இன்றைய நவீன(பித்அத்) ஸலஃபீ – தவ்ஹீத் இயக்கத்திற்கு பெயர் வைத்தது யார்?

in பொதுவானவை

முஸ்லிம் உம்மத்திற்கு அல்லாஹ் இட்ட அழகிய பெயர் “முஸ்லிம்கள்’. இந்த முஸ்லிம்களின் கூட்டமைப்பிற்கு நபி(ஸல்) அவர்கள் வைத்த பெயர் “ஜமாஅத் அல் முஸ்லிமீன்’. இதனை தவிர்த்து வேறு எந்தப் பிரிவுப் பெயர்களையும் அல்லாஹ்வும் அவனது தூதரும் அங்கீகரிக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் ஸஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள் இவர்களுக்குப் பின் சுமார் ஆயிரம் ஆண்டு கால கட்டத்தில் கூட இஸ்லாத்தின் பெயரால் தனி ஜமாஅத் எவரும் ஏற்படுத்தவில்லை. ஆனால் இன்று தவ்ஹீது பேசும் ஆலிம்கள் தங்களை “ஸலஃபிகள்’ என்றும் தவ்ஹீத் வாதிகள் என்றும் கூறி பெருமைப்படுகிறார்கள். ஸலஃபி பெயரால், தவ்ஹீது பெயரால் ஏராளமான இயக்கங்கள் செயல்படுகின்றன.

“நாங்கள் ஸஹாபாக்களை பின்பற்றுகிறோம்; ஆகவே எங்களை “ஸலஃபீ’ என்று அறிவித்துக் கொள்கிறோம்’.. இது சரியான பதில்தானா? சிந்திக்க வேண்டும்! ஒரு முஸ்லிம் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுவதால் தன்னை “முஹம்மதீ’ என்று அழைக்க முடியுமா? ஸஹாபாக்களை பின்பற்றுவதால் தன்னை “அஸ்ஹாபீ’ என்று அழைக்க மார்க்கம் அனுமதிக்கிறதா? நிச்சயம் இல்லை. அந்த ஸஹாபாக்களும் தங்களை “முஸ்லிம்கள்’ என்றே அழைத்தனர். ஸஹாபாக்கள் இருந்த அந்த முஸ்லிம்கள் வட்டத்திற்குள் நாமும் நுழைய விரும்பினால் “முஸ்லிம்கள்’ என்பதை தவிர்த்து வேறு என்ன பெயர் வைத்தாலும் அதில் நுழைய முடியாது. ஸஹாபாக்களைப் பார்த்துத்தான் அல்லாஹ் கூறுகிறான்.

“தானும் நேர்வழியில் நடந்து பிறரையும் நேர்வழியில் அழைத்து தன்னை முஸ்லிம்களில் உள்ளவன் என்று கூறுகிறவனை விட அழகிய சொல் சொல்பவர் யார்?’ ( அல்குர்ஆன் 41:33)

இன்றைய நவீன(பித்அத்) ஸலஃபீ-தவ்ஹீத் இயக்கத்திற்கு பெயர் வைத்தது யார்? சாட்சியாளர் யார்? உதாரணமாக, தமிழகத்தில் 1986ல் ஒன்றுபட்டிருந்த ஒரே முஸ்லிம் ஜமாஅத்தை உடைத்து “அஹ்லே குர்ஆன் வல் ஹதீஸ் (AQH) பின்பு “ஜம்மியத்து அஹ்லே குர்ஆன் வல் ஹதீஸ்’ (JAQH) என்று புது ஜமாஅத்தை நிறுவி பெயரிட்டவர் S.கமாலுத்தீன் மதனீ. இந்த உடைப்பு வேலையில் ஊக்கமுடன் சாட்சியாக இருந்தவர் P. ஜெய்னுலாப்தீன் உலவி.

பின்பு அதையும் உடைத்து மூன்றாவது ஜமாஅத் (TMMK) “தமுமுக’வை கட்டி எழுப்பினார். இதற்கு சாட்சியாக சிலர் இருந்தனர். அண்ணன் PJ அதையும் உடைத்து பங்கு பிரித்துக் கொண்டு நாலாவது ஜமாஅத் நிறுவினார். இதற்கு “தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்’ என்று பெயரிட்டார்.

நிறுவனத்தில் உள்ள பங்குதாரர்களை குறைக்க கணக்குப் போட்டு, PJ யால் “பாலியல் பாக்கர்’ என்று பட்டம் கொடுத்து வெளியேற்றப்பட்டார். பட்டம் வாங்கி வெளியே வந்த பாக்கரும் அண்ணன் வழியில் ஐந்தாவது ஜமாஅத்தை ஏற்படுத்தி விட்டார்.

ஏன் இவர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள்? அல்லாஹ் இட்ட முஸ்லிம்கள் பெயரில் ஏன் இவர்களால் ஒன்றுபட முடியவில்லை. காரணம் வேறு ஒன்றும் இல்லை, இவர்கள் தங்கள் மன இச்சைக்கு அடிமைப்பட்டு விட்டனர். இவர்களுக்கு (7:175ல்) அல்லாஹ் ஒருவனை உதாரணமாக கூறுகிறான். வழிகேட்டில் இருந்தவனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டிய பின்பும் மீண்டும் வழிகேட்டில் சென்றவன்.

சில வருடங்களுக்கு முன் தவ்ஹீது பேசும் மவ்லவிகள் தக்லீதுகளாக இருந்து, கத்தம், பாத்திஹா, கந்தூரி சடங்கு, மெளலூது மீலாது என்று கூலிக்கு கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தனர். அல்லாஹ் இவர்களுக்கு நேர்வழி காட்டினான். ஆனாலும் இவர்கள் தங்கள் மனோ இச்சையை ரப்பாக கருதி, பாம்பு சட்டையை உரிப்பது போல் தக்லீது சட்டையை உரித்து விட்டு, தவ்ஹீது சட்டையை போட்டுக் கொண்டு, கரன்ஸி கலக்க்ஷனில் இறங்கி விட்டனர். ஒன்றுபட்ட உம்மத்தை தொடர்ந்து பிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அன்புச் சகோதரர்களே! சகோதரிகளே! நீங்கள் இப்படி பிரித்துக் காட்டினால் தான் அல்லாஹ்வுக்குத் தெரியும் என்ற நிலையில் அல்லாஹ் இல்லை; அவன் பேரறிவாளன், சத்தியமும், அசத்தியமும் விளங்காத கொள்கை குழப்ப முஸ்லிம்கள் தான் 73 கூட்டமாக பிரிவார்கள். ஒரு கூட்டம் மட்டுமே சுவனம் செல்லும். அந்த ஒரு கூட்டத்தை அல்லாஹ் மட்டுமே தேர்ந்தெடுப்பான். தவ்ஹீது ஆலிம்கள் அல்ல. சுவனம் செல்லும் கூட்டத்தில் நுழைய உங்கள் செயல்கள் முஸ்லிம்கள் என்ற பெயரில் மட்டுமே இருக்க வேண்டும். “முஸ்லிம்களாக’ வாழ்ந்து “முஸ்லிம்களாக’ மரணித்தால் தான் சுவனம்.

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான். (குர்ஆன் 2:208)

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இறை உணர்வு (தக்வா) கொள்ள வேண்டிய முறைப்படி இறை உணர்வு கொள்ளுங்கள். மேலும் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள். இன்னும் நீங்கள் அனைவரும் ஒரே ஜமாஅத்தாக அல்லாஹ்வின் கயிறை (குர்ஆனை) வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். (ஒருபோதும்) நீங்கள் பிரிந்து விடாதீர்கள். (குர்ஆன் 3:102, 103)

S.ஹலரத் அலி, ஜித்தா

{ 1 comment… read it below or add one }

jeseem November 15, 2017 at 11:56 am

dear brother,
assalamu alaikum,

useful article and 200% true. you stated whatever there was in my mind too since long time and i advised to some tawheed jamath and salafis but they are not in a position to understand it. anyhow allah will teach them one day. good work keep it up. allah may bless you always.

Reply

Leave a Comment

Previous post:

Next post: