைக் கட்டளைக்கு முரணாகச் சமுதாயத்தைப் பிளவுபடுத்துகிறார்கள். தீர்ப்பை மறுமைக்கென்று அல்லாஹ் ஒத்தி வைத்திருக்காவிட்டால் இங்கே அவர்களுக்கு மிகக் கடுமையான தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கும்; தீர்ப்பு மறுமையில் என்றிருப்பதால் இவ்வுலகில் அவர்கள் விருப்பப்படி 9:34 வசனம் கூறுவது போல் மக்கள் சொத்துக்களைத் தவறான முறைகளில் சாப்பிடுகிறார்கள். 49:16 வசனத்தில் அல்லாஹ் கூறுவது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க முற்படுகிறார்கள்.

குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என வாய் கிழியப் பேசும் இவர்கள் குர்ஆன், ஹதீஸ்படி நடப்பதில்லை என்பதே உண்மை. ஈமானுக்கு அடுத்து அடிப்படையான ஐங்காலத் தொழுகைகளையே உள்ளச்சத்தோடு, பேணுதலோடு அன்றாடம் தவறாமல் ஜமாஅத் தோடு சேர்ந்து தொழாத இவர்கள் வேறு எந்த மார்க்க விஷயங்களில் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றப் போகிறார்கள்?

அல்லாஹ்வுக்குச் சொந்தமான பள்ளிகளை 18:28, 20:16, 25:43, 28:50, 38:26, 45:23, 79:40,41 இத்தனை இறைவாக்குகளில் மனோ இச்சைப் பற்றி எச்சரித்திருந்தும் அவற்றைக் கண்டு கொள்ளாமல் நிராகரித்து விட்டு தங்கள் மனோ இச்சை சரிகாணும் பெயர்களில் பத்திரப் பதிவு செய்து அபகரித்துக் கொண்டாலும் அவை அல்லாஹ்வின் பள்ளிகள்தான். இது அன்று குறைஷ் குஃப்பார்கள் அல்லாஹ்வின் வீடான கஃபதுல்லாஹ்வை அபகரித்து வைத்திருந்த செயலுக்கு ஒப்பானதாகும்.

{ 9 comments… read them below or add one }

A.B. Ahamed September 18, 2011 at 12:35 pm

இந்த கட்டுரையை படிப்பதற்கு சில நாட்களுக்கு முன் ஒரு வீடியோ காட்சியை பார்க்க நேரிட்டது.மரியாதைக்குரிய சகோதரர் அல்தாபி அவர்கள் திருச்சி பாலக்கரை பள்ளி சம்பந்தமாக பேசிய உரை அது. தத்தமது கொள்கையை கட்டிக் காக்க தனிப் பள்ளி அவசியமே என வலியுறுத்துகிறார். ஒரு கோணத்தில் சரி என்று கூட தோன்றியது. பெரும்பாலும் அங்கிருந்த பல நூறு பேர் தனிப் பள்ளிக்காக எப்படிப்பட்ட தியாகத்தையும் போராட்டத்தயும் செய்யும் மன நிலையை அவரின் பேச்சு ஊட்டுகிறது. அவர்கள் அனைவரும் இந்த கட்டுரையை படித்தால் அவர்களின் நிலைப்பாடு மாறும் என துஆ செய்கிறேன். பிறகுதான் சமுதாயம் ஒற்றுமையாக மலரும் எனும் ஆசையையும் இங்கே பதிவு செய்கிறேன்.
அன்புடன்
அ. ப. அகமது

Reply

Mohamed Yousuf Anas September 19, 2011 at 5:50 pm

Alhamdhulillah, fantastic explanation.

Reply

afnura October 6, 2011 at 11:28 pm

கட்டுறையாளா்ஆக்கத்தைவிடதனிநபா்காழ்புனா்ச்சியைகொட்டிதீா்க்கிறார் மறைமுகமாகமீன்டும்
மீன்டும்ஆலிம்ஜமாத்களின்ஆளுமையின்கீழ்அடங்கிஒடுங்கிகுரான்ஹதீஸூக்குமாற்றமானமுறையில்
நடப்பவா்பின்னால்தொழசொல்கிறார்இவர்வேன்டும்என்றால்தொமுகையைநடைமுறைபடுத்தட்டும்
அதற்காகஇவா்உள்ளங்களில்ஊடுறுவிபார்ததவா்போல்உள்ளச்சத்தோடுதொழவில்லைஎன்கிறார்
அல்லாஹ்தானேஉள்ளங்களில்உள்ளவற்றைஅறிபவன்அந்தபண்பைஎப்படிதனதாக்கிகொண்டார்ஐங்கால
தொழுகையைதினமும்தொடா்ந்துதொழவில்லைஎன்கிறார்அப்படிஎன்றால்இவருக்குஎன்னஅடுத்தவா்களை
நோட்டமிடுவதுதான்வேலையாஒற்றுமைபேசும்உங்களால்நீங்கள்எந்தெந்தவிசயங்களில்ஒற்றுமையை
கடைபிடிக்கீறீா்கள் பட்டியளிடுங்கள்நாங்கள்தெளிவடையஏதுவாகஇருக்கும்.

Reply

kaleel October 12, 2011 at 2:16 pm

ஒற்றுமை கோஷம் என்பது இஸ்லாமிய சமுதாயத்தில் எப்போதாவது தோன்றிமறையும் வானவில் போன்ற சம்பவமாக இருந்து வருகிறது.வர்ணஜாலத்துடன் காட்சியளிக்கும் வானவில் கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியான ஆனந்தத்தைத் தந்துவிட்டு கொஞ்ச நேரத்திலேயே மறைந்து போய் விடும்.

அதுமாதிரி இஸ்லாமிய இயக்கங்கள் எனப்படுபவைகள் திடீரென்று ஒன்றுகூடி ஒரே தட்டில் சாப்பிட்டு விட்டு பொன்னாடையையும், புகழாரத்தையும் ஒருவருக்கொருவர் போர்த்திவிட்டு மக்களின் கண்ணுக்கும் மனதுக்கும் சற்றே இதமளித்து விட்டு காணாமல் போய் விடுகின்றன…வரதட்சனை வாங்கும் திருமணங்களில் கலந்து கொண்டு அதனையே பள்ளிவாசல்களில் நடத்தி வைத்து அல்லாஹ்வும் ரஸூலும் கேலி செய்யப்பட்டாலும் பரவாயில்லை நாங்கள் ஒற்றுமை விரும்பிகள் என அவர்களுடன் இணைந்து சாப்பிட்டு ஒன்றாக கலந்து விடுகின்றனர்.மார்க்கத்தை விட்டு வெளியே செல்லும் அளவுக்கு தீமைகளை செய்தாலும் பரவாயில்லை. அந்த தவறை சுட்டிக்காட்டினால் ஒற்றுமை போய்விடும் என அவர்களைஆதரிப்பதைப்பார்க்கின்றோம்.இதைதான் சமுதாய ஒற்றுமை என்கிறாரோ
இவா் இது போலி ஒற்றுமை அல்லவா சிந்திப்பீா் சகோதரா்களே

Reply

Ibn Ismail October 12, 2011 at 10:55 pm

மாமியார் உடைத்தால் மண்குடம். மருமகள் உடைத்தால் பொன்குடமா? சிறிய விஷயங்களையும் விட்டுவிடாமல் மற்றவர்களிடம் ஆதாரம் கேட்கும் நாம் – அமைப்புகள், இயக்கங்கள், மையங்கள், சங்கங்கள், மன்றங்கள், பேரவைகள், அசோசியேஷன்கள் ஐம்யியத்துக்கள்…..இத்யாதி….இத்யாதி…..அமைத்து செயல்படுகிறோமே…..அதில் பெருமிதப்பட்டுக் கொள்கிறோமே…..

நாம் இப்படி செய்வதெற்கெல்லாம்….இறை வேதத்திலோ, இறைத்தூதர் வழிகாட்டுதல்களிலோ ஆதாரம் தேடியதுண்டா? அல்லது நம்மில் யாரெல்லாம் இதை ஆதரிக்கிறார்களோ அவர்களிடமாவது இதற்குரிய ஆதாரங்களைத் தருமாறு கேட்டதுண்டா?

Reply

MASCO Sarbudeen February 11, 2012 at 9:58 pm

இந்த கட்டுரை ஒருதலை பட்சமாக இருக்கிறது. ஒருவர் ஒரு செயலை செய்கிறார் என்றால் அதற்க்கு முன் பின் இருக்கும் நிலைமை என்ன என்று விளங்க வேண்டும். தனிப்பள்ளி வேண்டும் என்று யாரும் ஆரம்ப காலத்தில் சொல்லவில்லை. ஆனால் நபிவழி தொழுகை புறக்கணிப்பு செய்த காரணத்தால் தான் தனிப்பள்ளி வேண்டும் என்ற நிலைக்கு தவ்ஹீத் வாதிகள் தள்ளப்பட்டனர். உதாரணம்: தவ்ஹீதின் ஆரம்ப கட்டத்தில் நான் துபாயில் இருந்தேன் அங்கெ பள்ளிவாசலுக்கு யாரும் தொப்பி போட்டுதான் தோழனும் என்று சொன்னது கிடையாது மேலும் சூரத்துல் பாதிஹாக்கு பின்பு ஆமின் எல்லோரும் சொல்வார்கள் இந்த ஆமீன் கூட ஹதீஸ் என்று எனக்கு தெரியாது எல்லோரும் சொல்வார்கள் நானும் சொல்வேன். இந்த பழக்கம் நான் இந்திய சென்ற பொது என் ஊரு பள்ளிவாசலில்ஆமீன் சொன்னேன். இந்த ஒரு காரணத்துக்காக தொழுது கொண்டு இருக்கும் நிலையில் என்னை சட்டையை பிடித்து வெளியில் தள்ளினார் ஒரு இமாம். ஊர் மக்கள் எல்லோரும் வேடிக்கை பார்த்தனர். எனக்கு, ஏன் இவர் இப்படி செய்தார் என்பது எனக்கு தெரியாது ஆனால் அவர் கொடுத்த விளக்கம் ஆமீன் சொன்னால் எனக்கு தொழுகைக்கு இடையுறாக இருக்கிறது என்று இதற்க்கு ஜமாதார்களும் ஏதும் சொல்லவில்லை. பின்புதான் ஹதீஸை வாங்கி படித்தேன் அதில் தான் இருக்கிறது ஆமீன் கூற வேண்டும் என்று. இப்படி இமாம்களே குரானையும் ஹதீசையும் விளங்காமல் இருக்கும் பொது மக்களை குறை சொல்ல முடியாது. வெள்ளிக்கிழமை தொழுகை நடக்கிறது இமாம் என்ன சொல்கிறார் என்று எத்தனை பேருக்கு தெரியும் அவர் குத்பா சொல்வார் ஜமாத்தார்கள் தூங்கிக்கொண்டு இருப்பார்கள் இதுதான் இவர்கள் சொல்லும் குத்பா.மார்க்கம் தெரிந்தவர்கள் மக்களை சரியான பாதையில் கொண்டு செல்ல வில்லை என்றால் இப்படிதான் நடக்கும் வீட்டில் கூட்டாக சமைத்து சாப்பிட சம்மதிக்க வில்லை என்றால் தனியாக சமைத்து சாப்பிட வேண்டும் இதில் என்ன தப்பு இருக்கிறது இவர்களுக்காக பயந்து பட்டினிகிடக்க முடியுமா என்ன. எங்கள் பள்ளிக்கு நீங்கள் வரகூடாது என்று போர்டு போட்டுவைத்தால் போர்டு போட்டவர் மட்டும் தான் தொழுகை செய்ய முடியும் பள்ளிவாசல்கள் அல்லாஹுக்கே சொந்தம் என்றால் இந்த ஜமாத்தார்கள் ஏன் குறுக்கே நிற்கிறார்கள். தொழுகை என்பது இபாதத் எது சரி எது சரி இல்லை என்று முடிவு கட்ட வேண்டியது ஹதீஸை பார்த்துதான். மக்களை பார்த்து அல்ல எல்லா மக்களுக்கும் ஹதீஸ் ஞானம் கிடையாது.

Reply

ரஹ்மத்துல்லாஹ் March 13, 2012 at 3:24 am

உங்களுக்கு நிகழ்ந்தது போல் பல சகோதரர்களுக்கும் நடந்து உள்ளது. இவர்கள் ,புரோகிதர்கள் (சமஸ்கிரிதத்தில்) மந்திரம் சொல்வது போல் குரானை(அரபியில்) ஓதுவார்களே தவிர; அவர்களுக்கு அதன் அர்த்தம் தெரியாது. தெரிந்தாலும் தன் வீம்பின் காரணமாக தன்னை திருத்திக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் வீம்பாக இருப்பது மனிதர்களிடத்தில் என நினைக்கிறார்கள் ;நிச்சயமாக இல்லை… அவர்கள் வீம்பாக இருப்பது அல்லாஹ்விடத்தில்… இது எல்லா ஜமாத், தவ்ஹீத் மற்றும் அனைத்து இயக்கங்களுக்கும் போதுவே. இஸ்லாத்தை கற்றுத்தர வேண்டியவர்களே கடைந்தெடுத்த போலியாய் இருக்கும் போது;இஸ்லாத்தின் மேல் பற்றுக்கொண்டவர்களுக்கு பாதுகாப்பு குரானும், ஹதீஸும் தவிர வேறில்லை…

வஸலாம்.

Reply

Yaseen September 22, 2015 at 5:12 pm

பள்ளிகளில் தவ்ஹீத் பள்ளி என்று தனியாக பள்ளிகள் இல்லை அனைத்துப் பள்ளிகளும் தவ்ஹீத் பள்ளிகள்தான். மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தம் என்பதி்ல் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லைதான். அல்லாஹ்வை மட்டும் நினைவு கூர்ந்து அவனை மட்டும் வணங்கவேண்டிய மஸ்ஜிதுகளில் இஸ்லாமில் இல்லாத நடைமுறைகள் (மவ்லிது) போன்றவை செய்யும்போது அல்லாஹ்வை மட்டுமே வணங்குபவர்களுக்கு தர்மசங்கடமாய் உள்ளது. இதற்கு அப்படி செய்பவர்களே பொறுப்பு
எனவே தனித்தனியாக அல்லாமல் அனைத்துப் பள்ளிகளும் இறைவனின் பள்ளியாக மட்டுமே அமைவதற்கு நாம் அனைவரும்
இறைவனிடம் துவா செய்வோம். நாம் ஒவ்வொருவரும் இதில் பங்கெடுக்க வேண்டும். எந்தவொரு சமுதாயமும் தங்களை மாற்றிக்கொள்ளாதவரை அல்லாஹ்வும் அதை மாற்றமாட்டான்.

Reply

A.Abdulrajak May 16, 2017 at 6:05 am

,என்னுடைய மார்க்கம் (religion ) இஸ்லாம், முஸ்லீம் ஜமாஅத் , நாம் எல்லாம் முஸ்லிம்கள் என சொல்லாத வரை இவர்கள் பிரிவினை வாதிகள் தான் . அது சுன்னத் ஜமாஅத், சியா , ஜாக் , டவ்ஹீத் ஜமாஅத், இன்னும் பிற எந்த ஜமாஅத்தாக இருந்தாலும் எல்லோரும் மக்களை பிரித்த குழப்ப வாதிகள் தான் . 73 பிரிவுகள் வரும். அதை யாராலும் தடுக்க முடியாது . ஆனால் நம்மால் இயன்ற அளவு அவர்கள் மாய வலையில் விழாமல் இருக்க அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவூம் .

Reply

Leave a Comment

Previous post:

Next post: