பிளவுகளும் பிரிவுகளும் தொடரக் காரணம் என்ன ?

Post image for பிளவுகளும் பிரிவுகளும் தொடரக் காரணம் என்ன ?

in பிரிவும் பிளவும்

புதிது புதிதாக இயக்கங்கள் தோன்றுவதை நம்மில்   யாரும் விரும்புவது இல்லை! ஆனால்  அதற்கான அடிப்படைக் காரணத்தை உணர்ந்ததாக தெரியவில்லை ! காரணங்களை கண்டறிந்து களையாமல் காரியங்களைத் தடுக்க முடியாது !

காரணம் என்ன ?
தான் உருவாக்கிய முன்மாதிரி முஸ்லிம் ஜமாத்தில் அனைத்து அதிகாரங்களையும் கொண்ட அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தெளிவாகத் தெரிந்த நயவஞ்ச்கர்களைக் கூட  ஜமாத்தில் இருந்து நீக்கி வைக்கவில்லை ! அப்துல்லாஹ் இப்னு உபை ஒரு போர் சமயத்தில் பாதிப்பேரை  அழைத்துக் கொண்டு திரும்பிய மாபெரும் துரோகத்தை செய்தபோது கூட அவனை மரணிக்கும் வரை  ஜமாத்தை விட்டு விலக்கவில்லை ! ஆனால் அற்பக் காரணாங்களுக்காக பல ஆண்டுகளாய் சமுதாயப் பணியாற்றியவர்களை விலக்கி வைக்கிறோம் !
பலவருடங்கள் ஒரு இயக்கத்தில் இருந்து  சமுதாயப் பணியாற்றிய  ஒருவரை  நீக்கும்  போது அவர் தனி நபராக இருந்தால் இன்னொரு இயக்கத்தில் சேர்ந்து  பணியாற்றுவார்! அவரோடு  சேர்ந்து அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டால் ஒரு  இயக்கம் கட்டமைப்பதுதான் எதார்த்தம் !

ஒரு தந்தை தன மகனை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டால் அல்லது மகன் கருத்து வேறுபாட்டால் வெளியேறி விட்டால்  அவர் ஏதேனும் தனி வீடு எடுப்பதும், அல்லது சொந்த பந்தங்கள் நண்பர்கள் வீட்டில் தஞ்சம் புகுவதும் இயல்பான ஒன்றுதான் !

மேலும் ஆயிரம் காரணங்களைச் சொன்னாலும் அல்லாஹ் கூறும் காரணம்தான் உண்மையாக இருக்கும்!

வேதம் கொடுக்கப்பட்ட பின்னரும் தங்களுக்குள் ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே பிரிந்து நின்றனர் ! [42:14]

எல்லாக் காலங்களிலும் இது தலைமைப் பதவியில் இருப்போருக்கும் அடுத்த கட்டத் தலைமைக்கும் மத்தியில்தான் இந்தப் பிரிவினைகள்  நிகழ்கிறது! இதைப் பார்க்கும் போது  தலைவர்களுக்கு மத்தியில் இருக்கும் பொறாமையின் காரணமாகவே இத்தனை இயக்கங்கள் பிறந்ததே அன்றி  வேறில்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம் !

அதற்கான காரணம் தனது பதவியைத் தக்கவைப்பதற்கு அல்லது தலைமைப்  பதவியைக் கைப்பற்றுவது  எனும் காரணங்களை தவிர வேறில்லை !
ஆதமுடைய மகன் அருந்தும் பால்களிலேயே மிக மோசமான பால் !
பதவி ஆசை என்பது பசியுள்ள ஓநாய் ஆட்டு மந்தைக்குள் நுழைவதற்கு ஒப்பானது !
யார் பதவியை விரும்புகிறாரோ அதை  கொடுக்க வேண்டாம்!
பதவி என்பது அமானிதம் நாளை கேள்விக்குரியது !
எனும் மார்க்க  கட்டளைகளை எல்லாம் புறக்கணிப்பதுதான் இன்றைய பிரிவினைகளுக்குக் காரணம் என நினைக்கிறேன்!

ஆகையால் இந்தக் காரணங்கள் களையப்படாதவரை
இந்தக் காரியங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்!

 

செங்கிஸ்கான்

Leave a Comment

Previous post:

Next post: